Link copied!
Sign in / Sign up
1
Shares

நீங்கள் ஏன் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்?

"நீங்கள் இந்த நேரத்தில் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என டாக்டர் கூறுவது உண்டு. உடனே, நாமும் தண்ணீர் கண்டால் கணவன் கையை பிடித்து அழகாக நடந்து செல்வோம். ஏதாவது கனமான பொருளை தூக்கினால்,  பக்கத்து வீட்டு மாமிக்கு கேட்கும் அளவிற்கு சத்தம் போட்டுக்கொண்டு கணவர் ஓடி வருவார். "ஏங்க..." என ஆசையுடன் கேட்டால், "மாசமா இருக்கியல்ல..." என்பார் அவர். இந்த சின்ன சின்ன கவனம் மட்டும் போதுமா என்ன?

இவையெல்லாம் உங்களுடைய உடல் சம்பந்தப்பட்ட விஷயம் தானே தவிர, மன சம்பந்தப்பட்டது அல்ல...

இந்த சமயங்களில் சின்ன சின்ன சந்தோசம் உங்களுக்கு தேவை தான். ஆனால், அது கடுகளவும் கெட்டு விடாமல் நீங்கள் தான் உங்கள் மனதை பார்த்து கொள்ள வேண்டும். உங்களுடைய உணர்வுகளை சில சமயத்தில் கட்டுப்படுத்தி நேரத்தை கையாள்வது மிகவும் முக்கியமான ஒன்று.

உணர்வுகளை ஏன் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்? உங்களை நோக்கி ஓடி வர அது என்ன, அவ்வளவு கொடிய மிருகமா? கண்டிப்பாக இல்லை, உணர்வுகளில் நல் உணர்வும் உண்டு. தீய உணர்வும் உண்டு. அவை என்ன என்பதை நாம் பார்க்கலாம். வாருங்கள்...

கணவனிடம் கையாள வேண்டியவை:

1. கர்ப்பிணி பெண்களிடம் பெரும்பாலும் கணவன்மார்கள் கோவப்படுவதில்லை. ஒருவேளை, அலுவலக அழுத்தம் அல்லது வேறு பிரச்சனைகளால் அவர் உங்களிடம் பேச மறுத்து தவிர்த்திடலாம். அப்போது, வழியில் சென்று வம்பு இழுத்து மன அழுத்தத்தை உண்டாக்கி கொள்ளாமல் அவராக பேசும் வரை காத்திருப்பது நல்லது.

2. சின்ன சின்ன சந்தோஷத்தையும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு, அவர் தோலை பற்றுங்கள். இதனால், அவர் பெரும்பாலும் கூலாக இருந்திட கூடும். சில நேரங்களில், நீங்கள் தோலை பற்றுவதனால் கூட அவர் மனதானது மாறிவிடலாம்.

குடும்பத்திலுள்ள மற்றவரிடம்  கையாள வேண்டியது:

1. குடும்பத்தில் எல்லோரும் கணவன் போல் பாசமாக இருந்துவிடுவார்கள் என சொல்லிவிட முடியாது. ஒரு சிலர், அவருடைய மன கஷ்டத்தை உங்களிடம் கடினமான முறையில் சொல்லவும் கூடும். அப்படி இருக்க, அவர்களுக்கு ஆறுதலாக இருந்திடலாம். இல்லையேல், விலகி செல்வது நலம். அதை விடுத்து உணர்ச்சி வசம் கொள்ளாதீர்கள். அது உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து.

2. குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல மன நிலையில் இருந்தால்...அப்போது அவர்களுடன் சேர்ந்து நீங்களும் இன்பமாக இருந்திடலாம். தேவையற்ற விஷயங்களை பேசாமல் தவிர்த்திடலாம்.

அழுத்தம் தரும் விஷயங்களை யோசிக்க வேண்டாம்:

1. உங்கள் மனதிற்கு அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை யோசிக்காதீர். ஒருவேளை, உங்கள் உணர்வுகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை தாங்கள் உணர்ந்தால், சிறிது நேரத்திற்கு தள்ளி நின்று அமைதியை நாடுவது மிக நல்லது.

2. எக்காரணம் கொண்டும் உணர்ச்சி வசப்பட்டு அழுது விடாதீர்கள். நீங்கள் அழுவதனால், அழுத்தம் மிகுதியாக...அத்துடன் பதட்டத்தையும் ஏற்படுத்தும்.

ஒளி மற்றும் ஒலியில் கவனம் வேண்டும்:

1. இந்த சூழ்நிலையில் தொலைக்காட்சி மற்றும் ஹெட்போன் உபயோகிப்பதில் கவனம் வேண்டும். குறிப்பாக, இதயத்தை பலவீனப்படுத்தும் எந்த ஒரு அதிர்வலைகளை கேட்டிடாமல் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, உணர்ச்சி வசப்படும் காட்சிகளை தவிர்க்கவும்.

2. இளையராஜாவின் மெலோடி பாடல்கள் அல்லது மனதை வருடும்  புல்லாங்குழல் இராகங்கள் கேட்பதன் மூலம் உணர்வுகளை உங்களால் கட்டுப்படுத்த இயலும்.

உணர்வுகள் என்பது இன்பத்தையும், துன்பத்தையும் தரக்கூடியது. இந்த உணர்வுகளை கவனமாக கையாள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் தேவையை துணையுடன் இணைந்து இனிதே செயலாற்ற முடியும். ஆவதும் உணர்வினாலே...அழிவதும் உணர்வினாலே. இந்த உணர்வுகள் தான் நாவை அடக்கி ஆளவும், அதே சமயத்தில் தேவையற்ற வார்த்தைகளை விடவும் காரணமாய் அமைகிறது.

உணர்வுகள் இல்லையேல் மனித நேயம் என்பது மறந்துவிடும். அந்த உணர்வை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் உங்களுடைய எதிர்க்காலமும், உங்களை சார்ந்தவர்களுடைய எதிர்க்காலமும் அடங்கி இருக்கிறது. 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு...' என்பார்.

அதனால், கோபம் என்பது ஒருவர் அமைதியை அழிக்கும் ஆயுதம் என்பதை புரிந்து நாம் செயல்பட வேண்டியது மிக அவசியம். உணர்வினால், நல்லது நடந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.அதுவே ஒருவரை உங்கள் உணர்வு புண்படுத்தினால், மீண்டும் அதே தவறை செய்யாதீர்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon