Link copied!
Sign in / Sign up
32
Shares

அம்மாக்களின் இந்த பழக்கங்களால் குழந்தை ஸ்மார்ட்டாக பிறக்கிறது...

கருவில் இருக்கும் குழந்தைகள் எப்போதுமே தன் தாய் என்ன கூறுகிறாள் என்பதை பொறுத்தே நடக்க தொடங்க, அதனால் தான் கர்ப்பிணிகள் எப்போதும் மன அமைதியுடன் இருக்க வேண்டுமென அனைவரும் கூறுகின்றனர். ஆம், தாயை பொறுத்தே பிறக்கும் குழந்தை அமைய அவளின் செயலில் மிகவும் கவனத்துடன் மகப்பேறு காலத்தில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதுவும் அம்மாக்களின் ஒரு சில பழக்கங்கள், பிறக்க போகும் குழந்தையை ஸ்மார்ட்டாக மாற்றும் என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அட ஆமாங்க... அதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.   

எப்படி முடியும்?

இது சாத்தியம் தானா? மஹாபாரதத்தில் அர்ஜுனன் கூறும் சக்கர வியூகத்தை பற்றி கருவில் இருக்கும் அபிமன்யுவுக்கு தெரியும் என்பதால் தான் அபிமன்யு தைரியமாக சக்கர வியூகம் உள்ளே நுழைவான். இதை வெறும் கதையாக மட்டுமே நம்மால் பார்க்க இயலாது காரணம். பெற்றோரின் பழக்கங்கள் பிறக்க போகும் குழந்தைக்கு உண்டு என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் கர்ப்பிணிகள் கவலையாக எதையும் நினைக்கக்கூடாது என பெரியோர்கள் கூறுகின்றனர்.

என்ன பழக்கங்கள்?
தீண்டுதல்:

நீங்கள் தனியாக இருக்கும்போது வயிற்றை உங்கள் கைகளால் தடவிக்கொடுங்கள். இந்த தீண்டுதல் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இசை:

கர்ப்ப காலத்தில் தேவையற்ற மன உளைச்சலை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. அதனால் உங்கள் மனம் அலைப்பாயுமெனில் அழகிய இசையை கேட்பது மிக நல்லது. சிசுவின் சிறந்த வளர்ச்சிக்கு மெல்லிய இசை கேட்க வேண்டியது அவசியம்.

நேர்மறை செயல்பாடுகள்:

நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே இருத்தல் வேண்டும். இதனால் நாளை பிறக்க போகும் உங்கள் குழந்தை இந்த சமூகத்தில் நேர்மறை எண்ணங்களுடன் இனிதே வலம் வருவான்.

சூரிய ஒளி:

உங்கள் மேல் சூரிய ஒளி படுவது போல காலையில் இருபது நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். சிசுவின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியம் தேவை. சூரிய ஆற்றலில் வைட்டமின் டி பெருமளவில் இருக்கிறது. இது தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தந்து எலும்பின் வலிமையை அதிகரிக்க செய்கிறது.

புத்தகம்:

அதேபோல் தூங்குவதற்கு முன்பு நல்ல கருத்துக்கள் அடங்கிய புத்தகங்களை படித்திடுங்கள். இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

ஆரோக்கியமான உணவு முறை:

நீங்கள் உண்ணும் உணவில் எல்லா விதமான சத்துக்களும் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் நீங்கள் என்ன உண்ணுகிறீர்களோ அது தான் உங்கள் குழந்தைக்கு சென்று சேரக்கூடும். உங்கள் குழந்தை எல்லா விதமான சத்துக்களுடன் குறைபாடற்று பிறக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உடற்பயிற்சி:

கர்ப்ப காலத்தின் 6 அல்லது 7 ஆவது மாதங்களில் நீங்கள் மிகவும் சோர்வுடன் காணக்கூடும். ஆனால், இந்த காலக்கட்டத்தில் தான் நீங்கள் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகிறது. இது கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon