நாதஸ்வர இசை கலந்த தென்றல்
வீசும் வேளையில்..,
தெய்வம் தந்த வீட்டில் (பள்ளி, கல்லூரியில்),
இருமலர்களாய், நாம் இருக்க...
உள்ளம் கொள்ளை போகுதே!
உன் அன்பில்...
நெஞ்சம் பேசுதே!
தினம் உன்னைப்பற்றி...
கல்லூரி கனவுகளுடனும்,
புது புது அர்த்தங்களுடனும்,
சாமி போட்ட, மூன்று முடிச்சு
சொந்தமாய்...
உன்னுடன் வாழ ஏங்குதே!
என் உள்ளம்...
உறவுகள் தொடர்கதை போல்..,
புதுக்கவிதையாய்...
நம் நட்பு வம்சமாய் வளர,
என் வாழ்க்கை உன் நட்புடன் அமைய
விரும்புகிறது என் உள்ளம்...
மயக்கம் என்ன..!
என் அன்புத் தோழியே..!
முப்பொழுதும் உன் நினைவுகளுடன் நான்...
