Link copied!
Sign in / Sign up
2
Shares

ஒரு இதயம், ஒரு தொப்புள் கொடியைக் கொண்டு பிறந்த இரட்டையர்கள்!

உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண்மணிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்; அந்த குழந்தைகள் பிறந்ததில் அங்கிருந்த மருத்துவர்களும், அக்குழந்தையை பெற்று எடுத்த அன்னையும் அளவில்லா ஆச்சரியத்திற்கும் பயத்திற்கும் உள்ளானார்கள். ஏன் தெரியுமா? அந்த இரண்டு குழந்தைகளின் வயிற்று பகுதியும் ஒன்றோடொன்று ஒட்டி இருந்தது.

அக்குழந்தைகள் ஆணா? பெண்ணா? என்பதையே மருத்துவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. குழந்தைகளின் வயிற்றுப்பகுதி இணைந்திருப்பதால், பிறப்புறுப்பு அக்குழந்தைகளில் வெளிப்படையாக காணப்படவில்லை; மேலும் அக்குழந்தைகள் இருவரும் ஒரு இதயத்தைக் கொண்டு உயிர் வாழ்கின்றனர்; அவர்கள் ஒரேயொரு தொப்புள்கொடியால் இணைக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை அக்குழந்தைகளின் வாழ்வில் ஏற்படுத்திய விசித்திரத்தை எண்ணி, அங்கிருந்த மருத்துவர்கள் அனைவரும் அளவில்லா வியப்பிற்குள்ளாகினர். அக்குழந்தைகளின் தாயோ பீதியில் உறைந்து போயிருந்தார்; இரட்டையர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அக்குழந்தைகளை பிரித்து விட வேண்டும், அதுவே அவர்களுக்கு நல்லது என்று மருத்துவர் குழு ஒரு முடிவுக்கு வந்தது.

அம்முடிவின் அடிப்படையில் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தொடங்கின. ஆனால், அக்குழந்தைகளின் தாய்க்கோ குழந்தையை இழந்துவிடுவோமோ என்ற பயம், அவர்தம் மனதை ஆட்கொண்டு அவரை வருத்தியது. இந்த குழந்தைகளின் அறுவை சிகிச்சை விவகாரத்தில் மருத்துவர்களும் ஒரு தெளிவான முடிவில் இல்லை. ஏனெனில் இயற்கை இப்படி ஒரு விசித்திரத்தை நிகழ்த்தும் என யார் தான் எதிர்பார்த்திருக்க முடியும்..!

இரட்டையர்கள் ஒரு இதயத்தைக் கொண்டிருப்பதாலும், ஒரேயொரு தொப்புள் கொடியை கொண்டிருப்பதாலும் அவர்களின் பிழைப்பு வீதம் எப்படி இருக்கும் என மருத்துவர்களால், நிச்சயமாக கூறமுடியவில்லை.

அக்குழந்தைகளுக்காக நம்மால் செய்ய இயன்றது பிரார்த்தனையே! அக்குழந்தைகளின் அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து அவர்கள் இருவரும் பிழைத்து, வாழ்வில் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போமாக!

 
Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon