Link copied!
Sign in / Sign up
0
Shares

மிளகு கீரை தேனிரால் என்ன உண்டாகும்?

கடவுளால் கூட நன்மை மட்டுமே செய்ய இயலாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே... அவர் படைப்புகள் அனைத்தினாலும் நன்மை/தீமை என இரண்டுமே உண்டு. அப்படி இருக்க விளையும் செடிகள் மட்டுமென்ன அதற்கு விதிவிலக்கா? விளைவு, செடிகளும் சில வித பக்க விளைவுகளை உண்டாக்குகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் அல்லவா? அப்படி இருக்க, மருந்தையும் மொடக் மொடக்கென கண்ணை மூடிக்கொண்டு அளவு தெரியாமல் குடித்தால், அதனால் ஏற்படும் விளைவை யாரால் தான் தடுக்க இயலும்.

அப்பேற்ப்பட்ட மிளகு கீரை தேநீர் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். அட ஆமாங்க, இந்த மிளகு கீரை தேநீரால் நன்மையும் உண்டு...பக்கவிளைவுகளும் உண்டு.

கர்ப்பிணி பெண்கள் இதை குடிக்கலாமா வேண்டாமா? குடிப்பதனால் என்ன நன்மை உண்டாகும்? என்ன பக்க விளைவுகள் உண்டாகும்? என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

மிளகு கீரை தேநீர் என்பது பிரசவ வலியை சந்திக்க தயாராகும் பெண்ணுக்கு புத்துணர்ச்சியை தரும் தேநீராகும். இந்த மிளகு கீரை தேநீரில் மெத்தனால் இருக்கிறது. 

சரி, இப்போது இந்த தேநீரால் என்ன நன்மை என நாம் பார்க்கலாம்.

செரிமானத்திற்கு வழி வகை செய்யும்:

இந்த மிளகு கீரை தேநீர் குடிப்பதால் இரைப்பை கோளாறுகள் குணமைடைய வாய்ப்பிருக்கிறது. செரிமான கோளாறு கொண்ட கர்ப்பிணி பெண்கள், இந்த தேநீரை குடிப்பது மிக நல்லது. இதில் இருக்கும் மருத்துவ குணமானது, வலி மற்றும் எரிச்சலை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் வயிற்றில் இருக்கும் அதிக வாயுவினால் கர்ப்ப காலத்தில் தசை பிடிப்பு உண்டாகலாம். இதை போக்க மிளகு கீரை தேநீர் பயன்படுகிறது. மேலும், மலச்சிக்கல் மற்றும் வயிற்று கோளாறு பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் நமக்கு இந்த தேநீர் உதவுகிறது.

குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனை நீங்கும்:

கர்ப்பிணிகளுக்கு இந்த பிரச்சனை அடிக்கடி வருவது வழக்கம் தான். இருப்பினும், வரப்போகும் தன் குழந்தையை நினைத்து வாந்தியை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வாள் பெண்ணவள். ஆனாலும், மற்றவர்களுக்கு தொந்தரவோ என ஒரு சிலர் நினைப்பதுண்டு. கவலை வேண்டாம், இந்த மிளகு கீரை தேநீர், கர்ப்பிணி பெண்களின் வாந்தி, குமட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்:

மிளகு கீரைக்கு பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு உண்டு. இதனால், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றில் இருந்து வெளிவர உதவுகிறது. மேலும், மீளகு கீரையில் இருக்கும் எதிர்ப்பு சக்தியினால் எதிர்க்காலத்தில் உங்கள் நலனையும் சேர்த்து பேணி பாதுகாக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கும் மிளகு கீரை தேநீர்:

கர்ப்பிணிகளுக்கு காணாத பல குணங்கள் வருவதுண்டு. அவற்றுள் ஒன்று தான் கோபம். ஆம், கர்ப்பிணி பெண்கள் பெருமளவில் மன அழுத்தத்துடன் காணப்படுவதை நீங்கள் பார்த்து இருக்கலாம். இது கர்ப்பிணிகளுக்கு இயல்பாகவே ஏற்பட கூடிய ஒன்று. இதை தவிர்க்க மிளகு கீரை தேநீர் அருந்தலாம்.

மேலும் இந்த மிளகு கீரையில் இருக்கும் அழற்சியை எதிர்க்கும் பண்பு, உங்கள் உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதோடு... இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.

 
மிளகு கீரையினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்:

கர்ப்ப காலத்தின் முக்கிய கட்டத்தில் மிளகு கீரை தேநீர் குடிப்பதால் கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதற்கான ஆராய்ச்சி பூர்வ நிரூபணம் எதுவும் இல்லையென்றாலும், பரிந்துரைகளின் பெயரில் இதனை பின்பற்றி இக்கால கட்டத்தில் தவிர்ப்பது நல்லது. மேலும், பால் சுரக்கும் தாய்களும் மிளகு கீரை தேநீரை தவிர்க்க வேண்டும். இல்லையேல் இது உங்கள் கை குழந்தையையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

எதிர்மறையான இடை செயல்களை உண்டாக்கும்:

சில சமயங்களில்... மிளகு கீரை தேநீர் எதிர்மறை எண்ணங்களை மனதில் விதைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான எல்லா ஊட்ட சத்துக்களும் கிடைக்க வேண்டியது மிக அவசியம். அதனால், மருத்துவரின் ஆலோசனையோடு மிளகு கீரை தேநீர் அருந்துவது மிக நல்லது.

அலர்ஜியை உண்டாக்கும்:

இதில் இருக்கும் மெத்தனால் அலர்ஜியை உண்டாக்கும் என்பதால், அலர்ஜி இருப்பவர்கள் இந்த மிளகு கீரை தேநீரை தவிர்க்க வேண்டும். இல்லையேல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

அளவுக்கு அதிகமாக குடித்தால்:

எதையுமே அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. அது உணவாக இருந்தாலும் சரி... குளிர் பானமாக இருந்தாலும் சரி...மிளகு கீரை தேநீரை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம், எதிர்மறை எண்ணங்களை விதைக்கிறது. கர்ப்பிணி பெண்களுள் ஒரு சிலருக்கு... தசையில் வலி, சோர்வு, இதய துடிப்பு சீரற்று இருத்தல் முதலிய பிரச்சனையை உண்டாக்குகிறது.

கர்ப்பிணி பெண்களே! நீங்கள் மிளகு கீரை தேநீரை குடிக்கும் முன்பு, டாக்டரை ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சிலருக்கு இந்த மிளகு கீரை தேநீர் கர்ப்ப காலத்தில் ஒத்துக்கொள்வதில்லை. ஆகையால், அருந்தும் முன்னே ஆலோசனை என்பது அவசியமாகிறது.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon