Link copied!
Sign in / Sign up
4
Shares

அன்னைகள், குழந்தைகளுக்காகக் கொள்ளும் 6 விருப்பங்கள்..!

உலகில் உள்ள அனைத்து பெண்களும் உடை, பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்திலும் வேறுபடலாம்; ஆனால், அவர்கள் அனைவருள்ளும் இருக்கும் ஒரே ஒற்றுமை, தாய் அன்பு. ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பு, உலகெங்கிலும் உள்ள அனைத்து பெண்களிடத்தும் மாற்றமின்றியே இருக்கும்.

தாய் தன் குழந்தைகளுக்காக, மனதில் கொண்டுள்ள 6 விருப்பங்களை/ ஆசைகளை பற்றி இப்பதிப்பில் காணலாம்.

1. ஆரோக்கியம்..!

தாயானவளுக்கு, குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியமே மிகவும் முக்கியமான ஒன்று. தாய், குழந்தை பிறந்தவுடன் போடப்படும் தடுப்பூசி முதல் எல்லாவற்றிலும் அதீத அக்கறையோடு குழந்தையின் நலம் பேணுவாள். அதேபோல், குழந்தையின் மன நலத்திலும், மன ரீதியான வளர்ச்சியிலும் தாயின் பங்களிப்பு பெரும் பங்கு வகிக்கும்; தன் குழந்தையின் இலட்சியம் எது என அறிந்து, அதை நோக்கி முன்னேற குழந்தையை ஊக்கப்படுத்துவாள், அன்னை.

2. சரியான நட்பு..

குழந்தையின் சமுதாய நட்பு வட்டம், நல்ல நண்பர்களோடு அமைய வேண்டும்; பிறரால், குழந்தைக்கு எந்த மன வருத்தமும் ஏற்பட்டுவிடக் கூடாது, என்பதில் தாயின் உள்ளம் மிகவும் உறுதியுடன் இருக்கும். தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கையின் உறுதுணையாகும் நல்ல நண்பர்களையும் அமைத்துத் தர வேண்டும் என்று அதிகம் விரும்புவர்.

3. ஒளிமயமான எதிர்காலம்..

சிறு வயதிலிருந்து, தங்கள் குழந்தைகள் கொண்ட ஆசைகளும், கண்ட கனவுகளும் நனவாக்க தாயானவள் உறுதியோடு போராடுவாள். குழந்தைகளுக்கு, அவர்கள் விரும்பிய வண்ணம் எதிர்காலம் அமைய வேண்டும் என்று விருப்பம் கொண்டு, அதற்காகப் போராடுவாள், அன்னை.

4. கல்யாணம்..

பெற்றோர்கள் வாழ்வின் மிகப்பெரிய கனவு, அதிலும் முக்கியமாக அன்னையின் மாபெரும் இலட்சியம், பிள்ளைகளின் திருமணம். தாங்கள் பார்த்து பார்த்து, வளர்த்த குழந்தையின் திருமணம் சரியான, பொருத்தமான நபருடன் நடக்க வேண்டும் என்றும், தனக்கு வரப்போகும் மருமகனோ அல்லது மருமகளா தங்கள் மற்றோரு மகனாய் அல்லது மகளாய் மாறிட வேண்டும் இச்சை கொள்ளும், தாயுள்ளம்.

5. அன்பான குடும்பம்..!

உங்கள் வாழ்நாளில் திருமணத்திற்குப் பின் அமையவிருக்கும் மணவாழ்க்கையும், உங்களுக்கு கிடைக்கவிருக்கும் குழந்தை செல்வங்களும், உங்களுக்கு ஒரு அன்பான குடும்பமாக அமைய வேண்டும் - என உங்கள் பெற்றோரின் மனம் விரும்பும். அதேபோல், உங்கள் பெற்றோர் உங்களை எப்படியெல்லாம் பாராட்டி, சீராட்டி வளர்த்துள்ளனர் என்பதை நீங்கள், உங்கள் குழந்தை வளர்ப்பில் உணர்ந்து, உங்கள் அன்னையின் முறையை நீங்களும் பின்பற்றும் போது, அவர்களின் வளர்ப்பு முறை வெற்றி பெற்றதை உணரும் போது, அன்னை அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

6. கரையில்லா கல்வி..!

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் கரையில்லா கல்வியை, கற்க வேண்டும், கற்ற கல்வியால் பெரும் புகழ் ஈட்ட வேண்டும் என எண்ணம் கொண்டிருப்பர். அதிலும் அன்னை, தன் குழந்தையை மற்றவர் பாராட்டக் கேள்வியுறும்போது, உம்மை பெற்ற வயிறு குளிர்ந்து, மனம் நிறைந்து காணப்படுவாள்; வாழ்வின் இலட்சியத்தை அடைந்துவிட்டதாய் ஆனந்தம் கொள்வாள்.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon