Link copied!
Sign in / Sign up
0
Shares

கர்ப்ப பரிசோதனையின் போது அம்மாக்கள் மனதில் எழும் 9 கேள்விகள்

உங்கள் கர்ப்பப் பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக இருக்கும் போது, உங்களின் உணர்ச்சிகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரிக்கும். உங்கள் மகிழ்ச்சி எல்லைகளை தாண்டி நிரம்பி வழியும் இத்தருணத்தில், உங்கள் மனதில் பல கேள்விகள் தோன்றும், சிறந்த அம்மாவாக இருக்க இயலுமா என்ற சந்தேகம் எழும். மகிழ்ச்சியும், கவலையும் மாறி மாறி தோன்றும். அம்மாக்களுக்கு உரிய உள்ளுணர்வுகள் வர தொடங்கியிருக்கும், எண்ணங்கள் முழுவதும் 9 மாதம் வயிற்றில் இருக்கப்போகும் குழந்தையை பற்றியே இருக்கும். இவை அனைத்தும் உங்கள் கர்ப்ப காலத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

உங்கள் கர்ப்ப பரிசோதனையில் நேர்மறையான முடிவுகளைப் பார்க்கும்போது இந்த எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றுவது நிச்சயம்:

1. நான் ஒரு குழந்தையைப் பெறப் போகிறேன்

கர்ப்ப பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக இருக்கும்போது உங்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியில் குதிக்கும் உங்கள் உள்ளுணர்வு தவிர்க்க முடியாதது. முடிந்தவரை மகிழ்ச்சியாய் இருங்கள். ஏனெனில், ஒரு சில மாதங்களில் நீங்கள் குதிக்க முடியாமல் போகலாம்.

2. இது உண்மையானது தானா?

நீங்கள் வீட்டில் சோதனை செய்து பார்த்திருந்தால், இந்த கேள்வி நிச்சயம் உங்கள் மனதில் எழும். இந்த மகிழ்ச்சியான செய்தியை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சொல்வதற்கு முன் சிலமுறை சோதனை செய்து பார்த்துக்கொள்வது பெண்களிடை சகஜம்தான்.

3. நான் பருமனாக போகிறேன்

ஆம், இது அனைவரையும் கவலை கொள்ள செய்யும். ஆனால், மறுபுறம் பார்த்தால் நீங்கள் ஒரு சிறிய மனிதனுக்கு உயிர்கொடுக்க போகிறீர்கள் என்பதே மிகப்பெரிய மகிழ்ச்சிதான். இந்த பெரிய மகிழ்ச்சிக்காக சிறிது எடை அதிகரிக்கும் தியாகத்தை செய்யலாம்.

4. ஒரு சிறிய துளையிலிருந்து ஒரு மனிதனை நான் எப்படி தள்ளுவேன்?

இதைப்பற்றி சிந்திக்கும் ஒவ்வொரு முறையும், உங்களுக்கு மயிர்க்கூச்சம் ஏற்படும். எண்ணற்ற தாய்மார்கள் இதை செய்து இப்போது மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள், உங்களின் அம்மாவே அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாவார். நேரம் வரும்போது, நீங்களும் இதை சரியாக செய்வீர்கள்.

5. என் குழந்தை இரு தரப்பினரிடமிருந்தும் அனைத்து நல்ல மரபணுக்களையும் பெறுமென்று நம்புகிறேன்

உங்கள் குழந்தை நிச்சயமாக அழகாக இருக்கும். எனவே, யாருடைய மரபணுக்கள் கிடைக்குமோ என்று கவலைப்பட வேண்டாம். உங்கள் பிள்ளையின் குறும்புகள் அனைத்தையும் அனுபவித்து மகிழுங்கள், அவர்கள் நல்ல மனிதர்களாக மாறும் வரை, அவர்கள் யாரைப்போல் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

6. என் உடல்நிலை மோசமாக போகிறது

நீங்களும், குமட்டலும் நெருங்கிய நண்பர்கள் ஆக போகிறீர்கள். எந்த பெண்ணும் குமட்டல் கட்டத்தை தவிர்க்கும் அளவிற்கு அதிர்ஷ்டசாலி அல்ல, எனவே கர்ப்பத்தின் அனைத்து நிலைகளுக்கும் தயாராய் இருங்கள். உங்களின் இந்த அனைத்து தியாகங்களுக்கும் கிடைக்கும் பலன் தகுதியானதுதான்.

7. அனைவருக்கும் எப்படி சொல்வது

அனைவருக்கும் நற்செய்தியை அறிவிப்பது உங்கள் பிரகாசமான தருணம். எனவே அனைவரையும் வெளியே அழைத்துச்சென்று உபசரித்து வெளிப்படுத்துங்கள். நீங்கள் விரும்பும் அனைவரையும் கொண்டாட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள். இது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருப்பதால் உங்களுடைய உற்சாகத்தை அதிகமாக்க கூடிய அனைவரையும் அழைக்கவும்.

8. என் குழந்தை பெண்ணா அல்லது ஆணா?

அனைத்து அம்மாக்களுக்கும் குழந்தையின் பாலினம் பற்றிய ஆர்வம் இருக்கும். இந்த ஆர்வம் உங்கள் குழந்தையை கையில் ஏந்தும் வரை போகாது. எந்த குழந்தையாக இருப்பினும் உங்கள் நேசம் குறையப்போவதில்லை.

9. அடக்கடவுளே! நான் தாயாக போகிறேன்

இயற்கையாக உங்களுக்குள் இருக்கும் உள்ளுணர்வு அறிகுறிகளின்றி வெளிப்படும். கவனமான நடைபயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு போன்றவை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம். சாக்லேட் மற்றும் கேக் போன்ற உணவுகளை சாப்பிட வெட்கப்படாதீர்கள். நீங்கள் அற்புதமான வேலையை செய்கிறீர்கள், எனவே உங்களுக்கு பிடித்தவற்றை தாராளமாக செய்யுங்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon