Link copied!
Sign in / Sign up
1
Shares

புதிய பெற்றோர்களுக்கான 9 குறிப்புகள் எவை தெரியுமா?

குழந்தை வைத்திருப்பது என்பது சாதாரணமானதல்ல. இது நீங்கள் வாழ்நாள் முழுவதும் காத்திருந்த தருணமாகும். உங்களுக்கென ஒரு குழந்தை பெற நினைக்கும்போது உங்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழக்கூடும். இது சரியான நேரமா? நாம் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறோமா? நாம் பொருளாதாரரீதியாக பலமாக இருக்கிறோமா? என வரிசையாக பல கேள்விகள் தோன்றும். நீங்கள் இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ள இன்னும் தயாராகவில்லை என்ற எண்ணம் கூட சில சமயங்களில் தோன்றும். உங்களின் அனைத்து விதமான பயங்களுக்கும், கேள்விகளுக்கும் இந்த கட்டுரையில் தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

1. அம்மாக்கள் - குழந்தை பிறப்பு

பிரசவம் குறித்த பயம் பெருமபாலான பெண்களுக்கு இருக்கும். ஆனால் கவலைப்பட தேவையில்லை உங்களால் இதை செய்ய முடியும். ஏனெனில் எண்ணற்ற அம்மாக்கள் இதே அனுபவத்தை வெற்றிகரமாக பெற்றிருக்கிறார்கள் எனவே இது அவ்வளவு மோசமானது இல்லை. உங்கள் உடல் இதற்கு தயாராக 9 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிரசவம் என்பது பூங்காவில் நடப்பது போன்று எளிதானது அல்ல. சிலசமயம், வாழ்க்கையில் முக்கியமானவற்றை பெற நாம் அதிக முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். உழைப்பின்றி ஊதியமில்லை சரிதானே?

குறிப்பு : உங்களின் தைரியத்திற்கு ஏற்ற பரிசுதான் உங்கள் குழந்தை.

2. எண்கள் விளையாட்டு

சிறந்த நாம் கூட குழந்தையின் குறைவான, அதிகமான எடை குறித்தும், குறைவான மற்றும் அதிகமான ஆக்சிஜன் அளவு குறித்தும் கவலைப்படுவோம். உங்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் முதலில் நீண்ட சுவாசம் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். சராசரி எண்கள் மட்டும் குழந்தையை பாதித்து விட முடியாது என்பதை உணருங்கள். சராசரி அளவுகள் இல்லையென்றால் என்ன நடக்கும்? மருத்துவருடன் ஆலோசனை செய்யுங்கள் பின் உங்கள் வேலையை தொடருங்கள். இது கவலைக்கொள்ள வேண்டிய காரணமல்ல விரைவில் எண்கள் சாதாரண நிலைக்கு வந்துவிடும்.

3. விபத்துகள்

அனைவருக்கும் இருக்கும் பயம் என்னவென்றால் குழந்தையை தூக்கிவைத்திருக்கும் போது கீழே போட்டுவிடுவோமோ, குழந்தையின் தலையில் அடிபட்டுவிடுமோ என்பதுதான். கற்பனைகளுக்கு எல்லையே இல்லை சரிதானே? குழந்தை தொடர்பான அனைத்து விபத்துக்களும் நடக்கும் என நாம் பயப்படுவோம். நாங்கள் கூறுவது என்னவென்றால் உங்களை நம்பினால் போதும் குழந்தையை நன்றாக பாதுகாக்கலாம்(குழந்தையை மேலிருந்து கீழே போட்டுவிடுவோம் என பயந்தால் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது.)

4. உணவு நேரம்

அம்மாக்களே, நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதை பற்றி நிறைய விஷயங்களை படித்தும் கேள்விப்பட்டும் இருப்பீர்கள், வறட்சி ஏற்படும், வலிகள் ஏற்படும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீங்கள் இதிலிருந்து இடைவெளி எடுத்துக்கொள்ள பலமுறை நினைக்கலாம். நீங்கள் நினைப்பதை போன்று இது அவ்வளவு கடினமானது இல்லை. உங்கள் உடலை கவனித்து கொள்வதில் உறுதியாய் இருங்கள். வறட்சியை போக்கும் பல க்ரீம்களும், வெண்ணெய்களும் கடைகளில் கிடைக்கின்றது. உங்களை பத்திரமாக பார்த்துக்கொள்வது உங்கள் குழந்தையை பாதுகாப்பதில் முக்கியமான பகுதியாகும். உங்கள் இருவருக்குமே வலி இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

5. இப்பொழுது என்ன?

"இப்பொழுது நான் என்ன செய்வது?" இந்த கேள்வி உங்கள் மனதில் அடிக்கடி எழுகிறது, உண்மைதானே? பெற்றோராய் இருப்பது கடிமானதுதான், ஆனால் அது ஒன்றும் ராக்கெட் அறிவியல் அல்ல. (இது மிகவும் மோசமானதுதான் ...விளையாட்டிற்கு கூறினோம்) பெற்றோராய் உங்கள் கடமையை தொடங்குவதற்கு சில காலம் தேவைப்படும். அதுவரை உங்கள் பெற்றோர்கள், உறவினர்கள், குழந்தைகள் உடைய நண்பர்கள் என அனைவரின் அறிவுரைகளையும் கேளுங்கள். அவர்கள் அனைவரும் முன்னரே இந்த அனுபவங்களை பெற்றிருப்பதால் அவை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

6. குளிப்பாட்டும் நேரம்

குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள். மிருதுவான தலை, கை, கால்கள் மற்றும் விரல்களை கொண்டவர்கள். அவர்களை குளிப்பாட்டுவது என்பது நீங்கள் சந்திக்க போகும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று. சிலமுறைகளுக்கு பின் இந்த பயம் விலகிவிடும். குழந்தையின் சருமத்தை பாதிக்காத தயாரிப்புகளை பயன்படுத்துவதில் உறுதியாய் இருங்கள். முன் அனுபவம் உள்ளவர்களிடம் உதவி கேட்பதற்கு தயங்காதீர்கள். அனுபவம் பெற்ற பின் குளிப்பாட்டும் நேரம் விளையாட்டு நேரமாக மாறிவிடும். உங்கள் துணையையும் இதில் ஈடுபடச்செய்து குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் இருங்கள்.

7. குழந்தை பிணைப்பு

எதிர்கால உளவியல் வளர்ச்சிக்கு ஒரு குழந்தைக்கும் அதன் பெற்றோருக்கும் இடையே உள்ள பந்தம் மிகவும் முக்கியமானது. சிலநேரங்களில் நீங்கள் பிணைப்பு உடனடியாக ஏற்படவில்லை என பயப்படலாம். நாங்கள் கூறுவது என்னவென்றால் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. உடனடியாக வெளிப்படாவிட்டாலும் குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கிடையே இருக்கும் பிணைப்பு எப்பொழுதும் குறையாது, உங்களின் கையில் இருப்பது உங்களுடைய சிறிய குழந்தையாகும், அவர்களுக்கு தேவையெல்லாம் நீங்களும் உங்களின் அன்பும்தான்.

8. வாங்கும்திறன்

உங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் சிறிய மனிதருக்கு நீங்கள் கற்பனை செய்ததை காட்டிலும் நிறைய பொருட்கள் தேவைப்படும். ஆனால் நீங்கள் இவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பீர்கள். நீங்கள் தயாரித்து வைத்துள்ள இந்த பொருட்களின் பட்டியல் விலை அதிகமானதாய் இருக்குமோ என்ற பயம் உங்களுக்கு இருக்கும். பயனுள்ள குறிப்பு: பட்ஜெட் போடுவது பெரிய வேலையாகும். உங்கள் குழந்தைக்கு விலையுயர்ந்த பொம்மைகளையோ, உடைகளையோ வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை. அந்த சிறிய குழந்தை, தான் அணிந்திருக்கும் உடையின் விலையையோ, தரத்தையோ அறிய போவதில்லை, அதேபோல்தான் சமீபத்தில் வந்த பொம்மைகளா அல்லது பழைய மாடல் பொம்மைகளா என்றும் அறியமாட்டார்கள்.

9. உறவு பிரச்சனைகள்

பல புதிய பெற்றோர்கள் கவலைப்படும் விஷயம் என்னவென்றால் குழந்தை வந்தபின் தங்கள் உறவு பாதிக்குமோ என்பதுதான். குழந்தைகளுக்கு அதிக கவனிப்பு தேவைப்படும்,, நாமும் அதை செய்வோம். உங்கள் கவனம் முழுவதும் குழந்தை மீதுதான் இருக்கும். அழுகையும்(நாங்கள் குழந்தையை பற்றி இங்கே குறிப்பிடவில்லை) தூக்கமின்மையும் உங்கள் வாழ்க்கையை இன்னல்கள் நிறைந்ததாய் மாற்றியிருக்கும். அதிகரிக்கும் மனஅழுத்தம் உங்கள் இருவருக்கிடையே பிரச்சனைகளை உருவாக்கலாம். இது எதிர்பார்த்த ஒன்றுதான் ஆனால் அதிக நாள் நீடிக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் கவனிப்புகள் அனைத்தும் குழந்தைக்குதான் முதலில் கிடைக்கும். பேசுவது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும். எனவே உங்களுக்கு எந்தவிதமான உதவிகள் தேவைப்படுகிறது என்பதை உங்கள் துணையிடம் தெரியப்படுத்துங்கள். உங்கள் இருவருக்குமே பொருந்தும் விதமான அதே சமயம் குழந்தையையும் பாதிக்காத திட்டங்களை வகுத்து குடும்பத்தை மகிழ்ச்சியாக நடத்துங்கள்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon