Link copied!
Sign in / Sign up
19
Shares

நீங்கள் உங்கள் கணவரை பற்றி அறிந்து கொள்ளாத 7 விஷயங்கள்

கணவரை பற்றி அறிந்து கொள்வது, சில நேரங்களில் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கலாம். அவர்கள் சில நேரங்களில் நீங்கள் புரிந்தும் கொள்ளும் படி பேசமாட்டார்கள். அவர்களை பற்றிய சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள கூடாது எனவும் நினைப்பார்கள். ஆனால், கவலைப்படாதீர்கள். உங்கள் முக்கிய மனிதரை நன்றாக புரிந்து கொள்ள உதவுவதற்கு நாங்கள் இங்கு இருக்கிறோம்.

1 சிறந்த கண்காணிப்பாளர்

அவர் உங்களையும், அவரையும் சுற்றியுள்ள எல்லாக் காரியங்களையும் கவனித்துக்கொள்கிறார். உங்கள் கணவர் எல்லாவற்றையும் பார்க்கிறார், எல்லா சிறிய விவரங்களையும் கவனிக்கிறார். அவருடைய கண்கள் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கின்றன, உங்களுடைய விஷயங்களையும், உங்களைச் சுற்றி இருக்கும் மக்களையும் உற்று நோக்கி கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது, ஒரு அழகான பெண் உங்களை கடந்து சென்றால், நீங்கள் அவளை கவனிக்கும் முன்பே, உங்களவர் அவளை கவனித்து கொண்டிருப்பார்.

2 அகங்காரம் (ego) உடையவர்

ஆண் அகங்காரத்தை பற்றி நீங்கள் கேட்டிருக்கலாம், ஆனால் நீங்கள் கற்பனை செய்ததை விட, அவரது அகங்காரம் மிகவும் பலவீனமாக இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர் தனது அகங்காரத்தால் ஏற்பட்ட ஒவ்வொரு பிரச்னையுடனும் சம்பந்தப்பட்ட மக்கள் சோர்வடையும் போது, அதை பற்றிய நகைச்சுவையை உருவாக்கிவிடுவார். நீங்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். அவரை பாராட்டுங்கள், ஏனெனில் பெண்களை விரும்பாத எவரும் உயிருடன் இருக்கவே தகுதியற்றவர்கள். அவர் உங்களை நேசிக்கிறார் மற்றும் மணந்து கொண்டிருக்கிறார்.

3 அவர்களின் அம்மாவை போல் இருக்க கூடாது

நீங்கள் எப்போதும் ஞாபகத்தில் கொள்ள வேண்டியது, நீங்கள் அவரின் மனைவி, தாய் அல்ல என்பதே. ஆண்கள் பெரும்பாலும் பெரிய குழந்தைகளைப் போலவே செயல்படுவார்கள், அவர்களின் அம்மாவை போல் செயல்பட்டால் அது வீண் வேலை. அவர் நீங்கள் சிறந்த தாயாக இருக்க வேண்டும் என விரும்புவர். அது அவருடைய குழந்தைகளுக்கு தானே தவிர, அவருக்கல்ல என்று நீங்கள் உணர வேண்டும்.

4 அவர் உங்களை ஒரு தனிப்பட்ட வழியில் நேசிக்கிறார்

நீங்கள் பார்த்த திரைப்படங்களில் காட்டிய படி எல்லாவற்றையும் அவர் செய்யமாட்டார், அவர் செய்யவேண்டியிருக்கும் அனைத்தையும், ஏன் சிறிய விஷயங்களையும் கூட அவர் செய்ய மாட்டார். அதற்காக, அவர் உங்களை குறைவாக நேசிக்கிறார் என்று அர்த்தம் இல்லை. அவர் உங்களை ஒரு தனிப்பட்ட வழியில் நேசித்துக் கொண்டிருக்கிறார். அவர் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பி வரும்போதோ அல்லது அவர் வேலைக்குச் செல்வதற்கு முன்பாகவே, உங்களுக்கு ஒரு முத்தமோ அல்லது கட்டியணைக்கவோ செய்தல், அது அவரின் அன்பை காட்டும் சைகைகள். நீங்கள் தான் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர் எப்போதும் உங்களை வார்த்தைகளால் நேசிப்பதாய் சொல்ல மாட்டார், ஆனால் அவர் உங்களை மிகவும் நேசிப்பார்.

5 நீங்கள் அவரை திருத்தும் போது, அது அவரை காயப்படுத்துகிறது

ஆண்களுக்கு பெண்களை விட அடிப்படையில் ஒரு வித்தியாசமான வடிவமைப்பு உண்டு. இதனால், அவர்கள் வித்தியாசமாக விஷயங்களை செய்ய முனைகின்றனர், வித்தியாசமான முறையில் செய்தும் முடிக்கிறார்கள். பெண்கள் அவர்கள் வழியில் ஒரு செயலை செய்ய விரும்புகிறார்கள், எனவே அவர்கள் கணவரை சரிசெய்ய முயற்சிக்கும்போது, அது அவரை காயப்படுத்திவிடுகிறது. சில நேரங்களில் அவரை சரி செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் அதை செய்ய முயற்சிக்கு வழி மிகவும் முக்கியமானது. நீங்கள் அவருக்கு சில மாற்றங்களைக் கூறுங்கள், அவர் எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்று அவருக்குச் சொல்லுங்கள். எனினும், அவர் சரியாக எதையும் செய்வதில்லை என்பதை போல் அவரை சரிசெய்ய முயற்சித்தால், நீங்கள் பிரச்சனையில் சிக்கி கொள்வது உறுதி.

6 அவர்க்கு பிடித்தமான ஒன்றை தெரிந்து கொள்வது

பெரும்பாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் அவர் எப்படி இருக்க விரும்புகிறார் அல்லது அல்லது அவர் விரும்பும் ஒன்று எது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர் என்ன செய்ய விரும்புகிறார் அல்லது எதன் மீது அன்பு செலுத்துகிறார் என்பதை கண்டு பிடியுங்கள். இது அவரது அடையாளமாகும். இது கோல்ஃப், மீன் பிடித்தல், காமிக் புத்தகங்கள் அல்லது முத்திரைகள் சேகரிப்பது என்பது போல எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் அதை மதிக்காதபோது, அவர் ஒரு மனிதனை விட குறைவாக உணரலாம்.

7 நீங்கள் அற்புதமாக இருக்கிறீர்கள் என்று அவர் நினைப்பது

அவர் உங்களை விட உங்களை அதிகமாக நேசிப்பதாய் செய்து காட்டுவர். அவர் உங்களை நினைத்து பிரமிப்படைகிறார். உங்களால் எதைச் செய்ய முடியும் மற்றும் சாதிக்க முடியும் என்பதை அவர் அறிந்து வைத்திருப்பார். நீங்கள் செய்யும் செயல்களை கண்டு, அதை நீங்கள் எவ்வாறு செய்கிறீர்கள் என்று அவர் வியப்படைவார். மேலும் முக்கியமாக, அவர் உங்களை மதிக்கிறார் - உங்களுடனான தொடர்பை எப்படி அறிவது என்பது அவருக்கு தெரியும்.

என்னதான் நான் என் கணவரை பற்றி தெரிந்து வைத்திருக்கிறேன் என்றாலும், நாம் அவர்களை பற்றி அறியாத சில விஷயங்களும் இருக்கத்தான் செய்யும். முடியும் வரை அறிய முயற்சிக்கலாம், முடியாவிடில் கணவரின் அன்பை புரிந்து கொண்டு நேசிக்கலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon