Link copied!
Sign in / Sign up
0
Shares

நோயாளிகள் அடித்த லூட்டிகளை நம்முடன் பகிர்ந்துக்கொள்ளும் 5 மருத்துவர்கள்...

இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரும் ஓரளவுக்கு நோய்களை பற்றியும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், ஒரு காலத்தில் மருத்துவர்களிடம் செல்லும் நோயாளிகள் அடிக்கும் லூட்டிகள் அவருடைய புரிதல் சதவிகிதத்தை காட்டிவிடும். புதிதாய் ஒருவன் வாயில் தெர்மோ மீட்டர் வைத்த கதையாய், மாத்திரை எது? மருந்து எது? போன்ற பல குழப்பங்கள் நிகழ்ந்ததுண்டு. அவர்கள் அறியாமை கண்டு சிரிப்பு வந்தாலும், இது போல் வேறு யாரும் செய்யக்கூடாது எனும் பரிதாபமும் மருத்துவருக்கு ஏற்படும். அப்படிப்பட்ட நகைச்சுவை கலந்த விழிப்புணர்வு பதிவு தான் இது. 

இந்த பதிவு ஒரு கோணத்தில் உங்களை சிரிக்க வைத்தாலும், மற்றுமோர் பக்கம் சிந்திக்கவும் வைக்கும். எதுவும் தவறல்ல என்பதை நீங்களே புரிந்துக்கொள்வீர்கள்.

#1

நான் ஒரு பல் மருத்துவர். ஒருவர் தன் மகனை என்னிடம் அழைத்து வந்தார். நானும் தேவையான பணிவிடைகளை செய்ய தொந்தரவு தந்த ஒரு பல்லை பிடுங்கினேன். என்னிடமிருந்து பல்லை வாங்கிக்கொண்டு ஓடிய அந்த பிள்ளை, மருத்துவமனைக்கு வெளியில் பல்லை புதைத்து அப்படியே உட்கார்ந்தான். என்ன செய்கிறாய்? என நான் கேட்க, விழுந்த பல்லை மண்ணில் மூடி வைத்தால் தான் பல் முளைக்குமாம் என்றான். எனக்கு சிரிப்பதா? சிந்திப்பதா? என தெரியவில்லை என்கிறார்.

#2

"டாக்டர்! எனக்கு எது சாப்பிட்டாலும் செரிமானம் ஆக மாட்டேன் என்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்..." என்றார் வந்த நோயாளி. " நான் அவரை மேலே நிமிர்ந்து பார்த்து யூ-டியூப்பை ஓபன் செய்து அதற்கான தீர்வை பார்த்தேன். உடனே அந்த நோயாளிக்கு கோபம் வந்தது. "என்ன டாக்டர்! நான் உங்ககிட்ட வைத்தியம் கேட்டால் நீங்க என்னமோ பண்றீங்க?" என அவர் கொந்தளிக்க, நான் அவரிடம் அமைதியாக கூறினேன். "என்னால் கண்களில் ஏதும் குறைபாடு இருந்தால் மட்டும் தான் பார்க்க முடியும். ஏனென்றால், நான் கண் நல மருத்துவர். குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு வலதுபக்கம் செல்லுங்கள்..." என சொல்ல சிரித்துகொண்டே தலையை சொரிந்தபடி சென்றார். அப்புறம் போலி டாக்டர்னு சொல்லிட்டா, என்னோட பொழப்பு என்ன ஆகும் என புலம்புகிறார் அந்த மருத்துவர்.

#3

ஒரு நோயாளி காய்ச்சல் என வந்தார். நானும் ஊசி போட பரிந்துரை செய்து வாங்கிவர சொன்னேன். நான் ஊசியில் மருந்தை ஏற்றி திரும்பி பார்க்க கைகளை நீட்டியபடியே அவர் நின்றார். அங்கே இருந்த நோயாளிகள் எல்லாம் ஒரே சிரிப்பு. நான் கூறினேன், "இது கையில் போடும் ஊசி அல்ல; இடுப்பில் மட்டும் தான் போட முடியும்..." என்று சொல்ல, அவரோ வெட்கப்பட்டுக்கொண்டே அங்கிருந்த பெண் நர்ஸை பார்த்து சிரிக்கிறார். நல்லவேளை, அந்த நர்ஸ் கையில் நான் ஊசியை கொடுக்கவில்லை. இல்லாட்டியும் கன்சல்டிங்க் பீஸ் கொடுக்கும் முன்னே ஓடி இருப்பார் என சொல்லி கலகலவென சிரிக்கிறார்.

#4

நான் ஒரு நர்ஸாக இருக்கிறேன். ஒரு முதியவருக்கு சிறுநீர் பரிசோதனை அவசியமாக இருக்க, சிறிய குவளையை கொடுத்து கைகழுவும் பகுதிக்கு அவரை அனுப்பி கதவை சாத்திவிட்டு வந்தேன். சுமார் 15 நிமிடங்கள் கழித்து வந்த அவர், வெறும் குவளையை நீட்டினார். "இங்க கை கழுவ மட்டும் தான்மா இடம் இருக்கு. டாய்லெட் எங்க இருக்குன்னு என்னிடம் கேட்டார். நான் என்ன சொல்வேன் என சொல்லி அந்த நர்ஸ் சிரிக்கிறார்.

#5

நான் ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட். என் பணி திறமையை பார்த்து எத்தனையோ பேர் விருதுகள் கூட வழங்கி இருக்கின்றனர். என் மருத்துவமனையின் முன்புற ஹாலில் நான் பல பிரபலமானவர்களுடன் இருப்பதுபோல் போட்டோ வைத்துள்ளேன். அதை பார்க்கும் போது என் மனதில் அப்படி ஒரு ஆனந்தம் ஏற்படும். கர்வமும் கூட... ஒரு நாள் ஒரு பெரியவர் வந்தார். நான் உள்ளிருந்து மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் செயல்கள் என்னை உற்று நோக்க வைக்க மெல்ல எட்டி பார்த்தேன். அவர் என்னுடைய எல்லா போட்டோக்களையும் பார்த்துக்கொண்டு நின்றார். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் திடீரென ஒரு சந்தேகம். 'இவர் ஏன் அனைத்து போட்டோவையும் திரும்ப திரும்ப பார்க்கிறார்?' என நினைத்து அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் பாருங்க ஒரு பதில். "இந்த மாதிரி போட்டோ வச்சு நிறையா போலி டாக்டர் இருக்காங்க. நீங்கள் ஒரிஜினல் தானா?" என்றார். என் கர்வமெல்லாம் சுக்குநூறாக சிதைந்து போனது என சிரிக்கிறார் அவர்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon