Link copied!
Sign in / Sign up
21
Shares

முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக அகற்ற உதவும் வழிகள்..!

பெண்களில் சிலருக்கு மேலுதட்டில் மற்றும் முகத்தில் அளவுக்கு அதிகமாக முடிகள் வளர்ந்திருக்கும்; இதனால், அப்பெண்களின் அழகு பாழாகி, அவர்கள் சில சமயங்களில் ஆண்கள் போலவும், திருநங்கைகள் போலவும் காட்சியளிக்க நேரிடலாம். அப்படி பெண்களின் அழகைக் குலைக்கும் அத்தேவையற்ற முடிகளை எப்படி இயற்கை முறையில் நீக்குவது என இப்பதிப்பில் படித்தறியலாம்..!

மருத்துவம் - 1

தேவையானவை..

சர்க்கரை-1 மேசைக்கரண்டி, தேன்-1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - சில துளிகள்

செய்முறை:

1. ஒரு தேக்கரண்டி தேன், சில துளிகள் எலுமிச்சை சாறு, ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை போன்றவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, நன்கு பசை போலாக்கிக் கொள்ளவும் 

2. கலவை கொண்ட கிண்ணத்தை மிதமாக சூடாக்கி, மிதமான சூட்டை கலவை அடைந்தது அதை கையினால் எடுத்து, அப்பசையை முகம் மற்றும் உதட்டில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவிக்கொள்ளவும்; தடவுகையில் முடி வளர்ந்துள்ள திசைக்கு எதிர் திசையிலிருந்து தடவவும்...! 

3. சிறிது நேரத்திற்கு பின்னர், தடவிய கலவையை ஒரு பருத்தி துணி கொண்டு தடவிய திசைக்கு எதிர் திசையில் பசையை நீக்கவும்  

மருத்துவம் - 2

தேவையானவை..

முட்டை வெள்ளை கரு - 1, மக்காசோள மாவு(corn flour) - தேவைக்கேற்ப

செய்முறை:

1. முட்டையின் வெள்ளை கருவை, சோள மாவுடன் நன்கு கலந்து, கெட்டியான பசையாக்கி, அதை முகம் மற்றும் உதட்டின் மீதுள்ள முடியின் மீது தடவி, காய விடவும்  

2. கலவை நன்கு காய்ந்தவுடன் கையால், மெதுவாக முடி வளர்ந்திருக்கும் பக்கத்திற்கு எதிர்திசையாக சுரண்டி எடுத்துவிடவும்; இதனை வாரம் 2 முறை என சில மாதங்கள் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.. 

மருத்துவம் - 3

தேவையானவை..

மஞ்சள் தூள் - 1  தேக்கரண்டி, பால் - தேவைக்கேற்ப 

செய்முறை: 

1. சிறிதளவு மஞ்சள் தூளை பாலுடன் கலந்து பசை போலாக்கி, அதை முகத்திலுள்ள முடிகளின் மீது தடவி, சில நிமிடங்களுக்கு அப்படியே காயவிடவும் 

2. பின்னர், அதனை கையால் சுரண்டி எடுத்துவிடவும்; இதனை வாரம் இருமுறை என 2-3 மாதங்களுக்கு செய்து வரவும்..

மருத்துவம் - 4

தேவையானவை..

கடலை மாவு, மஞ்சள் தூள், தண்ணீர்.

செய்முறை: 

1. கடலை மாவையும் மஞ்சளையும் சமமான அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் நீரை சேர்த்து பசைபோல் ஆக்கிக்கொண்டு, அதனை முகத்தில் முடியுள்ள இடங்களில் தடவி,  சிறிதுநேரத்திற்கு காயவிடவும்  

2. பின்னர், முகத்தில் முடி வளர்ந்திருக்கும் திசைக்கு எதிர்திசையாக கையினால், மெதுவாக தடவிய பசையை எடுத்துவிடவும்..! இது கண்டிப்பாக பலனளிக்கும்..

இம்மருத்துவங்கள் முகம் மற்றும் உதட்டின் மேல் வளரும் முடிகளை நீக்க உதவும் நிரந்தர தீர்வுகளாகும்..!!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon