Link copied!
Sign in / Sign up
3
Shares

நிச்சயத்தின் போது மோதிரம் அணிவிக்கப்படுவது ஏன்??

திருமணம் என்று நிச்சயித்த பின்னர், ஆணும் பெண்ணும் கல்யாணக் கனவுகள் கண்டு, திருமணப்பந்தலில் தம்பதியராய் நின்று வாழ்க்கைத் துணை ஆகப்போவதை உறுதிப்படுத்தும் முறையில் முதன் முதலாக தம்பதியர் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் ஒரு முக்கியப் பொருள், மோதிரம். அப்படிப்பட்ட முக்கிய பொருளான மோதிரத்தை நாம் எந்த விரலில் அணிவிக்கிறோம் என்பது மிக முக்கியம்; மேலும் ஏன் அந்த குறிப்பிட்ட ஒரு விரலில் மட்டுமே நிச்சய மோதிரத்தை அணிய வேண்டும் என்பது நம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் ஒரு மிக முக்கிய கேள்வி... 

இந்தக் கேள்விக்கு சரியான விடை அளித்து, நிச்சயத்தின் போது அணிவிக்கப்படும் அம்மோதிரத்தின் மகத்துவம் என்ன என்பது பற்றியெல்லாம் இப்பதிப்பில் படித்தறியுங்கள்., தோழியரே!

அதற்கு முன்னதாக..!

பொதுவாகவே, மோதிரம் அணிந்துள்ள பெண்டிரின் கைதான் குடும்பத்தில் ஓங்கியிருக்கும்; மேலும் செல்வாக்குடன் விளங்கும். மோதிரத்தை எந்த பக்க கையில், எந்த விரலில் அணிந்தால் நன்மை என்பதற்கு, நம் முன்னோர், பல காரணங்களையும், ஆய்வாளர்கள் சில காரணங்களையும்சொல்லிச் சென்றுள்ளனர். அக்கரணங்கள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்..!

நம்முடைய 4வது விரலில் தான், மோதிரம் அணிய வேண்டும்; மோதிரம் அணிய வேண்டும் என்பதாலேயே அதற்கு பெயரே, மோதிர விரல் என உண்டானது. நம் 5 விரல்களுமே, நம் வாழ்வின் முக்கிய 5 சொந்தபந்தங்களை குறிக்கின்றன.

விரல்களின் குறிப்பு..!

சுண்டு விரல் - நம் பிள்ளைகளை

மோதிர விரல் - வாழ்க்கை துணையை

நடு விரல் - நம்மையே குறிக்கும்.

ஆள்காட்டி விரல் - நம் சகோதரர்களை

பெரு விரல் - பெற்றோரை

நன்மை தீமைகள்..!

சுண்டு விரலில், மோதிரம் அணிவது நம் வழக்கத்தில் இல்லை, ஏனெனில் அதில் மோதிரம் அணிந்தால் நம் இதய சக்தி ஓட்டம் தடைப்படும்.

நடு விரலில், நம்மில் பெரும்பாலானவர்கள் மோதிரம் அணிவதில்லை; இஸ்லாமியத்தில் நடு விரலில் மோதிரம் அணிவது, தடை செய்யப்பட்டுள்ளதாக ஹதீஸ் தெரிவித்துள்ளது.

முன்னர், நபர்களின் முகத்தை வைத்து, குணத்தைக் கொண்டு, நடை, உடை பாவனைகளை வைத்து,  உடலிலுள்ள மச்சத்தை வைத்து, ஜோதிடம் மற்றும் சாமுத்திரிகா லட்சணம் கூறுவது வழக்கம்; ஆனால், தற்போது கை விரல்களையும், அதில் அணிந்துள்ள மோதிரங்களையும் வைத்து, ஆராய்ச்சி செய்து அதன் மூலம், நபர்களின் குணாதிசயங்களைக்கூற முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

நிச்சய மோதிரம்.!

இடது கையின் மோதிர விரலில், ஒவ்வொருவரும், கண்டிப்பாக ஒரு வளையமாவது கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்; ஏனெனில் இது  இதயநோய் மற்றும் வயிற்றுக் கோளாறுகளை முற்றிலுமாக தடை செய்யும்; மேலும் இன விருத்தி உறுப்புகளுக்கு நன்கு சக்தி அளிக்கும்.

நம் நாட்டு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப்படி, மோதிரம் மாற்றிக்கொள்வது, அக்குறிப்பிட்ட ஆண் மற்றும் பெண்ணிற்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பதை குறிப்பதற்காக தான்; ஆனால், அறிவியல் முறைப்படி பார்த்தால், இந்த நிச்சய மோதிரத்தை இடது கையின் மோதிர விரலில் அணிவது, மேலே கூறப்பட்டுள்ள ஆரோக்கியம் சார்ந்த காரணத்திற்காகவே!

யாரும் அவ்விரலில் தானாய் மனமுவந்து வாழ்நாள் முழுதும் மோதிரம் அணிந்து கொண்டே இருக்க மாட்டார்கள், அதற்காகவே, நிச்சய மோதிரத்தை அறிமுகப்படுத்தி அணிய வைத்தனர். மேலும் இடது கையின் நடுவிரல் இதயத்தோடு நரம்பால், தொடர்பு கொண்டு இணைந்திருப்பதால், உங்கள் துணையின் நினைவையும் இதயத்தோடு இணைக்கவே இம்மோதிர முயற்சி..

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon