Link copied!
Sign in / Sign up
1
Shares

நாராயணா! இந்த கொசு தொல்லை தாங்கலடா!

பண்டைய காலத்தில் கொசுவை விரட்ட நொச்சி எனும் மூலிகை இலையை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இன்றோ, சார்ஜில் போடும் காயிலும்... கொசு அடிக்கும் பேட்டும் என நவீனத்தின் வளர்ச்சியை நாளுக்கு நாள் கொசு ஒழிப்பின் மூலமும் நாம் கண்டு வருகிறோம். விளைவு, கொசுவை ஒரு அடி அடித்தால்... அழகாக அதுவும் பறந்து செல்கிறது. அட ஆமாங்க, முன்னாடியெல்லாம் கொசுவ அடிச்சா பொத்துன்னு விழும். இன்னைக்கு, கொசுவ ஒரு கன்னத்துல அடிச்சா, அது இன்னொரு கன்னத்தையும் நம்ம கிட்ட காட்டுது. மூட்டை பூச்சிய கொல்லுற நவீன மெஷின பயன்படுத்துறது போல ஆச்சு நம்ம வாழ்க்கை. கொசுவர்த்தி கொளுத்தி வச்சுட்டு கொஞ்சம் நகர்ந்தா, அந்த கொசுவர்த்தி மேலயே ரெண்டு கொசு உட்கார்ந்து இருக்குங்க. என்ன பண்றது?

அதனால, கொசுவ எப்படி எல்லாம் இயற்கை வழிமுறையில் கொல்லலாம் என நாம் பார்க்கலாம்... சரியா?

கற்பூர எண்ணெய்:

கற்பூரம் என்றாலே கப்புனு பத்திக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. அப்படி இருக்க... இதன் வாசனையானது, கொசுவை மட்டும் விட்டு வைக்குமா என்ன? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தாங்க. உங்கள் வீட்டின் எல்லா ஜன்னல் மற்றும் கதவுகளை சாத்திவிட்டு அதன் ஓரங்களில் ஏற்றப்படாத கற்பூரத்தை 15 முதல் 20 நிமிடத்திற்கு வைத்திருங்கள். இதனால், கற்பூரத்தின் வாசனை பிடித்த உங்கள் வீட்டின் கொசு துண்டை கானோம்...துணியை கானோம்... என ஓடுவது உறுதி.

துளசி:

உங்கள் வீட்டு துளசி மாடத்தை தினந்தினம் நீங்கள் சுத்த, அப்போது காலின் அசைவினால் கொசு கடிக்க மறந்தது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஒருவேளை துளசியை கண்டு கூட பயந்து அது உங்களை கடிக்க மறுக்கலாம் அல்லவா? அட ஆமாங்க... இந்த துளசிக்கு, கொசுவின் முட்டையை அழிக்கும் பண்பு இருப்பதால், கர்ப்பம் தரித்த கொசு காணாமல் போவது உறுதி.

உலர்ந்த ஐஸ்கட்டி:

நாம் வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடினால் கொசுவானது பறந்து வரக்கூடும். இதனால் பல வித பிரச்சனைகள், உங்கள் உடலில் உண்டாகிறது. இதே போல் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் இன்னொரு பொருள் என்ன தெரியுமா? அது தான் ஐஸ்கட்டி. அதனால், ஒரு கண்டைனரில் உலர்ந்த ஐஸ்கட்டியை வைத்து விட்டு வந்துவிடுங்கள். இந்த ஐஸ்கட்டி வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொசுவை ஈர்க்க, கொசு அதன் உள்ளே செல்வதை நீங்கள் கண்களால் கண்டிடலாம். எல்லா கொசுவையும் உள்ளே விட்டு மூடிவிடுங்கள். எலிப்பொறியில் டிபனை பார்த்த எலிபோல் கண்டைனர் உள்ளே சென்ற கொசுவிற்கு கருமாதி செய்திடலாம்.

பூண்டு:

நெடி ஏறும் வாசனை கொண்ட பூண்டு, கொசு புழுவுண்ணி என்னும் பண்பையும் கொண்டிருக்கிறது. அதனால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். பூண்டை நன்றாக அரைத்து கொள்ளுங்கள். அதன்பின்னர், சிலமணி நேரம், அதனை தண்ணீரில் கொதிக்க வையுங்கள். அந்த கொதிக்க வைத்த நீரை., ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து கொசு அதிகமாக வரும் இடத்தில் ஸ்ப்ரே செய்யுங்கள். இதனால், பூண்டு குழம்பு வைத்தால் கூட, அதில் கொசு உட்கார பயப்படுவது உறுதி.

மிளகு கீரை:

இந்த மிளகு கீரை அடங்கிய ஸ்ப்ரே, கொசுக்களுக்கு எமனாக இருக்கிறது. ஆனாலும், இந்த ஸ்ப்ரே அடிக்கும் போது உங்கள் உடல் மீது கவனம் இருத்தல் அவசியம். இல்லையேல், உங்கள் சருமத்தை பார்த்தே உங்களால் சகித்துக்கொள்ள முடியாது... அருவருப்பு உண்டாகலாம். 

தேயிலை மர எண்ணெய்:

கொசுக்களை கொல்லும் இந்த தேயிலை எண்ணெய்க்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சையை எதிர்க்கும் பண்பு இருக்கிறது. இந்த எண்ணெய்யின் ஒரு சில சொட்டுக்களை... ஒரு சில துளிகள் நீருடன் கலந்து உங்கள் சருமத்தில் தேய்த்தால் கொசு உங்கள் மீது ஒருதலை காதல் கொள்ள பயந்து பத்தடி தள்ளி நின்றே உங்கள் அழகை ரசிக்கும்.

கொசுவை விரட்டும் செடிகள்:

நொச்சி போன்ற பல செடிகளுக்கு கொசுவை விரட்டும் பண்பு அதிகமிருக்கிறது. கிராம புறங்களில், இந்த நொச்சி செடியை கொண்டு புகை மூட்டம் போட்டு பலரும் கொசுவை விரட்டுகின்றனர். இந்த நொச்சி செடி, மூலிகை தன்மை கொண்ட ஒரு செடியும் கூட... இது போல் கொசுவை விரட்ட பல செடிகள் வளர்ந்து அன்புடன் கிள்ள காத்திருக்கிறது. அவற்றின் பயன் தெரிந்து, நீங்களும் கொசுவை விரட்ட முயல்வது மிக நல்லது.

என்ன நண்பர்களே! கொசுவை விரட்டுவது எப்படி என பார்த்தீர்களா? இந்த தகவல், உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நான் நம்புகிறேன். கொசு தான என சாதாரணமாக இருந்து விடாதீர்கள். மூலையில் ஒளிந்திருக்கும் கொசுவை விரட்ட வேலைக்காரியே 12 இலட்சம் கேட்கும் போது நாளடைவில் உண்மையிலே ஒரு கோடி கேட்டால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.  

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon