Link copied!
Sign in / Sign up
5
Shares

முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் பிரச்சனையா?

திருமணம் என்னும் பந்தத்தில் ஈருடல் ஒரு மணமாய் கலந்து புதிய வாழ்வை துவங்கி, ஈருடல் ஒன்றாய் சங்கமிக்கும் தருணமே தாம்பத்தியம். இதில் பல சந்தேகங்கள் சிலருக்கு ஏற்படும். சிலருக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். சிலர் பிரச்சனைகளே இல்லாத ஒன்றை பிரச்சனை என நினைத்து கொள்வார்கள். உடலுறவில் ஆண்கள் சரியாக ஈடுபடவில்லை என்றால், அவர்கள் எதோ குறைபாடு இருப்பதாக வருத்தப்பட துவங்குவார்கள். ஆனால், இந்த உடலுறவு சார்ந்த பிரச்சனைகள் சில உண்மையில் கோளாறே இல்லை, அவற்றுள் சில விஷயங்கள் சாதாரணமான ஒன்று தான் என்பதை அவர்கள் அறிவதில்லை.

பத்தில் இரண்டு ஆணுக்கு உடலுறவில் ஈடுபடும் போது விந்துதுள்ளல் ஏற்படுகிறது. அதாவது முன்கூட்டியே விந்து வெளிபடுதல். இதனால் உடலுறவில் நிலைத்து ஈடுபட முடியாமல் போவதால், இதை பெரிய பிரச்சனையாக கருதுகிறார்கள். உடலுறவில் ஈடுபடும் போது விந்துதள்ளல் அல்லது முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் என்பது உடல்நலக் கோளாறு அல்ல. இது மனநிலை மாற்றத்தால் ஏற்படுவது.

1 மாத்திரைகள்

பெரும்பாலான ஆண்கள் உடலுறவில் அதிக நேரம் நிலைத்திருக்கவே விரும்புவார்கள். இதற்காக பல ஆண்கள் உடலுறவில் நிலைத்து செயல்பட மருந்து மற்றும் மாத்திரை போன்றவற்றை சாப்பிடுகிறார்கள். இவை தலைவலி, சோர்வு போன்ற பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, இதயம், சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மருந்து மாத்திரைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

2 மன அழுத்தம்

மனதில் ஏற்படும் மாற்றங்களும் இது போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். முன்கூட்டியே விந்துதள்ளல் ஏற்படுவது என்பது மன அழுத்தம் அல்லது மனநிலை சீர்குலைந்து காணப்படுவதால் ஏற்படும் ஒன்று. உடலுறவில் ஈடுபடும் போது மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். இது ஆண்மை சார்ந்த குறைபாடில்லை.

3 மருந்துகள் தேவையில்லை

விந்துதள்ளல் உணர்ச்சி சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஒன்று. இதற்கு மருந்துகள் தேவையே இல்லை. இது மிகவும் சாதாரணமாக ஏற்படக் கூடிய ஒன்று தான்.

4 உடற்பயிற்சி

முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் என்பதை பிரச்சனையாக கருதுபவர்கள் அதற்கான உடற்பயிற்சிகளை செய்யலாம். இடுப்பு தளம் பகுதிக்கு உடற்பயிற்சி செய்வதால் முன்கூட்டியே விந்துதுள்ளல் ஏற்படுதலை தவிர்க்க முடியும். தொடர்ந்து 12 வாரங்கள் இவ்வாறு உடல் பயிற்சி செய்து வந்தால் நிரந்தர தீர்வுக் காண முடியும்.

5 உடலுறவு பற்றிய அறியாமை

பெரும்பாலும் ஆண்கள் மத்தியில் இது ஏற்படுவதற்கு காரணம், உடலுறவு பற்றிய அறியாமையே காரணமாகிறது. விந்து வெளிப்படுதல் என்பது ஆண்கள் மத்தியில் சாதாரண ஒன்றாகவே கருதப்படுகிறது. இது நூற்றில் பத்து ஆண்களுக்கு ஏற்படுவதாக கூறுகிறார்கள். இதைக் கட்டுப்படுத்தல் மூலமாக கூட சரி செய்ய முடியும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon