Link copied!
Sign in / Sign up
8
Shares

முத்தமே, எத்தனை வகை நீ?

அன்பின் ஆழத்தின் சுவைக்கு அடித்தளம் அமைப்பது இந்த முத்தம் தான். கணவன், மனைவி தரும் முத்தத்தின் நிலை என்பது புரிதலுணர்வை தருகிறது. முத்தம் தருவதால் என்ன பிறக்கிறது? மனைவியவள் கணவனை காலைப்பொழுதில் கட்டி அணைத்து, கண் இமைக்கு மத்தியில்., நெற்றியில் முத்தம் தருவதனால், 'நான் உன்னுடன் இருக்கிறேன்...இந்த நன்னாளில்...' என்னும் நம்பிக்கை பிறக்கிறது. மாலை பொழுதென்பது மனம் விட்டு பேசுவதற்கு உகந்த ஒரு பொழுதாக அமைய, இதனால் இரவின் மடியில் இனிமையான புரிதலுடன் தூக்கமும் பிறக்கிறது. கட்டிலறையில் தரப்படும் முத்தத்தினால், தொட்டிலில் குழந்தை விளையாடும் சூழ்நிலை பிறக்கிறது.

இப்படி முத்தங்கள் பலவற்றை ஈன்றெடுத்தாலும், எந்த முத்தத்தின் சுவை, எப்படி இருக்கும்? என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

நெற்றி முத்தம்:

இது மிகவும் அழகான முத்தமும் கூட... ஒருவரின் அழகை கண்களால் வருணிப்பதை காட்டிலும் இதழ் பதித்து நெற்றியில் முத்தமிடுவதன் மூலம், நீ இன்றி வேறு யார் அழகு?இந்த உலகில் என்பதை ஒரு பெண்ணவள் மனம் புரிந்துக்கொள்ள முற்படுகிறது.

கைகளில் தரும் முத்தம்:

கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமாதானமாக இந்த முத்தம் அமைகிறது. இதனால், கண்ணீரில் தொடங்கும் காதல், முத்தத்தின் நீரால் இனிதே முடிவடைய, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழும் சூழ்நிலை உருவாகலாம்.

எஸ்கிமோ முத்தம்:

கிஸ் அடிக்கும் போது மூக்கும் மூக்கும் இடிச்சுக்குமா? என சந்தேகம் வரலாம். ஆனால், மூக்குக்கு மூக்கு முத்தம் தருவது தான் இந்த எஸ்கிமோ முத்தம். இது உடலுறவுக்கு பாலமாகவும் குளிர்க்காலத்தில் அமைகிறது. மொட்டை மாடியில் நின்று, கணவன், மனைவி மூக்கு உரச காற்றுக்கு கூட உங்கள் காதல் மேல் பொறாமை வரலாம்.

பிரென்ஞ் முத்தம்:

இதயங்கள் இரண்டும் உரசும் முன்னே, இதழ் இரண்டும் இறுக்கி அணைத்து முத்தம் தருவது தான் இந்த பிரென்ஞ் கிஸ். உணர்வுகளை வெளிப்படுத்த வெளிநாட்டினர் பொது இடங்களில் கூட கொடுக்கும் முத்தம் இது. இதனால், கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஓர் நல்ல புரிதலுணர்வு உண்டாகிறது.

ஒற்றை உதடு முத்தம்:

ஒருவரின் ஒற்றை உதட்டை இன்னொருவர் ஆதிக்கம் செய்யும் முத்தம் இது. இந்த முத்தம் உடலுறவுக்கான உன்னத நிலையை கட்டிலுக்கு முன்னே தொடங்கிட, தொட்டில் வரைக்கும் அது செல்லும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

காதுமடல் முத்தம்:

இந்த முத்தம் மிகவும் ஸ்பெஷலானது. உங்கள் கணவனிடம் மட்டும் ஏதாவது சொல்ல விரும்புபவர் சொல்லால் மட்டுமல்லாது... இதழாலும் அவர் காதுகளை கடித்திட இந்த முத்தம் உதவுகிறது. இதனால், ஒரு வித இன்பமயமான உலகத்தில் நுழைந்தது போன்ற உணர்வு உங்களுக்குள் ஏற்படும்.

வண்ணத்துப்பூச்சி முத்தம்:

இந்த முத்தம்... ஒருவன், ஒருவளை கற்பனை கண்களால் பார்ப்பதனால் உண்டாகிறது. இந்த முத்தம், கணவன் மனைவி தொலைவில் இருக்கும் சமயத்தில் கடல் தாண்டி கண்களாலே கொடுக்கப்படும் ஒரு முத்தமும் கூட.

கன்னத்தில் தரும் முத்தம்:

இந்த முத்தம் இன்றைய நாளில் குறைந்திருக்கிறது என நினைக்கிறேன். அட ஆமாங்க, பிரன்ஞ் கிஸ்லாம் கொடுக்க பழகிட்டோம். அதனால, இந்த முத்தத்தை எங்காவது நெடு தூரம் பயணம் சென்றாலோ... நீண்ட நாளுக்கு பிறகு ஒருவரை சந்தித்தாலோ கொடுப்பதோடு நிறுத்த தொடங்கிவிட்டோம் போலும்...

இரகசிய தகவல் பரிமாற்ற முத்தம்: 

இந்த முத்தம் என்பது கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்தரங்கத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு முத்தமாகும். இந்த முத்தத்தின் சத்தம் எவ்வளவு என தெரியாவிட்டாலும், இதன் பின்னால் இருக்கும் இரகசியம் கணவன் மனைவிக்கு மட்டுமே புரியக்கூடிய ஒன்றாகும்.

நாவில் தரும் முத்தம்:

கணவன், மனைவியின் புரிதல் தாகத்தை தீர்க்கும் இந்த முத்தம், நாவோடு நாவை உரசுவதால் முழுமையடைகிறது.

கவர்ச்சி முத்தம்:

இந்த முத்தம்... ஒருவன், ஒருவளை மோகம் கொண்டு தூண்டும் முத்தமாகும். இந்த முத்தத்தால், உச்சி முதல் பாதம் வரை ஓர்  உன்னத உணர்வு உடலுறவால் உண்டாகக்கூடும்.

மார்பில் தரும் முத்தம்:

இந்த மார்பில் தரும் முத்தத்தால் ஒருவர் மனதை நேரடியாக தொடுவது போன்றதோர் உணர்வை உண்டாக்கும். மேலும், இந்த முத்தம் ஒட்டுமொத்த சுகத்தை தர, உடலுறவுக்கு அடித்தளம் அமைத்திட வாய்ப்பிருக்கிறது.

இப்படி, ஒவ்வொரு முத்தத்திற்கும் ஒவ்வொரு சுவையும், குணமும் உண்டு. ஆகையால், அழகிய உறவில் முத்தம் தாருங்கள். வாழ்வை அனுசரித்து வாழ்வதன் மூலம் பதினாறு செல்வம் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon