Link copied!
Sign in / Sign up
1
Shares

கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் எப்படிப்பட்டது?

கர்ப்ப காலம் என்பது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டிய ஒரு காலமாகும். எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த புத்தகம் படிக்க வேண்டும்? போன்ற விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் கர்ப்பிணிகள் எந்த மருந்து எடுத்துக்கொள்ள வேண்டுமென மட்டும் யோசிக்காமலா இருப்பார்கள். 

பரிந்துரை செய்யப்படும் மருந்துகள்:

நீங்கள் பரிந்துரை செய்யப்படும் மருந்துகளை எடுக்கும் முன்னர், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது மிகவும் முக்கியம்.

ஒருவேளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து, மருத்துவர் பரிந்துரைக்கு பின்னரும் ஆஸ்துமா, நீரிழிவு நோய், மன அழுத்தம், வலிப்பு பிரச்சனை போன்றவை தந்தால்., மீண்டும் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமா என்பதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இது உங்கள் ஒருவர் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் நிலையை நினைத்து பார்த்தீர்களா?

பரிந்துரை செய்யப்படாத மருந்துகள்:

கர்ப்பமாக இருக்கும்போது எந்த ஒரு மாத்திரை/ மருந்தை நீங்கள் எடுத்துக்கொள்ளும் முன்னரும் முறையான மருத்துவ குறிப்பை பெற வேண்டும். இந்த மாத்திரையை சாப்பிடலாமா? இதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் உண்டா போன்றவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஒரு ஆய்வின் படி கர்ப்பிணிகள் எக்காரணம் கொண்டும் தன் மனம் சொல்வதை கேட்டு மருந்துக்கடை, சூப்பர் மார்க்கெட்டில் வாங்க வேண்டாம் என்கிறது. 

வலி நிவாரணி:

1. பாராசிட்டமால் போன்றவை எந்த வித தீங்கையும் ஏற்படுவத்துவதில்லை என்றாலும், மருத்துவ ஆலோசனை பெற்று அதன்பின்னர் எடுத்துக்கொள்ளுங்கள். காரணம், கர்ப்பிணிகளுக்கு வரும் காய்ச்சல் என்பது சாதாரணமானது அல்ல. என்ன காரணம் என தெரியாமல் பாராசிட்டமால் எடுப்பது மிகவும் தவறு.

2. ஆஸ்பிரின் மற்றும் ஐபுப்ரோபின் போன்ற வலி நிவாரண மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டாம். மருத்துவர் சில நேரங்களில் குறைவான பவர் கொண்ட ஆஸ்பிரினை பரிந்துரை செய்வார். அதன் அளவுகூட ஒரு நாளைக்கு 100 கிராம் என்ற விகிதத்தில் தான் அமைகிறது. அதனால் முறையான பரிந்துரை இன்றி ஆஸ்பிரின் போன்றவற்றை முயல வேண்டாம்.

காலை சுகவீனம்:

1. கர்ப்பிணிகளின் குமட்டல் மற்றும் வாந்திக்கு பல மருந்துகள் இருக்கிறது. இவற்றை மருத்துவரின் பரிந்துரை இன்றி நீங்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

சளி மற்றும் இருமல் மருந்து:

1. ஒரு சில சளி மற்றும் இருமல் மருந்துகள் பாதுகாப்பானது என்றாலும், மருத்துவரின் பார்வைக்கு இணங்க எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூலிகை மருந்துகள்:

1. கர்ப்ப கால பெண்களுக்கு மூலிகை மருந்து மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதில் அந்த மூலிகையின் அளவு மிக அதிகமாக இருக்க கர்ப்பிணிகள் உடலுக்கு ஏற்றுக்கொள்வதாக அமைவதில்லை. எனவே, நீங்களாக எக்காரணம் கொண்டும் முயல வேண்டாம்.

பருக்கள் சிகிச்சை:

1. பருக்களுக்கான மருந்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும் மருத்துவர் பரிந்துரைக்கு இணங்க வாங்குவது தேவையற்ற கவலையை தீர்க்கும்.

2. இந்த மருந்துகளால் உங்கள் குழந்தை பிறப்பில் குறைபாடு ஏற்பட சில சமயத்தில் வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. 

எந்த வைட்டமின் வேண்டும்?
போலிக் அமிலம்:

கர்ப்பமாக இருப்பவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு போலிக் அமிலம் நிறைந்த உணவு அல்லது மாத்திரை எடுத்துக்கொள்ள குழந்தை பிறப்பில் குறைபாடற்று பிறக்கிறது. இந்த போலிக் அமிலம் அடங்கிய மாத்திரையை நீங்கள் பெற, மருத்துவரின் முறையான பரிந்துரை இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

இரும்பு மற்றும் கால்சியம் சத்து:

கர்ப்பிணிகள் சரியான அளவில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அடங்கிய மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ளலாம்.

மற்ற வைட்டமின்கள்:

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறை சரியாக இருந்தால் மற்ற வைட்டமின்களும், தேவையான தாதுக்களும் உங்களுக்கு கிடைக்ககூடும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon