Link copied!
Sign in / Sign up
4
Shares

வயிற்றை தடவிக்கொடுக்கும் தாய் தன் கருவில் இருக்கும் குழந்தைக்கு அனுப்பும் முதல் செய்தி!

கர்ப்பம் என்பது ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை முதன் முதலில் புதிதாக தொடங்க செய்யும் ஒரு அழகிய உணர்வாகும். கர்ப்பம் என்பது எரியும் மெழுகுவர்த்தியை ஏளனமாய் பார்க்கும் கர்ப்பிணி பெண் தீயை தாண்டிய துன்பத்தை சொற்களால் சில சமயத்தில் அனுபவிக்க துடிக்கும் ஒரு வலியாகும். பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறியாமலே அவள் ஏறி இறங்கும் கடைகளில் அனைத்து உடையையும் பார்த்து ஏக்கத்துடன் வீட்டுக்கு திரும்பும் ஒரு அழகிய வலியாகும். தனக்கு பிடிக்காதபோதும் குழந்தை புஷ்டியாக வளர கண்ணை மூடிக்கொண்டு மருத்துவர் மேல் முழு நம்பிக்கை வைத்து தொடர்ந்து மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவள் இவ்வுலகில் கர்ப்பிணி பெண் மட்டுமே. அவள் தன் கருவில் வளரும் குழந்தைக்கு உடல்மொழிகள் மூலமாக ஒரு சில விஷயத்தை கற்றுத்தருகிறாள். அது என்ன? வாங்க பார்க்கலாம்.

கோபத்தை குறைத்திடு:

கர்ப்பிணி பெண்களை கோபப்படுத்தி பார்ப்பதில் மற்றவர்களுக்கு அப்படி என்ன தான் ஆனந்தமோ தெரியவில்லை. ஒரு பெண் தேவையற்ற கோபத்தை தன்னுடைய கர்ப்பத்தின் போது தவிர்ப்பாள். ஆனால், அதையும் தாண்டிய புனித ஆத்மாக்கள் பூமியில் அவதரித்தது இவர்களை தொந்தரவு செய்ய தானா என ஏங்கும் அளவுக்கு ஒரு சிலர் நடந்து கொள்வர். "பிறக்க போவது ஆணாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..." என்பதில் தொடங்கி "இது வரை மருத்துவமனைக்கு எவ்வளவு செலவு செய்து இருக்கிறீர்கள்?" என்பது வரை கேட்டு கர்ப்பிணி பெண்ணின் மனதை கஷ்டப்படுத்துவதில் அப்படி என்ன தான் இவர்களுக்கு சந்தோஷமோ தெரியவில்லை! ஏதோ இவர்கள் தான் மருத்துவமனை கட்டணத்தை முழுவதுமாக ஏற்றுக்கொண்டது போல்... இதையும் கடந்து அமைதியாக வயிற்றை தடவி தரும் பெண், தன் மகனுக்கு இவ்வாறே அமைதியாக இருக்க கற்று தருகிறாள்.

அமைதியான நடை:

எங்கும் கூச்சல் ஒலி கேட்க, அதனால் ஒவ்வாத நிலைக்கு தள்ளப்படும் கர்ப்பிணி பெண், வெளியில் இயற்கையுடன் நட்புறவாட நளினமாக நடந்து செல்கிறாள். அப்போது கிடைக்கும் அமைதியானது அவளையும் மீறி வயிற்றில் கைகளை தடவிக்கொடுக்க செய்திட, இதன் மூலமாக இயற்கையை நேசிக்க தாய் கருவில் இருக்கும் குழந்தைக்கு கற்றுத்தருகிறாள்.

உணவு விஷயத்தில்:

கர்ப்பிணி பெண் எப்போதும் மிகவும் சத்துள்ள உணவை சாப்பிட ஆசைப்படுவாள். ஏதேனும் ஒரு உணவை எடுத்துக்கொண்டு ஒவ்வாமையை ஏற்படுத்தினால் உடனே அதை மீண்டும் எடுத்துக்கொள்ள அவள் கடுமையாக யோசித்தே முடிவு செய்வாள். இதனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட அவள் பழக்குகிறாள்.

உடை விஷயத்தில்:

கர்ப்ப கால நாட்கள் நகர தொடங்க தன் ஆடை விஷயத்தில் தளர்வுடன் இருக்கவே விரும்புவர். ஏனெனில் வயிற்றின் அளவு பெருக அவர்கள் இறுக்கமான ஆடை அணிந்துகொள்வதில் அசவுகரியம் காணப்படும். எனவே, அவர்கள் வீட்டிலிருக்கும்போது முடிந்தளவுக்கு தன் மனம் சொல்வதை கேட்டு மற்றவர்கள் குறைகூறுவதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். இதன் மூலமாக இந்த உலகம் நாம் என்ன செய்தாலும் குறை சொல்லும். அதை கண்டுக்கொள்ளாமல் சரியான வழியில் முழு மனதுடன் நீ செல் என் மகனே என்பதை கர்ப்பிணி பெண்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தெரியப்படுத்துகின்றனர். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon