Link copied!
Sign in / Sign up
3
Shares

முதல் முறையாக தாயான பின், ஏற்படும் மனஅழுத்தத்தை சமாளிக்க உதவும் 5 வழிகள்..!

புதிதாய் தாயான பெண்கள், குழந்தையை எப்படி வளர்ப்பது, அதை எப்படி சமாளிப்பது, தன்னை கவனித்துக் கொள்வது, குடும்பத்தை, கணவரை கவனித்துக் கொள்வது எப்படி என்று குழம்பிப் போயிருப்பார்கள். அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்வது எப்படி என்ற எண்ணமும் புதிய தாய்மார்களுக்கு மனஅழுத்தத்தை தரலாம்; மேலும் மேற்படி கூறிய கவனிப்பு பொறுப்புகளும் தாயின் மனதில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

இவ்வாறு முதன் முறையாக தாயான பின், பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை சமாளிக்க உதவும் சில விஷயங்கள் குறித்து இப்பதிப்பில் படித்து அறியலாம்..!

1. தூக்கம்!

புதிய தாய்மார்கள் சந்திக்கும் மிக முக்கிய, மிகப்பெரிய சவால் தூக்கம்! ஏனெனில் புதிதாய் பிறந்த குழந்தைக்கு அடிக்கடி பாலூட்ட வேண்டிய நிலை ஏற்படும்; மேலும் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில் தாய்க்கு தூங்குவது என்பது முடியாத காரியமாகிவிடுகிறது. சரியாக துங்காததால், தாய்மார்கள் எளிதில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த பிரச்சனையை சமாளிக்க தாய்மார்கள் குழந்தை தூங்கும் நேரத்திலேயே, தூங்கி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே இந்த பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு. நீங்கள் செய்ய வேண்டிய வீட்டு வேலைகளை கணவரின் உதவியுடன், உங்கள் பெற்றோர் உதவியுடன் செய்து, நீங்கள் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம்.

2. ஆதரவு!

குழந்தையை பிரசவித்து இருக்கும் இந்த நேரத்தில், உங்களுக்கு ஒத்தாசையாக இருக்க உங்கள் பெற்றோர் அல்லது கணவரின் பெற்றோர், இவர்களின் ஆதரவு இல்லை எனும் சூழலில் நண்பர்கள், வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வது என்று ஏதேனும் செய்து, யாரின் உதவியையாவது நாடி, ஆதரவு பெற்றுக் கொள்வது, உங்கள் வேலையை குறைத்து, உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தையும் குறைக்க உதவும்.

3. பிணைப்பு!

உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தால், குழந்தையிடம் கோபத்தைக் காட்டுவதோ, அந்த பச்சிளம் குழந்தையிடம் எரிந்து விழுவதோ கூடாது; இது உங்களுக்கும் குழந்தைக்கும் இடையேயான பிணைப்பை கெடுத்துவிடும். எனவே, உங்கள் மனஅழுத்தத்தை யோகா அல்லது உறுதியான மனோதிடம் கொண்டு வென்று, குழந்தையுடன் அழியாத பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்..!

4. உங்களுக்கான நேரம்!

குழந்தை, கணவர், குடும்பம் என்று அனைவரையும் கவனித்துக் கொள்வதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீரோ, அதே போல் உங்களை கவனித்துக் கொள்ள, உங்களின் இலட்சியத்தை அடைய என இது போன்ற விஷயங்களுக்கும் நேரம் செலுத்துங்கள். உங்கள் உடல் நலம், வாழ்க்கை இலட்சியம் போன்றவற்றை கவனித்துக் கொள்ளவும் நேரம் ஒதுக்குங்கள்..!

5. உங்கள் உடல்நலம்!

நீங்கள் நலமாக இருந்தால் தான், அனைவரையும் பார்த்துக் கொள்ள முடியும். எனவே, நேர நேரத்திற்கு சத்தான உணவு உட்கொண்டு, மனஅழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சிகள் போன்றவை செய்வது, உங்கள் வாழ்க்கை கனவை அடைவதற்கான நடவடிக்கைகள் என அனைத்தையும் கருத்தில் கொண்டு, உங்கள் உடலையும் மனதையும் நன்றாய் பார்த்துக் கொள்ள முயலுங்கள்..! இது மிகவும் முக்கியமான விஷயமாகும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon