Link copied!
Sign in / Sign up
18
Shares

முதல் முறை தாயான பெண்களின் தொப்பையை குறைக்க எளிய 6 வழிகள்..!

பெண்கள் சிறுவயது முதலே பேணிக்காப்பது அழகைத்தான். என்னதான் அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், பெண்மை என்பது ஒரு பெண் பிறந்தவுடன் முழுமையடைவதில்லை. அவள் பூப்பெய்தி, திருமணம் முடிந்தும் முழுமையடையாத பெண்மை  எப்போது முழுமையடைகிறது தெரியுமா? அவள் பிரசவ வலியை தாங்கி ஒரு குழந்தைக்கு தாய் எனும் நிலையை அடையும் போதுதான். குழந்தை பேற்றிக்காக சிலவற்றை கடைபிடிக்கும் நாம், அதன் பின் அழகை பேண கடைபிடிக்க வேண்டியவற்றை மறந்துவிடுகிறோம். பிரசவத்தின் பின் கடைபிடிக்க வேண்டியவை பல இருந்தாலும் அவற்றுள் முக்கியமான ஒன்று பிரசவகால தொப்பை, அவற்றை குறைப்பதற்கான ஆறு வழி முறைகளை பார்ப்போம்.

1) போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு வெளியேறும்.

2) நம் முகம் தரையை பார்த்து இருக்குமாறு படுத்து இரு கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து காற்று புகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

3) பிரசவம் முடிந்த நான்கு மாதத்திற்கு பின் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை கடைப்பிடித்தும் அதிகப்படியான வயிற்று சதையை குறைக்கலாம். 

4) பேறுகாலத்தில் பின் உபயோகிக்கும் பெல்ட்களையும் பயன்படுத்தலாம்.

5) அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து, புரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவதன் மூலமாகவும் குறைக்க முடியும்.

6) வைட்டமின்கள் கே, எஸ், எ மற்றும் இ நிறைந்த கிரீம்களை வயிற்றின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம்.

பல இரசாயன கலப்பில் உருவான மருந்துகளை தவிர்த்து எளிய முறைகளை பின்பற்றி அழகையும் குழந்தையின் உடல் நலனையும் பேணி காப்போமாக!

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon