Link copied!
Sign in / Sign up
0
Shares

நாய் கடிக்க ஆசைப்படுபவர் இத்தனை பேரா?

எந்த தெருவில் நுழைந்தாலும் சரி. நம்மை முதலில் வரவேற்பது தெருவில் சுற்றும் நாய்கள் தான். அதுவும், நாம் எதிர்பாராமல் செல்லும்போது துரத்தும் நாயிடமிருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. "கல்லை கண்டால் நாயை கானோம்... நாயை கண்டால் கல்லை கானோம்..." என்பது பழமொழி. அதுபோல், நாயை பார்த்து நாம் பயப்புடும்போது தான் அது நம்மை துரத்தவே செய்யும். ஒருவேளை, நாம் தைரியமாக நின்றோம் எனில் சத்திய சோதனையாக அது நம்மை பாய்ந்து வந்து கடிப்பதுமுண்டு.

அவ்வாறு நாயை பார்த்து பயந்து ஓடுபவர்களை, நாய்கள் நாளுக்கு நாள் கடிக்கும் அவலம் அதிகமாக இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றின் மூலம் நமக்கு தெரியவருகிறது.

லண்டனின் யுனிவர்சிட்டி ஆப் லிவர்பூல், 694 பேரிடம் நடத்திய கருத்து கணிப்பின் மூலம் இதை தெரியப்படுத்தி உள்ளது.

அட ஆமாங்க,

நாய் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் எனும் கருத்து கணிப்பை லண்டன் மாநகரம் நடத்தியது. இந்த கருத்து கணிப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால்... நாய் கடித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட அந்த நாயையும் அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். கிராமத்தில் பார்க்கலாம். நாய் கடித்தால், அந்த நாயை ஒரு குறிப்பிட்ட நாளுக்கு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டுமென சொல்வார்கள். அது போல்தான்...

அத்துடன் ஒரு கூடுதல் கேள்வியும் சேர்த்தே கேட்கப்பட்டது. அது என்னவென்றால், "உங்களை கடித்த அந்த நாய், உங்கள் வீட்டு நாயா?" என்பதே ஆகும்.

இதுபோல் பத்து வகையான வித்தியாச கேள்வியை கேட்டு இந்த கருத்துக்கணிப்பை அவர்கள் ஆராய்ந்தனர். இந்த கருத்துக்கணிப்பில், பெண்களை விட ஆண்களே அதிகம் கடி வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

அதேபோல், சொந்தமாக நாய் வளர்த்தவர்களை மூன்று தடவைக்கு மேலும் கடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மருத்துவமனை கணக்கெடுப்புப்படி, 1 இலட்சம் மக்கள் தொகையில் 740 பேரை நாய் கடித்திருப்பதாகவும், இது மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

மூன்று நாய்க்கடியில் ஒரு நாய்க்கடிக்கே மருத்துவ உதவி தேடி வருவதாகவும் மருத்துவமனையில் சொல்லப்படுகிறது.

இருப்பினும், லண்டனின் ஒரு பகுதியில் நடத்தப்பட்ட ஓர் இட கருத்து கணிப்பு ஒட்டு மொத்த மக்களின் முடிவாகாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

நாய் கடித்த நபர்களுள் நாமும் ஒரு ஆளாக கூட இருக்கலாம் அல்லவா? உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்துக்கொள்ள முயலுங்களேன். நாயை நீங்கள் துன்புறுத்தினால், நாளை எண்ணவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உங்களை நாய் துன்புறுத்தினால் நாளை எண்ண வேண்டியது அவசியம். இன்று நாய் கடிக்கு ஊசிகள் வந்துவிட்டதால், தொப்புளை சுற்றி ஊசி போடுவது போன்ற பேராபத்துகள் நம்மால் தவிர்க்கப்படுகிறது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon