Link copied!
Sign in / Sign up
262
Shares

மூட்டுகளை வலிமைப்படுத்தும் உணவுகள் மற்றும் மூட்டு தேய்மானத்தை சரி செய்யும் வழி!

நம்முடைய எலும்புகள் எவ்வளவு முக்கியமோ, அதுபோல தான் நம்முடைய மூட்டுக்களும். மூட்டுக்களுக்கு வலிமை தரக்கூடியது, சைனோவியல் (synovial fluid) திரவம். போதுமான ஊட்டச்சத்து, உடற்பயிற்சி இல்லாதது, முதுமை போன்ற பல காரணங்களால், இந்த திரவம் சுரப்பது குறையும். இதனால் எலும்பு மண்டலத்தில் ஏற்படும் மிக முக்கியமான பிரச்சனை மூட்டுத் தேய்மானம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் மூட்டுத்தேய்மானம் ஏற்படுகிறது. போதுமான ஊட்டச்சத்து இல்லாததே இதற்கு காரணம். மூட்டுகளை வலிமைப்படுத்தும் உணவுகளையும், மூட்டு தேய்மானத்தை சரி செய்யும் வழிகளையும் இங்கு பார்க்கலாம்.  

மூட்டுகளை வலிமைப்படுத்தும் உணவுகள்

ஆரஞ்சு

ஆரஞ்சு சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களில் ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஆரஞ்சில் உள்ள, ‘நோபிலேடின்’ எனும் பொருள் வலியைக் குறைக்க உதவும்.

மஞ்சள்

மஞ்சள் நாம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒன்று. இதில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. மஞ்சளில் இருக்கும், ‘குர்குமின்’ வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

அக்ரூட் பருப்புகள் (வால்நட்)

வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலம், மூட்டுக்களின் இயல்பான அசைவிற்கு உதவி செய்கிறது. இது மூட்டுகளை வலிமைப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மூட்டுத் தேய்மானதிற்கான தீர்வு

இந்த மூட்டுத் தேய்மானத்துக்குச் சிறந்த மருந்துகள் பல உள்ளன, அதில் அத்திப்பழம் மிகச்சிறந்த மருந்து. இதில் கால்சியம் மற்றும் புரதச்சத்து மிக அளவில் இருக்கிறது. இதை பயன்படுத்தி மூட்டு தேய்மானத்திற்கு மருந்து தயாரிக்கலாம். இது மிகவும் பயனளிக்க வல்லது.

தேவையான பொருட்கள்

அத்திப்பழம் – 5

அரச விதை – 10 கிராம்

ஆல விதை – 10 கிராம்

பூசணி விதை – 10 கிராம்

தேன் – 1/4 கிலோ

செய்முறை

1 மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும், கொஞ்சம் தேன் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

2 மீதியுள்ள தேனை நன்கு காய்ச்சி பொங்கிவரும் நுரையை நீக்கிவிட்டு, அதில் அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும், சரியான பதம் வந்தவுடன் இறக்கிவிடலாம்.

இதை காலை மாலை இருவேளையும் தொடர்ந்து 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் மூட்டுத்தேய்மானம் குணமாகும். மேலும், உடல் பலவீனத்தால் ஏற்படும் வலி மற்றும் வேதனை குறையும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon