Link copied!
Sign in / Sign up
15
Shares

150 வருடம் கழித்து கொண்டாட போகும் நிலவின் பிறந்த நாள்...

ஜனவரி 31ஆம் தேதியான இன்று, மிக முக்கியமான சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணம், சுமார் 150 வருடங்கள் கழித்து வரும் அரிய வகை சந்திர கிரகணமும் கூட...இந்த அரிய நிகழ்வை நாம் வெறும் கண்களாலே காணலாம் என தொழில்நுட்ப மையமானது தெரிவித்திருக்கிறது. 

முழு சந்திர கிரகணமாக தோன்றவிருக்கும் இந்த கிரகணம், இந்தியா உட்பட பல நாடுகளில் தெரியுமாம். இந்திய நேரப்படி மாலை 5.18க்கு தொடங்கும் இந்த கிரகணம், இரவு 8.41 மணி வரைக்கும் காணக்கூடும். இந்த நேரத்தில் எந்த நாடுகளில் எல்லாம் இரவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் இந்த கிரகணத்தை காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்த சந்திர கிரகணம் மட்டும் அவ்வளவு ஸ்பெஷல்:

சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலாவின் மீது பட சந்திர கிரகணம் ஏற்படும். இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது முழு சந்திர கிரகணம் உண்டாகும். 

இன்று நிகழப்போகும் சந்திர கிரகணம் 3 வகை அரிய நிகழ்வுடன் காணப்படும்.

முதல் நிகழ்வு, இந்த மாதத்தின் 2ஆவது பவுர்ணமி ஆக இது இருக்கிறது. இதனால், இந்த சந்திர கிரகணத்தில் நிலாவின் நிறமானது நீலமாக இருந்திடலாம். அதனால் தான் இந்த நிகழ்வை, "ப்ளூ மூன்" என அழைக்கப்படும்.

இதன் சிறப்பாக சொல்லப்படுவது... நிலா தோன்றும் நேரத்திலேயே இந்த முழு சந்திர கிரகணமும் வருகிறது என்பதே. கீழ்வானத்தில் நிலா தோன்றும் போதே, முழு சந்திர கிரகணமும் தொடங்குகிறது. இந்த கிரகணம் முடிய,  படிப்படியாக நிறம் மறைந்து நிலா தன் இயல்பு நிலைக்கு திரும்பும். 

இந்த சந்திர கிரகணத்தின் போது சூரிய ஒளி, நிலாவின் மீது நேரடியாக படாது. அதற்கு மாறாக, கதிரவன் பரப்பும் ஒளி, நிலாவின் மீது படுகிறது. அதாவது அலைநீளம் அதிகமுள்ள கதிர்கள் மட்டும் நிலாவின் மீது  பட்டு சிவப்பு நிறத்தில் சென்றடைகிறது. இதனை "பிளட் மூன்" எனவும் அழைக்கின்றனர். இது தான் இன்று ஏற்படப்போகும் இரண்டாவது அரிய நிகழ்வு.

மூன்றாவது நிகழ்வு, நிலா எப்போதும் பூமியை சுற்றி வரும் போது... மாதத்துக்கு ஒரு முறை பூமியை நெருங்கி வரும். அன்றைய நாளில், நிலாவின் வடிவம் வழக்கத்தை விட பெரிதாக தெரிவதை பார்க்க முடியும். அதை தான், "சூப்பர் மூன்" என அழைப்பர். இந்த அரிய நிகழ்வும் இன்றைய நாளில் நடக்கவிருக்கிறது. வழக்கத்தை விட பத்து சதவிகிதம் பெரிதாக நிலா இன்று காட்சி அளிக்கக்கூடும்.

அத்துடன் கடல் மற்றும் ஆறுகள் சீற்றத்துடன் இருக்குமெனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், பயம் கொள்ள தேவையில்லை எனவும் சொல்லப்படுகிறது.

150 வருடம் கழித்து இன்றைய நாளில் நிகழவிருக்கும் அதிசயத்தை காண அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். அதுவும், பாட்டி சுடும் வடையை வெள்ளை நிற பிம்பம் கொண்டு மட்டுமே கண்ட நமக்கு... இன்று சிவப்பு நிறத்தில் காண்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் நிலாவின் முன் அனுமதியுடன் வெறும் கண்களாலே பார்க்கும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. 

என்ன ரெடியா?

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon