Link copied!
Sign in / Sign up
0
Shares

நாங்கெல்லாம் அப்போவே அப்படி...

தில்லிக்கு திப்பு சுல்தான் என்றால், உங்கள் வீட்டுக்கு உங்களுடைய மகன்/மகள்/பேரன்/பேத்தி தான் ராஜா/ராணி என்பதில் மாற்று கருத்து ஏது. குழந்தைகளின் சின்ன, சின்ன விஷயங்களை கூட பெற்றோர்கள் ரசித்தாலும், ஓர் குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால் போதும்... உடனே, "இங்க போகக்கூடாது... அங்க போகக்கூடாது... இப்படி பண்ணக்கூடாது...அப்படி பண்ணக்கூடாது..." என ஆயிரத்து எட்டு அட்வைஸ் மழை பொழிவார்கள். ஆனால், உண்மையிலேயே இது சரிதானா? என பார்த்தால், இல்லை எனவும் ஒரு கோணத்தில் நாம் சொல்லலாம்.

அட ஆமாங்க, படிக்கிற வயசுல படிக்கனும்... விளையாடுற வயசுல விளையாடனும்னு சொல்வாங்க. இன்னைக்கு எங்கங்க புள்ளைங்க விளையாட இடம் இருக்கு. இருந்த இடத்தை எல்லாம் பிளேட் போட்டு வீடு கட்டிட்டு, பிள்ளைங்க வீடியோ கேம் விளையாடுறத பெருமையா பார்க்குறது சரிதானா? குறிப்பிட்ட வயசு வரைக்கும், குழந்தைய மண்ணுல விளையாட விடனும்ங்க. இல்லைன்னா, மண் வளம் பத்தி வரலாறு புக்ல படிக்கும் போது திருதிருன்னு முழிச்சாலும் முழிக்கும் உங்க குழந்தை.

நான் மண்ணுல விளையாடி இருக்கனானு கேட்குறீங்களா? அட போங்க தம்பி, நாங்கெல்லாம் மண்ணுல விழுந்து அடிபடாத இடமே உடம்புல கிடையாது. எல்லாமே வீர தழும்பு தான். அது ஒரு கனா காலம்னும் சொல்லலாம். அதவிட பெரிய விஷயம் என்னென்னா, மண்ணுல விழுந்து அம்மா மருந்து போட்டுவிடுவாங்கன்னு போனா... அன்பு தொல்லையால நாலு அடி வைப்பாங்க பாருங்க. ஹும், அதுக்கு மண்ணுல விழுந்த அடியே பரவாயில்லைன்னு தோணும். என்ன செய்றது சொல்லுங்க... ஒரே குஷ்டமப்பா...ஸாரி, கஷ்டமப்பா...

அதுக்கெல்லாம் சேர்த்து கனவுல பைசல் பண்ணுவோம்ங்க. அட ஆமாம், குத்து சண்டை பார்த்துட்டு குடுப்போம் பாருங்க குத்து, அப்பா அம்மாவுக்கு... அந்த நிமிஷம் ஜான் சீனாவா மாறி போட்டு புரட்டி எடுப்போம்னா பார்த்துங்களேன். நாங்க கனவுல அடிக்கிறோமா...இல்ல நிஜத்துல அடிக்கிறோமான்னு கூட அவங்களுக்கு டவுட் வரும்ங்க. காலையில கிளம்புனதும் அத சொல்லி சிரிப்பாங்க. நாங்களும் சேர்ந்து சிரிப்போம். 

எல்லா வயசுலயும் கேட்குற ஒரு டயலாக் என்ன தெரியுமா? பிளஸ் டூ வரைக்கும் நல்லா படி. அதுக்கப்புறம் உன்னோட லைப்பே மாறும்னு சொல்வாங்க. நாங்களும் உருண்டு புரண்டு பிளஸ்டூல நல்ல மார்க் எடுத்தா, ஊருக்கு நாலு பேரு நல்லது செய்ய வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க. அவங்க எந்திரன் 2.0 மாதிரிங்க. சொன்னதையே சொல்வாங்க. அது என்னன்னு கேட்குறீங்களா? எஞ்சினியரிங் படிக்க வைங்க... பிரைட் பியூச்சர் இருக்குன்னு தான். தக்காளி, அவங்க அந்த வார்த்தையை சொல்லும்போது வீட்டுலயே முதல்ல கரண்டு இருக்காது.

நாமலும் எஞ்சினியரிங்னா படத்துல பார்க்குற மாதிரின்னு நினைச்சுப்போம். பெரியவங்க சொன்ன அந்த வார்த்தை, "பிளஸ்டூ வரைக்கும் நல்லா படி...காலேஜ் என்ஜாய் பண்ணலாம்..." இது இனிமேல் தான் நம்ம வாழ்க்கையில ஆரம்பிக்க போற பீலோட காலேஜ் கட்டிடத்த அன்னாந்து பார்ப்போம். அப்புறம் தான் தெரியும்... இது கும்கி பட டப்பிங்க்னு...

அட ஆமாங்க, பிளஸ்டூ வரைக்கும் கஷ்டப்பட்டு படிச்சோம்னு வச்சுங்க. அதுவே பழகிடும். அவ்வளவு தான் எஞ்சினியரிங்...

முதல் நாளு இன்ட்ரோ கொடுக்குறதுல்ல ஓடுனாலும், அதுக்கப்புறம் ராக்கிங்கு, பர்ஸ்ட் டெஸ்டு, செகண்ட் டெஸ்டு, செமஸ்டர்னு போட்டு புளிஞ்சு எடுப்பாங்க. இடையில, எடைக்கு தேவையான அசைன்மெண்டும் சேரும். இதுக்கு பிளஸ்டூவெ இன்னும் நாலு வருஷம் சேர்த்து படிக்கலாம்னு தோணும். ஆனாலும், கல்லூரியில கண்டிப்பா ஒரு நாலு நண்பர்கள்... உயிரினும் மேலான நண்பர்கள் கிடைப்பாங்க. அவங்க உங்களோட லைப்ல கடைசிவரைக்கும் வருவாங்க.

இதுல பர்ஸ்ட் லவ் பீலிங்கு ஒருபக்கம் ஓடும். சொல்ல மறந்துட்டனே... காலேஜ்ல சேரும்போது "மின்னலே" மாதவன் மாதிரி கெத்தா திரிவோம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பார்த்திங்கன்னா... போன் லைப்ரரி முழுக்க லவ் சாங்கா இருக்கும். அப்புறம் பார்த்திங்கன்னா, "யம்மா யம்மா காதல் பொன்னம்மா..."ன்னு ஒரே லவ் பெய்லியர் சாங்கா கேட்டு இருப்பாங்க... 

நாலாவது வருஷம் பிராஜெக்டுனு அலைஞ்சு திரிஞ்சு செஞ்சு வச்சு இன்டெர்னல் மார்க் வாங்குனா, கேம்பஸ்ன்னு ஒரு கொடிய மிருகம் உள்ள நுழையும். 2000 பேர் அட்டென்ட் பண்ண அதுல 5 பேர அவங்க கம்பெனிக்கு ஆள் எடுப்பாங்க. அதையும் தாண்டி, புனிதமான ஆப் கேம்பஸ்லாம் அட்டென்ட் பண்ணி பட்டதாரியா வெளில போனா... வேலை கிடைச்சுட்டான்னு பார்க்குறவங்க பூறா கேட்பாங்க. அதுலயும் நாம வேல தேடுற நாள் அதிகமாக...அதிகமாக...ரோட்டுல போறவங்க கேட்குற கேள்விக்கு வீட்டுல உள்ளவங்க பதில் சொல்ல முடியாம நம்மள வறுத்து எடுப்பாங்க.

          

இவ்வளவு தான் வாழ்க்கையான்னு நினைக்கிறப்போ நமக்கு புடிச்ச மாதிரி ஒரு வேலை கிடைக்கும். அதுக்குள்ள சோகம், துரோகம், அழுகை, சலிப்பு, வெட்கம் இதெல்லாமே நம்மள பார்த்து சிரிச்சு முடிச்சுடும்.

எஞ்சினியரிங்க் உங்க பிள்ளையை படிக்க வைக்கிறவங்களுக்கு சின்ன டிப்ஸ்... அவன்/அவள் காலேஜ் படிக்கும்போதே ஒரு கோர்ஸ் படிக்க வைங்க. அந்த கோர்ஸ்ல அவங்க தான் கில்லின்னு இந்த உலகத்துக்கு நிரூபிச்சிட்டா... கண்டிப்பா காலேஜ் முடிச்சதும் வேலை கன்பார்ம். எப்போதும் ஒரு விஷயத்த செய்யும்போது ஒரு தடவைக்கு, பல தடவை யோசிங்க. உங்களோட குழந்தைங்க எதிர்ப்பார்க்குற வாழ்க்கையில எதிர்க்காலத்துல நிம்மதி இருக்கும். ஆனால், அந்த  நிலைய அடையுற வரைக்கும் அவங்க கஷ்டப்படுவாங்க. கூடவே சப்போர்ட்டா இருங்க. தோல்வியெல்லாம் தோள்ல இருந்தாலும், சும்மா துடைச்சு விட்டு போயிட்டே இருப்பாங்க...

நாளைக்கு அவங்களும் ஒரு சாதனையாளரா உருவாகலாம்.

கிரிக்கெட் பிளேயரா, கபடி வீரரா, நீச்சல் வீரரா, பாடகரா, டான்சரா, எஞ்சினியரா, டெக்னீஷியனா, சினிமாட்டோகிராபரா, கிராபிக்ஸ் டிசைனரா...இப்படி தன் திறமைய நிரூபிச்சு வாழ்க்கையில ஜெயிப்பாங்க...கனவுக்காக வாழ்க்கையை தொலைச்சாலும் சரி...வாழ்க்கைக்காக கனவை தொலைச்சாலும் சரி... முயற்சி என்பதும், விருப்பம் என்பதும் 100 சதவிகிதம் வேண்டும்ங்கிற மனநிலையோட செயல்படுங்க...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon