Link copied!
Sign in / Sign up
5
Shares

முகத்தை பளபளப்பாக்க பழங்களை கொண்டு செய்யும் பேசியல்

அழகை விரும்பாதவர் என்று ஒருவர் இருக்க முடியாது. அந்த அளவிற்கு ஆண், பெண் இருபாலரும் அழகிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். அதற்காக விளம்பரங்களில் வரும் கிரீம்கள், எண்ணெய்கள் மற்றும் பல அலங்கார பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவை முகத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, சுருக்கங்களையும் ஏற்படுத்தும். இங்கு முகத்தை அழகாக்க பழங்களை கொண்டு பேசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

1 கிளேன்சிங்

முகத்தை பேசியலுக்கு தயார்ப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதற்காக முதலில் க்ளென்சிங் செய்ய வேண்டும். இதற்கு பாலினை பஞ்சில் தொட்டு முகத்தில் மசாஜ் செய்யலாம். அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு கூட முகத்திற்கு மசாஜ் செய்து சுத்தமாக துடைத்து எடுக்கலாம்.

2 ஸ்கிரப்

முகத்தை நன்றாக, இயற்கை முறையில் ஸ்க்ரப் செய்ய உதவக் கூடிய பொருட்களில் சர்க்கரை ஒரு சிறந்த பொருள். சிறிதளவு சக்கரை, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்கு மென்மையாக முகத்தை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

3 மசாஜ்

உடலில் மசாஜ் செய்வது பல நன்மைகளை தரக் கூடியது. இது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முக பொலிவை தரும் ஆற்றல் கொண்டது. வாழைப்பழம், பப்பாளி அல்லது ஆப்பிள் போன்ற பழங்களை நன்கு மசித்து, அதை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

4 ஆவி பிடித்தல்

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, நன்றாக கொதிக்க விட வேண்டும். அந்த நீரில் ஆவி பிடிக்க வேண்டும். இதனால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் துளைகளில் அடைத்திருக்கும் அழுக்குகளை நீக்குகிறது.

5 பேசியல்கள்

தக்காளி பேசியல்

1 நன்கு பழுத்த தக்காளியை எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

2 அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவ வேண்டும்.

3 இதை அரை மணி நேரத்திற்கு பிறகு சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

ஆப்பிள் பேசியல்

1 ஆப்பிளின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி அரைத்து கொள்ளவும்.

2 அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.

3 இதை அரை மணி நேரத்திற்கு பிறகு சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

வாழைப்பழ பேசியல்

1 வாழைப்பழத்தின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு மசித்து கொள்ளவும்.

2 அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.

3 இதை அரை மணி நேரத்திற்கு பிறகு சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

6 டோனிங் மற்றும் மாய்சுரைசிங்

டோனிங் மற்றும் மாய்சுரைசிங் செய்வதற்கு வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாறு கலந்தோ அல்லது ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்தோ முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon