Link copied!
Sign in / Sign up
6
Shares

நீங்கள் சிறந்த மருமகளாக இருக்க

உங்கள் மாமியார், மாமனார் என்பவர்கள் உங்களது மிக பெரிய கனவாகவோ அல்லது மிக சிறந்த கனவாகவோ இருக்கும், நீங்கள் அவர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து. ஆனால் அது கனவாகும் போது, அவர்களது வயது வித்தியாசத்தால், உங்கள் மீது நம்பிக்கையற்ற தன்மை இருக்கும். மருமகள்கள் எப்போதும் மாமியாருடன் வாக்குவாதம் செய்வது, கலந்தாலோசிப்பது என இருப்பார்கள். அவர்கள் மாமனாரிடம் பேச பெரிதும் தயங்குவார்கள். ஆனால், இது உங்களுக்கு மட்டும் பெரிய பிரச்சனையாக தெரியாமல், உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளிடம் கூட இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்கள் மாமியாரோடு நல்ல புரிதலுடன் இருப்பது மிகவும் முக்கியம். இதற்கு நீங்கள் உங்கள் மாமியாரை உங்கள் ஆதரவாளராக மற்ற முயற்சிக்க வேண்டும். முடியவே முடியாது என்கிறீர்களா? முயற்சி திருவினையாக்கும், என்பது வள்ளுவரின் சொல். இப்போ நீங்கள் முயற்சிக்க வேண்டியவைகளை பார்க்கலாம்.

1 எப்போதும் அவர்களை மதியுங்கள்

அவர்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் சரி, உங்களை விட வயதில் பெரியவர்களாக இருக்கிறார்கள், நீங்கள் எப்பொழுதும் அவர்களை மதிக்க வேண்டும். மேலும், அவர்கள் உங்களை மதிக்க வேண்டுமெனில், முதலில் நீங்கள் அவர்களை மதிக்க வேண்டும். அவர்கள் நீங்கள் கொடுக்கும் மரியாதை உண்மை என உணர்ந்தால், அவர்கள் கண்டிப்பாக அதை விட அதிகமாக உங்களுக்கு மரியாதையை கொடுக்க துவங்குவார்கள்.

2 அவர்களிடம் உங்கள் கணவரை பற்றி பேசுங்கள்

உங்களுக்கும், உங்கள் மாமனார்- மாமியாருக்கும் பொதுவாக உள்ள ஒரு நபர் உங்கள் கணவர்தான். எனவே உங்கள் கணவரை பற்றி அவர்களிடம் பேசுங்கள். நீங்கள் உங்கள் கணவரை பற்றி அவர்களிடம் பேசுவது, அவர்களை உருக செய்யலாம். எனினும், ஒரு விஷயம் மிகவும் முக்கியம், தங்கள் மகன் பற்றி பேசி நீங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அது நீங்கள் குறை கூறுவது போல் இருந்தால், அவர்களின் மகனை பாதுகாக்க உங்களிடம் சண்டையிட துவங்கிவிடுவதோடு, அவர்கள் உங்களை வெறுக்கவும் துவங்கி விடுவார்கள்.

3 அவர்களின் வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்குகளில் ஆர்வம் காட்டுங்கள்

உங்கள் மாமியார் மாமனாருடன் நெருக்கமாக இருக்க சிறந்த வழி, அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அவர்களிடம் பேசுவது. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை கேளுங்கள். அதாவது படிப்பது, வெளியில் செல்வது அல்லது சமைப்பது போன்று எதாவது ஒன்று அவர்களை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் மாமியாரும், மாமனாரும் உங்களை சொந்த மகள் போலவே உணர துவங்கலாம். தற்செயலாக, அவர்களது வாழ்க்கையை பற்றியது சுவாரஸ்யமானதாக இல்லை என நீங்கள் நினைத்தால், அதை வெளிக்காட்டி கொள்ளாமல் கொஞ்சம் ஆர்வம் காட்ட முயற்சியுங்கள். பின் உங்கள் ஆர்வம் படிப்படியாக அதிகரித்து விடும். இதன் மூலம் நீங்கள் அவர்களின் மீது எவ்வளவு அக்கறை எடுத்து கொள்கிறீர்கள் என்பதை உணர்வார்கள்.

4 சில நேரங்களில் அவர்களோடு வெளியில் செல்லுங்கள்

நீங்களும் உங்கள் மாமியாரும் ஷாப்பிங் செல்ல விருப்பம் உடையவர்கள் என்றால், யோசிக்காதீர்கள் ஷாப்பிங் போகும் போதெல்லாம் சேர்ந்தே செல்லுங்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து வெளியில் செல்லும் போது, உங்களுக்குள்ளான நெருக்கம் அதிகமாகும். உங்களுக்கு அவர்களுடன் செல்ல ஆர்வம் இருந்தால், நீங்கள் இருவரும் சேர்ந்து நடைப்பயிற்சி செய்வது, உடல் பயிற்சி செய்வது என அனைத்தையும் செய்யலாம். இது உங்களுக்குள்ளான நெருக்கத்தை அதிகரிக்கும். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நெருக்கத்தை கொண்டுவருவது நிச்சயம்.

5 மன்னிப்பு கேட்பதற்கு தயாராக இருங்கள்

நீங்கள் ஒரு தவறு செய்துவிட்டால் அல்லது கொஞ்சம் தவறாக புரிந்து கொண்டால், மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்க வேண்டும். மிகுந்த நேர்மையுடன் மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்கும் ஒரு நபர் எப்போதும் சிறியவர் கிடையாது. தவறை உணர்ந்த யார் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கலாம். மன்னிப்பு கேட்பதால் நீங்கள் உங்கள் நிலையை இழப்பதாக உணராதீர்கள். நீங்கள் அப்பாவித்தனமாக செய்தது என்றால், தயங்காமல் அப்போதே மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் அவர்களிடம் இதை பற்றி பேசி, விளக்கம் கொடுங்கள்.

உங்களுடைய மாமனார் மற்றும் மாமியாரிடம் எப்போதும் நல்ல உறவுடன் இருப்பது, நீண்ட காலத்திற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். உண்மையில், மற்றொரு தாயையும் தந்தையும் பெற்றதாகவே உணர்வீர்கள். இதை உங்கள் மாமனார், மாமியாரோடு நீங்கள் தொடர்புகொள்ளும் ஒவ்வொரு முறையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் எப்பொழுதும் உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon