ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான கால கட்டம், பேறு காலம். இந்த சமயத்தில், கர்ப்பிணிகள் தங்கள் நலனிலும், தங்களுக்குள் இருக்கும் சிசுவின் மீதும் அதிக அக்கறையோடு இருக்க வேண்டியது அவசியம். ஒரு பெண் 10 மாதங்கள் கருவை சுமக்கிறாள்; இந்த 10 மாத காலத்தில், முதல் மற்றும் கடைசி மூன்று மாதங்கள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன.
கடைசி 3 மாதத்தில், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்களை பற்றி, இந்த பதிப்பில் காணலாம்.
1. காஃபின் அடங்கிய உணவுகள்..
கர்ப்பத்தின் கடைசி மாதங்களில், காஃபின் அடங்கிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்; ஏனெனில் காஃபின் உங்கள் உடலில் உள்ள இரும்புச் சத்துக்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால், உங்கள் உடலில் இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்படலாம்.
இரும்புச் சத்து, உங்களின் உடல் நலனுக்கும், உங்களுக்குள் இருக்கும் உயிரின் வளர்ச்சிக்கும், மிகவும் இன்றியமையாதது ஆகும். இரும்புச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால், இதன் விளைவாக, குழந்தை இறந்து பிறத்தல் மற்றும் கருக்கலைவு ஏற்படலாம்.
2. பப்பாளிப் பழம்
பப்பாளிப் பழம், கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய பழமாகும். சரியாய் பழுக்காத பழத்தில், "லாட்டேக்ஸ்" என்ற பொருள் உள்ளது; இது கர்ப்பத்தில் உள்ள சிசுவைக் கலையச் செய்யும்.
'பப்பாளிப் பழம் கர்ப்ப காலத்திற்கு ஏற்றதே' என்ற கூற்றும் நிலவு வருகிறது. ஆனால், முதல் மற்றும் கடைசி மூன்று மாதங்களுக்கு பப்பாளி ஏற்றதல்ல.
3. சில மீன் வகைகள்..!
கடல் உணவு பிரியர்களுக்கு, இது கடினமான ஒன்று தான். இருந்தாலும் உங்கள் நலனுக்காகவும், கருவின் நலனுக்காகவும் கீழ்க்கண்ட மீன் வகைகளைத் தவிர்ப்பது நல்லது.
- வஞ்சிரம் / அறக்குளா
- சுறா
- தலப்பத்து
இந்த மாதிரியான மீன்களில் "மெர்க்குரி" என்ற பொருள் உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல. ஆனால், சூரை மீன் உண்ணலாம். கர்ப்ப காலத்தில், சில மீன் வகைகளை, உண்ணாமல் இருப்பது நல்லது.
4. அதிகமாக வறுத்த உணவுகள்
கர்ப்பிணிகள், பேறு காலத்தில், வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது, வாயு மற்றும் வயிற்றின் அமிலத்தன்மை தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். ஆகையால், காய்கறிகள் மற்றும் போலிக் அமிலம் நிறைந்த பழங்களை உட்கொள்வது சிறந்தது.
5. பதிவு செய்யப்பட்ட / பதப்படுத்தப்பட்ட பொருட்கள்..!
கர்ப்ப காலத்தில் மற்றும் கர்ப்ப கால இறுதியில், பதிவு செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இத்தகைய பொருட்களில் உள்ள பிஸ்பினோல் A (BPA) என்ற பொருள், பிரசவ காலத்தின், என்டோக்ரின் என்ற செயலைப் பாதிக்கிறது.
ஆகையால், கர்ப்பிணிகளே! கர்ப்ப காலத்தில், உங்களையும், உங்களுக்குள் இருக்கும் உயிரின் நலனையும் பாதிக்கும் எந்தவொரு செயலிலும், நீங்கள் ஈடுபடாதிருப்பது நல்லது. நீங்கள் ஒரு சிறந்த அன்னை என்பதை, கர்ப்ப காலத்தில் இருந்தே உங்கள் சிசுவிற்கு உணர்த்துங்கள்..!