Link copied!
Sign in / Sign up
9
Shares

குழந்தைகளுக்கான பாசிப்பருப்பு சாம்பார்..!!

குழந்தைகள் பிறந்து 6 மாதங்கள் முடிந்த பின், இணை உணவுகள் கொடுக்கப்படும்; அவ்வாறு கொடுக்கப்படும் இணை உணவுகளில் முக்கிய பங்கு வகிப்பது சாம்பார் கலந்த இட்லி, தோசை, சாதம் போன்ற உணவுகளே! அப்படி குழந்தைக்கு அளிக்கப்படும் அனைத்து வகை உணவுகளிலும் சேர்க்கப்படும் ஒரு முக்கிய குழம்பு சாம்பார். சாம்பார் என்றாலே தென்னிந்தியா தான் மிகவும் பிரசித்தம்; அதிலும் தமிழகமும் தமிழனும் தான் சாம்பாரின் அஸ்திவார அடையாளங்கள். இத்துணை மகத்துவம் வாய்ந்த சாம்பார் அதிக மற்றும் அனைத்துவித சத்துக்களையும் கொண்டுள்ளது.

அதை குழந்தைக்கு ஒரு முதல், முக்கிய உணவாக தருகையில், குழந்தை பால்ய பருவத்திலேயே அனைத்து சத்துக்களும் கிடைக்கப்பெற்று ஆரோக்யமாக வளர்கிறது. குழந்தைகளுக்கு இத்தனை நன்மை செய்யும் சாம்பாரை எப்படி செய்வது என்று இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

தேவையானவை..!

பாசிப்பருப்பு-3/4 கப், தக்காளி-1, வெங்காயம்-1, பச்சை மிளகாய்-4 (குழந்தைகளுக்கானது என்றால் இது தேவையில்லை), பெருங்காயத்தூள்-சிறிதளவு, சாம்பார் பொடி-1 தேக்கரண்டி, மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி, உப்பு-தேவைக்கேற்ப.

தாளிக்க..

கடுகு-1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய்-2, கறிவேப்பிலை-தேவையான அளவு, எண்ணெய்-2 தேக்கரண்டி.

 

 

செய்முறை..

1. குக்கரில் பாசிப்பருப்பை 4-5 விசில்கள் வரை, நன்கு வேக வைக்கவும்; பின்னர் பருப்பினை நன்கு கூழ் போல கடைந்து வைத்துக் கொள்ளவும்

2. தாளிப்பு பொருட்களை வாணலியில் இட்டு, பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் 

3. நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் போன்றவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும் 

4. பின்னர் சாம்பார் பொடி, மஞ்சள், உப்பு இவற்றை சேர்த்து நன்கு கிளறி, கடைந்த பருப்பினை சேர்க்கவும் 

5. இதில் சற்று நீர் சேர்த்து, 10-15 நிமிடங்களுக்கு சமைக்கவும்; இந்த காலகட்டத்தில் சாம்பார் அடிபிடித்து விடாமல் இருக்க அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும்..!

6. சாம்பார் கொதித்து முடித்தபின், கொத்தமல்லி இலைகளை இட்டு பரிமாற தயாராகவும்

அவ்வளவே குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் சாம்பார் தயாராகிவிட்டது. இதனை இட்லி, தோசை, சாதம், பொங்கல் போன்ற உணவுகளுடன் சேர்த்து உண்டால், உணவு தேவாமிர்தமாய் இருக்கும்..!! இந்த சாம்பாருக்கு தேவையான பொருட்களை தயார் செய்ய 5 நிமிடங்களும், இதை சமைத்து முடிக்க 30 நிமிடங்களும் ஆகும்; இதை 6 நபர்களுக்கு பரிமாறலாம்..!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon