Link copied!
Sign in / Sign up
12
Shares

மென்மையான ஐஸ்-கிரீம் தினத்தின் வரலாறும் வீட்டில் செய்யும் முறைகளும்

குழந்தைகள் முதல் பெரியோர் வரை பெரும்பாலும் விரும்பக் கூடிய ஒன்று தான் ஐஸ் கிரீம். இப்பொது ஐஸ் கிரீம் என்றாலே பல வடிவங்கள், வித விதமான சுவை என அனைவரின் கவனைத்தையும் இருக்கிறது. இந்த ஐஸ் கிரீம்களின் விலை 2 ரூபாய் முதல் துவங்குகிறது. ஐஸ் கிரீம்களில் அதிக விலையில் முதல் இடத்தை பிடித்திருக்கும் ஐஸ் கிரீம் சண்டேன். இதன் விலையை நம்மால் அனுமானிக்க கூட முடியாது. அப்படி எவ்வளவுதான் விலை என்கிறீர்களா? அந்த விலை 40 இலட்சம். இப்படி பல விதங்களில் வடிவங்களில் நாம் ஐஸ் கிரீம்களை சுவைக்கிறோம். இன்று மென்மையான ஐஸ் கிரீம் தினத்தின் வரலாறு மற்றும் ஐஸ் கிரீம் செய்யும் முறைகளை பார்க்கலாம்.

மென்மையான ஐஸ் கிரீம் தினத்தின் வரலாறு

இன்று ஆகஸ்ட் 19, தேசிய மென்மையான ஐஸ் கிரீம் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வகை ஐஸ் கிரீம் தினம் 1930 ஆம் ஆண்டுகளில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. மென்மையான ஐஸ் கிரீம் என்பது, பொதுவாக மென்மையாக பரிமாற படுவது அல்லது மென்மையாய் மாற்றப்பட்டிருப்பது. இது உறை நிலையின் போது காற்று சேர்க்கப்படுவதால் வழக்கமான ஐஸ் கிரீம் விட மென்மையானது. இந்த காற்று அதை மென்மையாக்குவதோடு, அதன் வடிவத்தை இளக செய்கிறது.

ஒரு விபத்தின் காரணமாக மென்மையான ஐஸ் கிரீம் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 1934 ஆம் ஆண்டு டாம் கார்வெல் அதன் உரிமையாளர், வாகனம் பழுதானதால் அவர் பெயரிடப்பட்ட ஐஸ் கிரீம் பிராண்டை உருகிய நிலையில் விற்க வேண்டியதாயிற்று. அப்போது மக்கள் மென்மையாக உறைந்த நிலையில் இனிப்புடன் இருக்கும் ஐஸ் கிரீமை மகிழ்ச்சியுடன் உண்பதை கவனித்த அவர், இது ஒரு நல்ல வர்த்தக யோசனை என்று முடிவெடுத்தார். டைரி குயின் நிறுவனமும் மென்மையான ஐஸ் கிரீம் கண்டுபிடித்ததாக கூறுகிறது.

இந்த மென்மையான ஐஸ் கிரீம்கள் 1960 களில் பிரபலமாகியது, எந்திரமயமாக்கப்பட்ட காற்றுப் பாம்புகள் ஐஸ் கிரீம் விற்பனை இயந்திரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஐஸ் க்ரீமில் காற்றின் அளவு இரட்டிப்பாக்க அனுமதித்தது. இதன் வடிவம் மிகவும் மென்மையாகவும், அதிக கிரீம்களுடனும், அதீத சுவை கொண்டிருக்கும்.

வீட்டில் ஐஸ் கிரீம் தயாரிக்க

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்

முட்டை - 3

சர்க்கரை - 200 கிராம்

வெண்ணை - 3 தேக்கரண்டி

முந்திரி - சிறிதளவு

செய்முறை :

1 தண்ணீர் சேர்க்காத கெட்டியான பாலை, அடிப்பகுதி கனமாக உள்ள ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் ஆகும் வரை அடிப்பிடிக்காத படி நன்கு சண்ட சுண்ட காய்ச்சி ஆற வைக்கவும்.

2 முட்டையில் மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்து, அதனுடன் 150 கிராம் சர்கரை சேர்த்து, இலேசான மஞ்சள் நிறம் வரும் வரை நன்கு கலக்கவும். அதனுடன் பாலில் சிறிது சேர்த்து கூல் போல் கரைத்து கொள்ளவும்.

3 பின் ஒரு பாத்திரத்தில் பாலை உற்றி, அதனுடன் இரண்டு தேக்கரண்டி வெண்ணை மட்டும் அந்த கலவையை சேர்த்து ஓரளவிற்கு கெட்டியாகும் வரை நன்கு கிளறவும். அடுப்பை அணைத்தபின் அதில் ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்த்து கலக்கவும்.

4 அந்த கலவையை ஆற வைத்து, காற்று புகாதபடி பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து 2 முதல் 3 மணி நேரம் பிரிசேரில் வைக்கவும்.

5 பின் அதை எடுத்து, மிஸ்சியில் இட்டு நன்கு அடித்து 2 முதல் 3 மணி நேரம் மீண்டும் பிரிசேரில் வைக்கவும். இது போல் 3 முறை செய்யவும். இறுதியில் 1 தேக்கரண்டி வெண்ணையில் வறுத்த முந்திரியை இதனுடன் சேர்த்து பிரிசேரில் வைத்து எடுத்தால் ஐஸ் கிரீம் தயார்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon