Link copied!
Sign in / Sign up
24
Shares

முதுகு மற்றும் இடுப்பு வலியை மாயமாக்கும் ஒரு மந்திரம்..!

பெண்களே! நீங்கள் எந்த வயதினராயினும் உங்களுக்கு பலமான இடுப்பெலும்பு எப்பொழுதும் தேவை. நீங்கள் குழந்தையை பிறந்து தவழ்ந்து நடக்கையில், பூப்படைகையில், திருமணமாகி கருத்தரிக்கையில், குழந்தைக்கு தாயாகையில், முதுமையில் முதுகு வளையாதிருக்க என எல்லா காலகட்டங்களிலும், உங்கள் உடலின் இருப்பெலும்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது மிக அவசியம்.

பூப்பெய்திய பெண் வலிமையான சரீரத்துடனும், கர்ப்பமடைந்த பெண் வலிமையான இடுப்பெலும்புகளுடனும், தாய்மையடைந்த பெண் ஆரோக்கியமான உடலுடனும், வயது முதிர்ந்த பெண்கள் வலிமையான முதுகு மற்றும் இடுப்பு எலும்புகளுடனும் இருக்க வேண்டியது அவசியம்; அப்படி இருந்தால் மட்டுமே யாருடைய உதவியும் இன்றி எக்காலத்திலும் பெண்களால் ஆரோக்கியமாக வாழ இயலும்..!

ஆகவே, உங்கள் இடுப்பெலும்பை பலமாக்கி, முதுகு மற்றும் இடுப்பு வலியை தூரம் விரட்டும் ஒரு சிறந்த உணவுப் பொருளை பற்றி இப்பதிப்பில் படித்தறியலாமா நண்பர்களே??

தேவையானவை..

வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, உளுந்து – ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது), பூண்டு – 20 பல்லு, பச்சரிசி – அரை டம்ளர், வெல்லம்/கருப்பட்டி – தேவைக்கேற்றாற் போல், தேங்காய்- ஒரு மூடி

செய்முறை

1. உளுந்து, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் சேர்த்து 6 டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) நீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். (குக்கரினுள்ளே பாத்திரம் வைத்து தான் மேற்கண்டவற்றை வேகவைக்க வேண்டும்; இது அடிப்பிடித்துவிடும் வாய்ப்பைக் குறைக்கும், மேலும் நீரானது வெளியே வந்து விடும்.) 

2. பின்னர் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது நீர் ஊற்றி பாகு போன்று காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும்; இத்தயாரிப்புகளோடு, தேங்காயினை அரைத்து, அதிலிருந்து தேங்காய்ப்பாலும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. ஏற்கனவே, வேக வைத்த பருப்பு மற்றும் வகைகளை நன்கு மசித்து விட்டு காய்ச்சிய வெல்லப்பாகு, அரைத்த தேங்காய்ப்பால் இரண்டையும் மசித்த கலவையில் ஊற்றி சூடான கஞ்சியாக உட்கொள்ளவும்; இதில் தேங்காய் துருவி போட்டும் உட்கொள்ளலாம்... (சர்க்கரை நோய் குறைபாடு உள்ளவர்கள், வெல்லம் மற்றும் தேங்காய் போன்ற இரண்டையும் தவிர்த்து விடலாம்; உங்களுக்கு செரிமானப்பிரச்சனை இருந்தால், தேங்காயை மட்டும் கஞ்சியில் தவிர்த்து விடலாம்.)

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon