Link copied!
Sign in / Sign up
23
Shares

முதல் முறை தாயான பெண்களின் அழகை பராமரிக்க 6 வழிகள்

ஒரு குழந்தையை வைத்திருப்பது என்பது, நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத, மிக அழகான அனுபவங்களில் ஒன்றாகும். ஆனால் உங்களுடைய சிறிய குழந்தையை கவனிப்பதில், நீங்கள் உங்கள் தேவைகளை புறக்கணிப்பீர்கள். நீங்கள் அதிக நேரம் எடுத்து குளிப்பது கூட, உங்களுக்கு மிக ஆடம்பரமாக தோன்றும். முதல் முறை தாயாகி இருப்பதால், உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 

சில நேரங்களில் அது உங்களை எரிச்சலடைய கூட செய்யலாம். உங்கள் குழந்தைகளை கவனித்து கொள்கிறேன் என்று உங்களை கவனித்து கொள்ள தவறிவிடுவீர்கள். உங்கள் முடி, எடை, தோல் மற்றும் உடல் பொதுவாக கர்ப்ப காலத்தின் போது ஒரு மகத்தான மாற்றம் அடைவதால், அவற்றை சரி செய்வதிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குழந்தையின் மீது அக்கறை எடுத்து கொள்ளும் போதும், உங்களின் உடல் அழகை மேம்படுத்துவதற்கான 6 வழிகளை இங்கு பார்ப்போம்.

1 கருவளையங்கள் மற்றும் கண்களின் கீழ் வீக்கம்

நீங்கள் உலகில் ஒரு கவலையும் இல்லாமல் பல மணி நேரம் தூங்கிக்கொண்டிருந்த, அந்த இரவுகள் இப்போது மாறியிருக்கும். தூக்கமில்லாத இரவுகளில் இருந்து கிடைத்த கருவளையங்களை, கண்களின் கீழ் ஏற்பட்டிருக்கும் வீக்கமும், இப்போது உங்கள் புதிய அம்மாவின் தோற்றத்தின் ஒரு பகுதியாகி இருக்கும். இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் கே மற்றும் சி சில ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் சேர்த்து, சோர்வு மற்றும் குறைவான இரத்த ஓட்டம் ஆகியவை, இந்த புதிய தோற்றத்தை உங்களுக்குத் தருகிறது. ஆனால் அது அப்படியே அந்த வழியில் இருக்க வேண்டியதில்லை. அதை முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும், இதை சரி செய்ய சமச்சீர் மற்றும் சத்தான உணவு உதவுகிறது. காப்பி குடிப்பதை தவிருங்கள். தினமும் 8 நேரமாவது தூங்க முயற்சியுங்கள். உங்கள் குழந்தை தூங்கும்போது தூங்குவது நல்லது. சில நிமிடங்களுக்கு உங்கள் கண் இமைகள் மீது சில வெள்ளரிக்காய் துண்டுகளை வைப்பது அல்லது உருளைக்கிழங்கு சாறுகளில் பஞ்சை நனைத்து, கண்களின் மீது வைக்க கருவளையங்கள் குறையும்.

2 முகப்பரு

திடீரென்று உங்களுக்கு முகப்பரு ஏற்படுகிறதா? நீங்கள் அதெற்கு என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறீர்களா? அப்போ இவற்றை முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும். அதிக புரோஜெஸ்ட்டிரோன் உங்கள் தோலில் மிகவும் எண்ணெய் தன்மையை ஏற்படுத்துவதால், இது பருக்களை உடைய செய்யும். உங்கள் கர்ப்பம் முழுவதும் தெளிவான தோலுடன் இருந்தாலும் கூட, உங்கள் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் கர்ப்பத்திற்கு பிறகு முகப்பருக்களுக்கு இடமளிக்கலாம். ஆனால் கவலைப்படாதீர்கள், இதற்கென ஒரு எளிய தீர்வு எப்போதும் இருக்கிறது. குறைத்த இரசாயன கலப்பில் உருவான முகப்பூச்சு திரவம் அல்லது சோப்புகளை கொண்டு, தினமும் இரு முறை முகம் கழுவுங்கள். இது உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பசையை அகற்றும். மேலும், எண்ணெய் அதிகமிருக்கும் உணவிலிருந்து விலகிச் செல்ல முயற்சி செய்யுங்கள், ஏனெனில் அது உங்கள் தோலின் நிலையை மோசமாக்கி விடும்.

3 நிறமி / மங்கு

உங்கள் தோலில் காணப்படும் கரும்புள்ளி அல்லது திட்டுகள் மற்றும் உங்கள் தோலில் காணப்படும் நிறமிகளை கண்டு நீங்கள் கவலை அடையலாம். கர்ப்ப காலத்தில் எஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகமாக இருப்பதால் இது ஏற்படுகிறது. உங்கள் பிரசவம் முடிந்து உங்கள் ஹார்மோன்கள் குறைந்து பழைய நிலைக்கு வர சில காலம் எடுத்து கொள்ளும். நீங்கள் இந்த கரும்புள்ளிகள் அதிகமாகாமல் இருக்க, சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் உடல் பூச்சுகளை பயன்படுத்துங்கள். நீங்கள் வெளியில் செல்லவில்லை என்றாலும், இதை உபயோகியுங்கள். நீங்கள் உள்ளே இருக்கும் போது SPF 15 சன்ஸ்கிரீன் முயற்சிக்கவும், SPF 30 அல்லது 50 கூடுதல் பாதுகாப்பிற்காக வெளியே செல்லும் போது உபயோகியுங்கள். இவற்றை சரி செய்ய நீங்கள் தினசரி மாய்ஸ்சரைசர்களையும் பயன்படுத்தலாம்.

4 வரி தழும்புகள்

வரி தழும்புகள் உங்களை எரிச்சலூட்ட கூடிய ஒன்று மற்றும் இதை சரி செய்வது மிகவும் கடினம். இவை நீங்கள் கருத்தரித்த பின், உங்கள் குழந்தை வளர வளர உங்கள் உடல் தோலும் விரிவடையும். ஆனால் உங்கள் குழந்தை பிறந்த பிறகும், இவை உங்கள் உடலின் தோல் அப்படியே இருப்பதால் ஏற்படுகின்றன. ஆனால் நீங்கள் அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால், அவற்றை நீக்கிவிடலாம். ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான உடற்பயிற்சி செய்வதன் மூலம் இவற்றை நீக்க முடியும். அதிகப்படியான உடற்பயிற்சிகளை செய்யும் முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமான ஒன்று. நீங்கள் சில கிரீம் அல்லது இயற்கை எண்ணெய்களையும் உபயோகித்து, உங்கள் வரி தழும்புகளை சரி செய்யலாம்.

5 முடி உதிர்வு

உங்கள் பிரசவ காலத்தின் பின் முடி உதிர்வு என்பது சாதாரணமான ஒன்று. இது ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படுவது. உங்கள் கருத்தரிப்பின் பின் முடி உதிர்வது நின்றிருக்கும். இப்போது முடி அதனால் அதிகமாக உதிர துவங்கி இருக்கும். இப்போது உங்கள் முடியை ஆரோக்கியமாக்கவும், பராமரிக்கவும் தேங்காய் எண்ணெய் உங்களின் நண்பனாக செயல்படும். சீரான உணவு என்பது முடி உதிர்வை தடுப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. உணவில் நீங்கள் ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆப்பிள்கள், கிட்னி பீன்ஸ், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சேர்ப்பதன் மூலம் உங்கள் மயிர்கால்கள் வலுவடையும். உங்கள் கூந்தலை மென்மையான ஷாம்புக்களை கொண்டு அலசவும் மற்றும் கண்டிஷனரை உபயோகிக்கவும். முடியை அடிக்கடி அலசவும் கூடாது. வாரத்திற்கு 3 முறை போதுமானது.

6 வறண்ட சருமம், உதடு மற்றும் குதிகால் வெடிப்பு

இவை ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட கூடியவை. உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதம் எண்ணெய் போன்றவை சிறந்த பயனளிக்க கூடியவை. அவைகள் உங்கள் தோலை மென்மையாகவும் மற்றும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும். எனவே, உங்கள் சருமத்தில் ஏற்படும் எல்லாவிதமான பிரச்சனைகளையும் தவிர்ப்பதற்கு மாய்ஸ்சரைசர் மற்றும் எண்ணையை பயன்படுத்தவும். ஆரோக்கியமான உணவு கூட, உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இயற்கை முறைகளை பின்பற்றி ஆரோக்கியமான முறையில் அழகை மேம்படுத்துவோம்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon