Link copied!
Sign in / Sign up
51
Shares

முதல் மூன்று மாதம், அப்படி என்ன தான் முக்கியம்?

பெண்கள் கர்ப்பமாக இருப்பது உறுதியானால், குழந்தையின் ஆரோக்கியத்தில் இறுதி முடிவு எடுத்தல் அவசியமாகிறது. முதல் கோணலானால் முற்றிலும் கோணலாகி விடும் என்பார்கள். அது போல் தான் உங்கள் வாழ்க்கையும்... கர்ப்பிணிகள் தன் முதல் மாதத்திலிருந்தே ஆரோக்கியமான உணவை மட்டும் எடுத்து கொள்வது மிக நல்லது. இதனால், முதல் அனுபவமே முற்றிலும் சிறப்பாய் அமைய, உங்கள் மனம் பழகிக்கொள்ள தயாராகும் சூழ்நிலையும் உருவாகிறது.

அதுபோல் கண்டதை உண்டால் கருச்சிதைவும் உண்டாக வாய்ப்பிருக்கிறதாம். குழந்தை பிறந்த பிறகு... அவனிடம் சத்தான உணவை சாப்பிட சொல்ல நீங்கள் வற்புறுத்துவது போல், உங்கள் குழந்தையும் கருவறையில் இருந்துக்கொண்டே குரல் கொடுக்கிறான். "அம்மா, சத்தான உணவை சாப்பிடுங்கள்..." என்று....

நீங்கள் சாப்பிட தயாரா? அப்படி என்றால், இந்த தகவல் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் கைக்கொடுக்கும்.

புரத சத்து:

முதல் மூன்று மாதங்களில் புரத சத்து அடங்கிய உணவை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் குழந்தை வலுவுடன் கருவில் வளர தொடங்குகிறான். பீன்ஸில் இந்த புரத சத்து தேவையான அளவு இருக்கிறது. மேலும், மெல்லிசான இறைச்சி, கோழி, மீன், முட்டை, பால், பாலாடைக்கட்டி, தயிர், முதலியவற்றிலும் புரத சத்து காணப்படுகிறது. 

கால்சியம் சத்து:

முதல் மூன்று மாதங்களில் உங்களுக்கு கால்சியம் சத்து என்பது தேவைப்படுகிறது. இதனால், பிறக்கும் உங்கள் குழந்தையின் செல்லக் கடி, சுகமாக இருக்க, அவன் எலும்பும் வலுவானதாய் இருக்கிறது. பாலினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் இந்த கால்சியம் சத்து மிகுதியாக இருக்கிறது. மேலும், செறிவூட்டப்பட்ட தானியம், ஜூஸ், சோயா, பிரெட் முதலியவற்றிலும் கால்சியம் சத்து இருக்கிறது. செறிவூட்டப்பட்ட உணவை வாங்கும்போது தரம் பார்த்து, டாக்டரிடம் பரிந்துரை செய்து வாங்க வேண்டியது அவசியமாகும்.

இப்போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டிய ஒரு சில எளிதில் கிடைக்கும் உணவை பார்க்கலாம்.

பசலைக்கீரை:

இந்த கீரை கிராமத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. எல்லோர் வீட்டிலும் கொல்லைப்புறத்தில் வளர்ந்து கிடக்கும் ஒரு கீரையும் கூட. இந்த கீரையை குழம்பு வைத்து சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது. முருங்கை கீரை குழம்பு போன்றே இதன் சுவையும் நன்றாக இருக்கும். இந்த கீரையை முதல் மூன்று மாதங்களில் சேர்த்து கொள்வதனால், உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இரத்த ஓட்டம் பெருகுகிறது. இதில் பெருமளவில் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.

பாதாம்:

பாதாம் பருப்பு, கடைகளில் கிடைக்கும் ஒன்று என்றாலும், இதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு தெரியும் இதன் மதிப்பானது. என்றுமே இவன் கடைகளில் ராஜா தான். அதற்கு காரணம், அதிகளவில் புரத சத்தை கொண்டவன் தான் இந்த பாதாம் பருப்பு. ஆம், இந்த பாதாம் பருப்பை முதல் மூன்று மாதங்கள் பெரும்பாலான கர்ப்பிணிகள் சாப்பிடுவதன் மூலம், கருவில் உதைக்கும் குழந்தை வெளியில் வந்தும் ஆற்றல் நிரம்ப எட்டி உதைக்கிறான் கால்பந்தால்...

சிக்கன்:

ஒருசிலர் இருப்பதையும் சாப்பிடுவார்கள், பறப்பதையும் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட உணவு பிரியர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் சிக்கனை சிக்கலின்றி சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்கள் சிக்கன் சாப்பிடுவதால் இதில் இருக்கும் இரும்புசத்து உங்களுடைய காலை மயக்கம் மற்றும் சோர்வை போக்குகிறது. மேலும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். ஆனாலும், அளவுக்கு மிஞ்சி வாயில் அடைப்பதை தவிர்க்க வேண்டுகிறோம். 

ஆரஞ்சு பழம்:

கர்ப்பிணி பெண்கள், ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால்... அதில் இருக்கும் வைட்டமின் சி குழந்தை பிறக்கும்போது உண்டாகும் சிக்கலை தவிர்க்க உதவுகிறது. மேலும், இதனால் தாய் மற்றும் குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தியையும் சேர்த்து தருகிறது.

முட்டை:

இதில் புரத சத்து இருக்கிறது என்பதை ஒவ்வொரு வருட பாடப்புத்தகத்திலும் நாம் படித்து தெரிந்துக்கொண்டது தான். அப்படி இருக்க நான் சொல்லி வேற தெரிய வேண்டுமா என்ன? கர்ப்பிணிகள், தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் நன்மையை தரக்கூடும்.

மீன்:

என்ன தான் மீன் வெட்டும்போது பரிதாபம் வந்தாலும், அதை வாயில் விழுங்கும் வரை தான் மனம் மீனை நினைத்து கவலைக்கொள்ளும். அப்படி இருக்க, மீனின் சுவையை சொன்னாலே அதன்பின்னர் நா ஊறும் ஒருவருக்கு. இந்த மீனில் அப்படி என்ன தான் இருக்கிறது? இதையும் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. காரணம், உடம்பு ஒல்லியா இருந்தா உடனே வைட்டமின் டேப்லெட் எடுத்துக்கன்னு சொல்வாங்க. இந்த டேப்லெட்டை பிதுக்கி பார்த்தால் நன்றாக தெரியும். இதன் உள்ளே என்ன இருக்குமென...ஆம், இது திமிங்கலம் போன்ற மீனின் கல்லீரலில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இந்த மீன் எண்ணெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி மற்றும் ஏ உள்ளிட்ட ஊட்ட சத்துக்கள் இருக்கிறது. இருப்பினும், இந்த டேப்லெட்டை எடுத்து கொள்வதை விட நேரடியாக மீனை சாப்பிடுவது இன்னும் சிறந்தது என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அத்துடன், இந்த மீன் எண்ணெய் மாத்திரையை கர்ப்பிணி பெண்கள் டாக்டரின் ஆலோசனைக்கு பிறகு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மீன் சாப்பிடுவதால் அலர்ஜி உண்டாகுமெனில் இந்த மாத்திரையை நீங்கள் தவிர்த்திட அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் ஒரு சிலருக்கு தினமும் இந்த மாத்திரையை உட்கொள்ளும்போது பிரச்சனை ஏற்படலாம். அதனால், கட்டாயம் டாக்டரின் பரிந்துரை இன்றி மீன் எண்ணெய் மாத்திரையை எடுத்துக்கொள்ள முயலாதீர்கள். அதற்கு பதிலாக பிரெஷ்ஷான மீனை சமைத்து சாப்பிடுவது நலம்.

கர்ப்ப காலம் என்பது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. ஆகையால், உங்கள் குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை முதல் மூன்று மாதத்திற்கு சாப்பிடுங்கள். எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உணவையும் டாக்டரின் பரிந்துரை இன்றி சாப்பிடாதீர்கள். சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் கூட யாரோ ஒருவர் சொன்னதை கேட்டு சாப்பிடாமல், உங்கள் குழந்தையின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு எடுத்துக்கொள்வது நல்லது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon