Link copied!
Sign in / Sign up
132
Shares

நெல்லிக்காய் எனும் கூந்தலின் அரசன்...

ஒரு நெல்லிக்காய் நான்கு ஆப்பிளுக்கு சமம் என்பது உங்களுக்கு தெரியுமா? விற்கும் விலைவாசியில் ஆப்பிளை வாங்க பாக்கெட்டில் 200 ரூபாயாவது இருத்தல் வேண்டும். ஆனால், 10 நெல்லிக்காயை நம்மால் வெறும் பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் கொடுத்து வாங்க முடிகிறது. அநியாய வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி எல்லாம் போட்டா கூட 50 ரூபாய்க்குள்ள நாம வாங்கிடலாம்.

நெல்லிக்காயில் இரு வகை உண்டு. அவை பெருநெல்லி, சிறு நெல்லி எனப்படும். இந்த சிறு நெல்லியில் அவ்வளவாக சத்துக்கள் ஒன்றுமில்லை. இனிக்கும் தன்மை கொண்டதும் கூட. பெரு நெல்லியில் தான் பெருமளவில் சத்துக்கள் இருக்கிறது. எப்போதுமே சத்தான பொருள் கசக்கவோ, துவர்க்கவோ செய்யும். பெரு நெல்லியும் அப்படித்தான், துவர்க்கும் தன்மை கொண்டது. ஆனால், ஒரு நெல்லியை சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் அப்படி ஒரு இனிப்பை உங்கள் நாக்கு உணரும்.

இந்த நெல்லிக்காயை உங்கள் முடியில் சேர்ப்பதால் உண்டாக கூடிய நன்மையை நாம் இப்போது பார்க்கலாம்.

நெல்லிக்காயினால் உண்டாகும் கூந்தல் பயன்கள்:

1. உங்கள் உச்சந்தலையில் நெல்லிக்காய் எண்ணெய்யை நன்றாக தேய்க்க, இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. நெல்லிக்காயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் கூந்தல் கருமுட்டைக்கு கிடைக்க, இதனால் உங்கள் முடி வேகமாக வளர்கிறது.மேலும், உங்கள் உச்சந்தலையின் உலர்ந்த செதில்களை நீக்க உதவுகிறது. இதனால் கருமுட்டையில் இருக்கும் அழுக்குகள் நீங்க உச்சந்தலையானது பாதுகாப்புடன் இருந்து வருகிறது.

2. உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தால் pH அளவும் அதிகரிக்கிறது.

3. உங்கள் முடி உதிர்தலுக்கான, உடைதலுக்கான முக்கியமான காரணம் வைட்டமின் c குறைபாடுதான். நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் இந்த குறைபாடு தடுக்கப்பட, கூந்தல் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.

4. நெல்லிக்காயில் வைட்டமின் cயுடன் சேர்த்து ஆக்சிஜனேற்ற பண்பும் இருப்பதால், இது உங்கள் தலையில் இருக்கும் கருமுட்டையின் வளர்ச்சிக்காக போராடுகிறது.

5. முடியின் தேவைக்கு தினமும் நீங்கள் நெல்லிக்காய் எண்ணெய்யை பயன்படுத்த, இதனால் மயிர்த்தண்டு பாதுகாக்கப்பட்டு, முடி உதிர்தலையும் தடுக்க பெரிதும் உதவுகிறது.

வீட்டிலிருந்தே நெல்லிக்காயை கொண்டு முடியை காப்பது எப்படி?
முடியின் வளர்ச்சிக்கு நெல்லிக்காய் எண்ணெய்:

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் பொடி - 2  டீ ஸ்பூன் 

தேங்காய்/ ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை நேரம்: 

45 நிமிடங்கள் 

செய்முறை:

1. ஒரு கடாயில் எண்ணெய்யை சுட வைத்துக்கொண்டு, அதில் இரண்டு டீ ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்க்க வேண்டும்.

2. எண்ணெய் கொதித்து பழுப்பு நிறத்தில் வந்திருக்கா என பார்க்க வேண்டும்.

3. பின்னர், அடுப்பை விட்டு இறக்கி ஓரமாக வைத்துவிடவும்.

4. அந்த பவுடர் நன்றாக காய்ந்த பிறகு, தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.

5. அந்த பொடியுடன் சேர்ந்த எண்ணெய்யை உங்கள் உச்சந்தலையில் தடவி 15 நிமிடத்திற்கு வைத்திருக்க வேண்டும்.

6. பின்னர், உச்சந்தலையில் சேர்ந்த எண்ணெய்யை உங்கள் தலை முழுவதும் பரவுமாறு தேய்த்து 30 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள்.

7. அதன்பிறகு எண்ணெய்யை  மிதமான சல்பேட் இல்லாத ஷாம்பு போட்டு கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் மூன்று முறை செய்து வரலாம்.

பயன்கள்:

1. முடியின் தண்டை வலுவடைய செய்கிறது.

2. முடிக்கு தேவையான ஊட்ட சத்தை தந்து, உச்சந்தலையிலுள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது.

3. முடி உதிர்தலை தடுக்கிறது.

 

முடியின் வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காய் மற்றும் சீகைக்காய் தூள்:

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன் 

சீகைக்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன் 

தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை நேரம்: 

40 நிமிடங்கள் 

செய்முறை:

1. ஒரு கிண்ணத்தில் நெல்லிக்காய் மற்றும் சீகைக்காய் பொடியை எடுத்து தண்ணீருடன் நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள்.

2. அந்த பேஸ்டை தலை மற்றும் உச்சந்தலையில் தேய்த்திடுங்கள்.

3. உங்கள் தலை முழுக்க அது நன்றாக பரவி இருக்கிறதா? என்பதை உறுதி செய்துக்கொண்டு 40 நிமிடங்களுக்கு வைத்திருங்கள்.

4. பின்னர், தலையை குளிர்ந்த நீரை கொண்டு கழுவுங்கள். 

இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வாருங்கள்.

பயன்கள்:

1. முடி உதிர்தலை தடுக்கிறது.

2. முடியை மென்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

 

முடியின் வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காய் பொடி மற்றும் முட்டை:

தேவையான பொருட்கள்:

முழு முட்டை - 2

நெல்லிக்காய் பொடி - அரை கப்

செய்முறை நேரம்: 

1 மணி நேரம்

செய்முறை:

1. ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்.

2. அந்த மசித்த முட்டையில் நெல்லிக்காய் பொடியை சேர்த்துக்கொண்டு, பேஸ்டை போல் ஆக்கிக்கொள்ள வேண்டும்.

3. அந்த பேஸ்டை உங்கள் தலை மற்றும் உச்சந்தலையில் தேய்க்க வேண்டும்.

4. உங்கள் தலை முழுவதும் தேய்க்கப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்துக்கொண்டு 1 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

5. குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும். சுடு தண்ணீரை ஊற்றி விடாதீர்கள்.

இவ்வாறு வாரம் ஒரு முறை தேய்க்க வேண்டும்.

பயன்கள்:

1. முட்டையில் இருக்கும் புரத சத்து, முடிக்கு தேவையான ஊட்ட சத்தையும், கருமுட்டைக்கு தேவையான சத்தையும் தருகிறது.

 

முடியின் வளர்ச்சிக்கு உதவும் மருதாணி மற்றும் நெல்லிக்காய்:

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

மருதாணி பொடி - 3 டேபிள் ஸ்பூன் 

வெதுவெதுப்பான தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன் 

செய்முறை நேரம்:

1 முதல் 2 மணி நேரம் வரை...

செய்முறை:

1. இந்த மூன்றையும் (நெல்லி, மருதாணி, நீர்) ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு பேஸ்டை போல் ஆக்கிக்கொள்ள வேண்டும். தேர்வு செய்யும் பாத்திரம் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடியாக இருத்தல் அவசியம். உலோக பாத்திரம் உபயோகிக்க வேண்டாம்.

2. ஓர் இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

3. காலையில் எழுந்தவுடன், அதனை உங்கள் தலை மற்றும் உச்சந்தலையில் தேய்க்க வேண்டும். உங்கள் முடி ஆரஞ்சு கலரில் இருப்பதை தாங்கள் விரும்பாவிட்டால்., கரு நீலத்தை அந்த கலவையுடன் சேர்த்து கொள்ளலாம்.

4. பின்னர், 1 முதல் 2 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும்.

5. உங்கள் தலையை குளிர்ந்த நீர் மற்றும் மிதமான சல்பேட் இல்லாத ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.

இவ்வாறு மாதத்தில் ஒரு முறை செய்து வர வேண்டும்.

பயன்கள்:

1. உச்சந்தலை சுத்தத்திற்கு உதவுகிறது.

2. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

3. முடியின் நிறம் மாறாமல் காக்கிறது.

 

முடியின் வளர்ச்சிக்கு உதவும் நெல்லிக்காய் மற்றும் லெமனால் ஆன ஜுஸ்:

தேவையான பொருட்கள்:

நெல்லி ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்

லெமன் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை நேரம்: 

15 நிமிடங்கள் 

செய்முறை:

1. ஒரு கிளாஸில் நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் லெமன் ஜூஸை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

2. அந்த கலவையை கொண்டு உங்கள் உச்சந்தலையை 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

3. அதன்பின்னர் 10 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும்.

4. பத்து நிமிடங்களுக்கு பிறகு...மந்தமான நீர் மற்றும் மிதமான சல்பேட் இல்லாத ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.

இவ்வாறு பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ செய்ய வேண்டும்.

பயன்கள்:

1. முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

 

முடியின் வளர்ச்சிக்கு நெல்லிக்காயுடன் உதவும் வெந்தயம்:

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன் 

வெந்தய பொடி - 2 டேபிள் ஸ்பூன் 

வெதுவெதுப்பான நீர் - 5 டேபிள் ஸ்பூன் 

செய்முறை நேரம்: 

20 நிமிடங்கள் 

செய்முறை:

1. செய்முறை பொருட்களை ஒரு கிண்ணத்தில் எடுத்து நன்றாக பிசைந்துக்கொண்டு பேஸ்ட் போல் ஆக்கிக்கொள்ள வேண்டும். தேர்வு செய்யும் பாத்திரம் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடியாக இருத்தல் அவசியம். உலோகம் வேண்டாம்.

2. அந்த பேஸ்டை இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்திடுங்கள்.

3. காலையில், அதனை உங்கள் தலை மற்றும் உச்சந்தலையில் தேய்த்திடுங்கள்.

3. நன்றாக தேய்த்த பின்னர், 20 நிமிடத்திற்கு வைத்திருங்கள்.

4. குளிர்ந்த நீர், மிதமான சல்பேட் இல்லாத ஷாம்பு கொண்டு தலையை கழுவிடுங்கள்.

இவ்வாறு வாரத்தில் 1 அல்லது 2 முறை செய்து வாருங்கள்.

பயன்கள்:

1. பொடுகு தொல்லையை போக்க உதவுகிறது

2. முடியின் தன்மையை பாதுகாக்க பயன்படுகிறது.

3. முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon