Link copied!
Sign in / Sign up
1
Shares

முகப்பருவை நீக்க உதவும் 7 எளிய வழிகள்

அழகு என்றாலே பெண்கள் மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. ஆனால், இந்த நவீன காலத்தில் ஆண்களும் அழகை விரும்ப தான் செய்கிறார்கள். இதில் அவர்களின் முதல் எதிரியாய் இருப்பது முகப்பரு. இது இருபாலரின் முகத்திலும் ஏற்படக்கூடிய ஒன்று. இவை உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு, அதிகப்படியான வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படுகின்றன. உடலில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும், எண்ணெய் சருமத்தினாலும் கூட ஏற்படுகின்றன. இங்கு முகப்பருவை நீக்க உதவும் எளிய வழிகளை பார்க்கலாம். 

1 கிராம்பு

இது வீட்டின் சமையல் அறையில் இருக்கும் வாசனைப் பொருட்களில் ஒன்று. மேலும், இது மருத்துவ தன்மை கொண்ட ஒன்று. கிராம்பை தண்ணீரில் சேர்த்து வேக வைத்து அரைக்கவும். அதை பருக்களின் மீது தடவி அரை மணி நேரத்திற்கு பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இது முகத்தில் உள்ள பருக்களை மறைய செய்யும்.

2 வல்லாரை கீரை

இது ஞாபக சக்தியை அதிகரிக்க கூடியது என்பது நாம் அறிந்ததே. ஆனால், இது முகப்பருவை குறைக்கும் தன்மை கொண்டதாகும். வல்லாரை கீரையை சிறிது நீர் சேர்த்து நன்கு மைய அரைத்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு சுத்தமான நீரால் கழுவ வேண்டும். இதை உணவில் சேர்த்து கொண்டாலும், நல்ல பலன் கிடைக்கும்.

3 வேப்பிலை

இது மருத்துவ தன்மை கொண்ட தாவரம். மேலும், இது கிருமிநாசினியாக செயல்படக் கூடியது. இதை நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின், இதை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தூய்மையான நீரால் கழுவ வேண்டும். இது உங்கள் முகத்தில் பருக்களை நீக்குவதோடு, சருமத்தை பாதுகாக்கும்.

4 பப்பாளி

நன்றாக பழுத்த பப்பாளியின் தோலை நீக்கி விட்டு, தூண்டு துண்டாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் தேன் சேர்த்து நன்றாக மசித்து, முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். இது முகத்தில் உள்ள பருக்களை நீக்குவதோடு, பேசியல் போன்ற பொலிவையும் தரும்.

5 பன்னீர்

கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு மற்றும் சந்தனம் ஆகியவற்றை பொடி செய்து கொள்ளவும். அவற்றை சரிசமமாக சம அளவில் கலந்து, பன்னீர் சேர்த்து முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை நன்றாக கழுவுங்கள். இது உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த அணுக்களை வெளியேற்றுவதுடன், முகப்பருக்களையும் குறைக்கும். இதை தினமும் குளிப்பதற்கு முன்பு செய்யவும்.

6 ஆப்பிள்

ஆப்பிளின் தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் தேன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது முகப்பருவை நீக்குவதோடு, சருமப் பொலிவையும் கொடுக்கும்.

7 உணவு முறை

ஆரோக்கியமற்ற உணவு முறையால் உடலில் சேரும் கொழுப்புகளும் முகப்பருவை ஏற்படுத்தும். முடிந்த வரை ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிப்பது சிறந்தது. கீரைகள் மற்றும் பழ வகைகளை உணவில் சேர்த்து கொள்வது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon