Link copied!
Sign in / Sign up
45
Shares

முதல் வருட திருமண வாழ்க்கையை நினைத்து நீங்கள் மிஸ் செய்ய கூடிய 7 விஷயங்கள்

உங்களின் முதல் வருட திருமண வாழ்வு, எப்போதும் உங்கள் வாழ்க்கையின் சிறந்த வருடங்களில் ஒன்றாக இருக்கும். அப்போது நீங்கள் இருவரும் இளமையாக இருந்திருப்பீர்கள். பல விஷயங்கள் வேடிக்கையாக இருந்திருக்கும். சின்ன சின்ன தவறுகள் கூட எளிதில் மன்னிக்கவும் மறக்க கூடியதாகவும் இருந்திருக்கும். நீங்கள் நேசிப்பவரின் அருகில் காலையில் எழுந்திருக்கும் மகிழ்ச்சியை எதனுடனும் ஒப்பிட முடியாது. ஆனால், காலங்கள் செல்ல செல்ல இந்த உற்சாக உணர்வு மறைய துவங்கும். இங்கே உங்களின் முதல் வருட திருமண வாழ்வை நினைத்து நீங்கள் மிஸ் பண்ணும் 7 விஷயங்களை பார்ப்போம்.

1 உங்கள் தேனிலவு

ஒரு தம்பதியின் வாழ்வில் ஒரு அற்புதமான அனுபவம் என்றால் அது தேனிலவு தான். முதல் முறையாக நீங்கள் இருவரும் மட்டும் தனியாக செல்லும் ஒரு விடுமுறையாகும். அதுமட்டுமில்லாமல், நீங்கள் கணவன் மனைவி ஆன பின் ஏற்படும் முதல் அனுபவம். மேலும், நீங்கள் சந்திப்பவர்களிடத்தில் பெருமையாக உங்களை தம்பதியென அறிமுகப்படுத்தி கொள்வீர்கள். வீட்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தால், உங்கள் இருவருக்கும் இது ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்தும்.

2 புதிய பட்டங்கள்

இது ஆண்களை விட பெண்களுக்கு தான் மிகவும் பொருந்தும். திருமணத்திற்கு பிறகு திருமதி என்ற மாற்றம் மட்டுமில்லாமல், உங்கள் கணவரின் பெயர் உங்கள் பெயருடன் இணைக்கப்படும். உங்கள் கணவரின் பெயர் கொண்டு உங்களை அழைத்தால், அது கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். முதலில், நீங்கள் யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று நினைத்து கொண்டு பதிலளிக்காமல் கூட போயிருப்பீர்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இது உங்களுக்கு பழகி விடும்.

3 உங்கள் மாமனார் மாமியார்

இது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். இதை கணிக்க முடியாது. உங்களது மாமனார் மற்றும் மாமியார், உங்களுக்கு மற்றுமொரு தந்தை தாயக இருந்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றலாம். அல்லது, சண்டை சச்சரவுகள் கூட ஏற்படலாம். அவர்கள் எப்படி நடந்து கொண்டாலும், நீங்கள் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

 
4 கணவன் மனைவி

திருமணமான சில வாரங்களுக்கு அந்த உற்சாகம் குறையாமல் இருக்கும். சில நேரங்களில் " எனக்கு திருமணம் ஆகி விட்டது " எனவும், " எனக்கு கணவர் இருக்கிறார் " என்றும் சந்தோஷப்படுவீர்கள். உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ அழைப்பதே ஒரு தனி உணர்வாக இருக்கும். அவர் " என் கணவர் " அல்லது " என் மனைவி " என்று சொல்லும் சுகம் அலாதியானது. ஆனால், இந்த உற்சாகமும் போக போக குறைந்து விடும் என்பதே உண்மை.

5 திருமணத்தை பற்றி பேசுதல்

இது எல்லோரும் செய்யக்கூடிய ஒன்று தான். கண்டிப்பாக நண்பர் அல்லது உறவினர் ஒருவரை சந்திக்கும் போது நீங்கள் இருவரும், உங்களின் திருமணத்தை பற்றி அவரிடம் சொல்வீர்கள். இதை நீங்கள் இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால், ஒரு வருடம் முடிந்த பிறகு இதை மற்றவரிடம் சொல்லிக்கொண்டு இருக்க மாட்டீர்கள்.

6 உங்களின் முதல் திருமண நாள்

இது உங்கள் வாழ்வின் சிறப்பான மறக்க முடியாத கொண்டாட்டமாக இருக்கும். நீங்கள் அதை மறக்க முடியாததாக மாற்ற பல திட்டங்களை வகுப்பீர்கள். மற்ற நாட்களை காட்டிலும் அந்த நாள் உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான நாளாக இருக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon