Link copied!
Sign in / Sign up
2
Shares

சுகப்பிரசவத்தில் என்ன நடக்கிறது? உங்களுக்கு தெரியுமா?

சுகப்பிரசவம் என்பதில் கருப்பை சுருங்கி, கருப்பை வாய் திறக்க... குழந்தை வெளிவருகிறது. இந்த சுகப்பிரசவம் என்பது மூன்று நிலைகளை கொண்டிருக்கிறது.

நிலை 1:

 முதல் நிலை என்பது சுருக்கத்தில் தொடங்க, கருப்பை திறக்கும் வரை காத்திருக்கும். இதனை தான் முதல் நிலை என நாம் அழைக்கிறோம். இந்நிலையில் கர்ப்பப்பை வாய்பெருக்கம் என்பது 6 சென்டி மீட்டருக்கு குறைவாக இருக்க, இரண்டாம் கட்ட நிலையில் கருப்பை விரிந்து 10 சென்டி மீட்டராக இருக்கிறது. இந்த இரண்டாம் கட்ட நிலையை அடைய, 20 மணி நேரம் ஆகிறது. முன்பே குழந்தை பிறந்த தாய்க்கு இந்த நிலை அவகாசமாக 14 மணி நேரமும் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த நேரம் மாறவும் செய்கிறது. 

அதேபோல் இந்த நேரம் என்பது சிசேரியன் போது தேவைப்படுவதுமில்லை.

நிலை 2:

இந்த இரண்டாம் நிலை என்பது குழந்தையை தள்ளி வெளியில் எடுப்பதாகும். முதல் முறை தாயாக நினைப்பவர்கள், 3 முதல் 4 மணி நேரம் வரை இந்த நிலையில் இருக்க வேண்டியது அவசியம். 

நிலை 3:

இந்த மூன்றாவது நிலையில் தான் நச்சுக் கொடி வெளிவருகிறது. இதற்கான கால அவகாசமாக 30 நிமிடங்கள் காணப்படுகிறது.

சுகப்பிரசவத்தின் போது காணப்படுவது?

1. கர்ப்பத்தின் போது உடல் எடையை பராமரிக்க வேண்டியது அவசியம். குழந்தை அளவு பெரிதாக இருந்தால் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. 

2. உங்கள் மனதில் பயமிருந்தால்... அது சரிதானா? என்பதை உங்களுக்கு மிகவும் விருப்பமானவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள். தேவையற்ற குழப்பம் வேண்டாம்.

3. உங்கள் பிரசவத்தின் நிலை அறிந்து அதற்கு ஏற்ப மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம்.

4. பிரசவத்தின் போது என்ன நடக்கும் என்பதை நீங்கள் முன்கூட்டியே யோசிக்க எண்ணினால், அதற்கு ஏற்ப உங்கள் மன நிலையை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

5. பிரசவ அறையில் உங்களுடன் ஒருவர் உதவிக்காக இருத்தல் வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon