Link copied!
Sign in / Sign up
0
Shares

மழலைகள் வெளியில் விளையாடலாமா? கூடாதா?

மழலைகள் வெளியே சென்று விளையாடுவதை, இன்றைய சூழலில், பெரும்பாலான பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை; அவர்கள் வெளியே சென்று விளையாடுவதை தடுக்காமல், குழந்தைகளை வெளியில் சென்று விளையாட அனுமதிக்க வேண்டும். வெளியில் சென்று விளையாடுவதால், குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என எண்ணினால், நீங்களும் அவர்களுடன் சேர்ந்து சென்று, குழந்தைகளை சற்று கண்காணியுங்கள். உங்களுக்கு வேலை இருப்பதற்காக, உங்களால் குழந்தைகளுடன் சேர்ந்து நேரம் செலவிட இயலவில்லை என்பதற்காக குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைப்பது மிக தவறான விஷயம்.

ஆகையால், குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்காது, அதனால் அவர்கள் பெறும் நன்மைகளை பதிப்பினை தொடர்ந்து படித்தறியுங்கள்...!!

உடற்பயிற்சி.!

குழந்தைகள் இயற்கை சூழலில், வெளியே சென்று விளையாடுவதால், அவர்களின் உடல்நலம் மேம்படும்; மேலும் அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து ஓடியாடி  விளையாடுவதால், குழந்தைகளுடைய எலும்புகள் மற்றும் தசைகள் உறுதியாகின்றன. வீட்டில், ஆரோக்கியத்திற்காக தனியே உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்ற தேவையே இல்லை; குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதே மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் அமையும்.

ஆரோக்கியம்..!

உடலிலுள்ள தேவையற்ற கலோரிகள் மற்றும் கொழுப்புகள் விளையாட்டின் மூலம், வியர்வையாக வெளியேறிவிடும். குழந்தைகள் வெயிலில் விளையாடும் போது, அவர்கள் உடலுக்கு தேவையான விட்டமின் டி கிடைக்கும்; இதனால் குழந்தைகள் உடலளவில் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இயங்க முடியும்.

கற்றல்..!

குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதால், அவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும்; மேலும் விட்டுக்கொடுத்தல், திட்டமிட்டு செயல்படுதல், அனைவரிடமும் நட்புடன் பழகுதல் ஆகிய நற்குணங்களைக் கற்றுக்கொள்ள இயலும். இதனால், தினந்தோறும் புதிது புதிதாகக் கற்று கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்; பள்ளியிலும் அதே கவனத்துடன் அவர்களால் செயல்பட முடியும்.

குண நலன்கள்..!

அனைத்து நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுகையில், தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் அதிகரிக்கும்; சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் பயப்படும் குழந்தைகளுக்குக் கூட மன உறுதியை, விளையாட்டால் தரமுடியும். அச்சத்தைப் போக்கி தைரியத்தை உண்டாக்கும்; படைப்பாற்றல் அதிகரிக்கும். அனைவருடன் சேர்ந்து கூடி வாழ்தல், மற்றவர்களுடன் இணைந்து செல்லல், ஒத்துப்போதல் போன்ற சமுதாய வாழ்வியலைக் கற்றுக்கொள்ள முடியும்.

குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவது, அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்து, அழகான நினைவலைகளை தருவதோடு, சிறு வயதிலிருந்தேயான அவர்களின் நட்பு வட்டத்தையும்  விரிவாக்கும்; அவர்கள் வளர வளர, இந்த நட்பு வட்டமும் வளர்ந்து பலப்படும். 

இத்தகைய நன்மைகளை விளையாட்டு அளித்தாலும், விளையாடுகையில் ஏதேனும் அடிபடாமல் இருக்க, காயங்கள் ஏற்படாது இருக்குமாறு பார்த்துக் கொள்ள பெற்றோரான நீங்கள் உடனிருந்தால் நல்லது. மேலும் குழந்தைகளுடன் வெளியே செல்கையில், அது உங்கள் குழந்தைப்பருவ நிகழ்வுகளை நினைவுபடுத்துவதோடு, பணிச்சுமையினால், ஏற்படும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon