Link copied!
Sign in / Sign up
17
Shares

குழந்தைகளுக்கான பால் தேங்காய் பர்பி-நொறுக்குத்தீனி!

குழந்தைகளுக்கு இந்தக்காலத்தில் கிடைக்கும் தீனிகளான, பிரட், பீட்ஸா, பர்கர் போன்ற சத்தில்லா நொறுக்குத்தீனிகளை அளித்து, அவர்களின் உடல் நிலையை குழந்தைப்பருவம் முதலே கெடுத்து விடாதீர்கள், பெற்றோர்களே! நீங்கள் சிறு குழந்தையாய் இருந்த போது, உண்டு மகிழ்ந்த உணவுகளை, நொறுக்குத்தீனிகளை குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்கள்; கண்டிப்பாக அவர்கள் அதை விரும்பி உண்பர், அந்தக்கால நொறுக்குதீனிகளில் எவ்வளவு ஆரோக்கியம் இருந்தது என்பதை மறவாதீர். 

நாம் உண்டு சுவைத்த இனிப்பான நொறுக்குத்தீனிகளில் ஒன்றான, பால் தேங்காய் பர்பி செய்வது எப்படி என்பது குறித்தே, இப்பொழுது இந்த பதிப்பில் படித்தறியலாம்.

தேவையானவை!

பால் – 1 லிட்டர், வெல்லம் அல்லது சர்க்கரை – 1 கப், தேங்காய்த்துருவல் – 1 கப், ஏலக்காய்த்தூள் – அரை தேக்கரண்டி, முந்திரி – 1 மேஜைக்கரண்டி, நெய் – 1 மேஜைக்கரண்டி.

செய்முறை..!

1. முதலில் தேங்காயை துருவிக்கொண்டு, ஒரு அடி கனமான பாத்திரத்தில் துருவிய தேங்காய், பால், சர்க்கரை போன்ற அனைத்தையும் சேர்த்து, அடுப்பில் வைத்து நன்றாக கிளற வேண்டும்  

2. பாத்திரத்தில் நாம் சேர்த்த கலவை, நன்கு திரண்டு வரும் வரை கிளறி, பின்பு நெய், ஏலக்காய்த்தூள், முந்திரி போன்றவற்றை சேர்த்து, ஒரு 1/2 நிமிடம் கிளறி இறக்கவும்

3. ஒரு தட்டில் நெய்யைத் தடவி, அதில் நாம் ஏற்கனவே தயாரித்த பர்பி கலவையை கொட்டிப் பரப்பி, சதுரமாகவோ அல்லது தேவையான வடிவத்தில் வில்லைகளாக கீறி விடவும்; இது சூடு ஆறியதும் சாப்பிடலாம், ஒரு வாரம் வரை பர்பியின் சுவை மாறாமலிருக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon