Link copied!
Sign in / Sign up
5
Shares

குழந்தை பிறந்த பின் உங்களை கவனித்துக்கொள்ளும் 9 வழிகள்

ஒன்பது மாதங்களாக உங்கள் குழந்தைக்காக எண்ணற்ற தியாகங்களை செய்துவிட்டீர்கள். உங்கள் வாழ்க்கையின் மீதி காலம் முழுவதும் பல தியாகங்களை செய்யப்போகிறீர்கள். ஆனால் நீங்கள் புன்னகையுடன் இதை செய்கிறீர்கள், ஏனெனில் அவர் / அவள் உங்கள் குழந்தை, அவர்கள் உங்களையும் உங்கள் முழு வம்சாவளியையும் உலகத்திற்கும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

ஆனால் அந்த கடினமான ஒன்பது மாதங்களுக்கு பிறகு நீங்கள் ஒரு இடைவெளியை விரும்புகிறீர்கள் என்று எங்களால் உறுதியாக கூறமுடியும், எந்தவித குற்ற உணர்ச்சியும் தேவையில்லை. நீங்கள் உங்கள் குழந்தையை பார்த்துக்கொள்வது போல் யாரும் உங்களை பார்த்துக்கொள்ள போவதில்லை. உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் தேவையான இடைவெளியை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். உங்களை திருப்திபடுத்திக்கொள்ள கூடிய 9 செயல்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

1. மனதை குழப்பிக்கொள்ளாமல் தூங்குங்கள்

உங்கள் குழந்தையால் நீங்கள் தூக்கத்தை தொலைக்கப்போகும் பல இரவுகள் வரப்போகிறது. எனவே உங்களுக்கென நேரம் ஒதுக்கி சிறு வயதில் நீங்கள் இருந்தது போல் தூங்குங்கள்.

2. தனிமையான நேரம்

கடந்த ஒன்பது மாதங்களாக நீங்கள் விரும்பும் எந்தவொரு செயலை செய்யவும் நேரமோ அல்லது வாய்ப்போ கிடைத்திருக்காது என்பதில் சந்தேகமில்லை. உங்களை மிகவும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் மாற்றக்கூடிய ஒன்று தனிமையான நேரமாகும். படத்திற்கு செல்லுங்கள், பிடித்த புத்தகம் படியுங்கள் அடிப்படையில் நீங்கள் விரும்புவதை செய்யுங்கள்.

3. மசாஜ்

பூமியில் மிகவும் மன அழுத்தமுள்ள வேலைகளுள் பெற்றோராக இருப்பது முதலானதாக இருக்கலாம். ஆனால் அதிர்ஷடவசமாக மனஅழுத்தத்தை குறைக்க மசாஜ் என்ற ஒன்று உள்ளது.

4. அதிகாலைகள்

அதிகாலையில் நம்மை பார்த்துக்கொள்ள முடியாது என்று நீங்கள் எண்ணலாம் ஆனால் முடியும். இது உங்களுக்கான கூடுதல் நேரம் போன்றது. நல்ல குளியல், நல்ல காலை உணவு மற்றும் சிறப்பான ஒட்டப்பயிற்சி என நாளை சிறப்பாக தொடங்கலாம். நாள்முழுவதும் வேலை செய்ய போதுமான ஆற்றலை இது தரும்.

5. சிறிது மேக்கப் செய்துகொள்ளுங்கள்

அழகுநிலையத்திற்கோ அல்லது ஸ்பா செல்வதற்கோ விரும்பாத பெண்கள் யாருமில்லை. உங்களின் நகங்களை அழகுப்படுத்தவோ அல்லது முடி வெட்டவோ மறந்திருந்தால் உடனடியாக அவற்றை செய்யுங்கள்.

6. நண்பர்களை சந்தியுங்கள்

உங்கள் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்கு சென்றோ அல்லது ஷாப்பிங் சென்றோ பல நாட்கள் ஆகியிருக்கும். உங்கள் நண்பர்களுடன் மீண்டும் பேசுங்கள். உங்கள் குழந்தை வளரும்போதே உங்கள் நண்பர்களுடன் இரவு உணவிற்கோ அல்லது பார்ட்டிகளுக்கோ சென்று வாருங்கள்.

7. ஷாப்பிங்

நீங்கள் இதை சொல்லும் போது கணவர் மிகவும் கவலைப்படுவார், ஆனால் அவர்கள் ஒன்பது மாதங்களுக்கு வயிற்றில் ஒரு குழந்தையை சுமக்க மாட்டார்கள் அல்லவா? எனவே உங்கள் கணவரின் இதயம் நொருங்காத அளவிற்கு உங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொள்ளுங்கள்.

8. நீண்ட நேர குளியல்

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு நல்ல நீண்ட குமிழி குளியல் அல்லது ஷவர் குளியலை, உங்களுக்கு பிடித்த இசையுடன் பெறுவது வீட்டிலேயே செய்யக்கூடிய அற்புதமான ஒன்றாகும்.

9. விருப்பமான உணவுகளை சாப்பிடுங்கள்

உங்களுக்கு சமைப்பது பிடிக்குமென்றால், யாரையும் சமையலறையில் நுழைய அனுமதிக்காதீர்கள். இதைவிட உங்களை மகிழ்ச்சிப்படுத்துவது எதுவுமில்லை. ஒருவேளை சமைப்பது உங்களுக்கு பிடிக்காதென்றால் எளிதாக வெளியில் இருந்து வாங்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த உணவு+தொலைக்காட்சி+பிடித்த பானம், இதைவிட வேறு என்ன வேண்டும்?

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon