Link copied!
Sign in / Sign up
1
Shares

மழைக்கால நோய்களிலிருந்து குழந்தைகளை காக்க உதவும் குறிப்புகள்..!

மழைக்காலத்தில் குழந்தைகள் அடிக்கடி நோய்தொற்றுக்கு உள்ளாவது வழக்கமே! அப்படி குழந்தைகள் நோய்தொற்றுக்கு ஆளானால், குழந்தைகள் அதிலிருந்து விடுபட அதிக காலம் ஆகலாம்; இல்லையேல் அடுத்தடுத்த நோய்த்தொற்றுகள் உண்டாகலாம். இந்த காலகட்டத்தில் குழந்தைகளை நோய்தொற்றுகளில் இருந்து காப்பது என்பது பெரும் சவாலே! ஆனால், பெற்றோரான நீங்கள் அத்தகைய சவாலை சமாளிக்கும் முறை அறிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த சவாலை சமாளிக்கும் முறைகளை அறிய பதிப்பிற்குள் சென்று படிக்கலாம்..!

1. நீர்..!

என்னதான் மழைக்காலமாக இருப்பினும், குழந்தைகள் நன்கு தண்ணீர் பருகி நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும். தாகமே ஏற்படவில்லையெனினும் குழந்தைகள், நன்றாக தண்ணீர் அருந்துமாறு கவனித்துக் கொள்ள வேண்டும். காய்ச்சிய நீரை பயன்படுத்துவது நல்லது. இது நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

2. கைகள்..!

குழந்தையின் கைகள் சுத்தமானதாக இருக்க வேண்டும். குழந்தைகள் விளையாடிய பின்னர் நன்கு கை மற்றும் கால்களை கழுவ வேண்டியது அவசியம். மேலும் உணவு உண்பதற்கு முன்னரும் பின்னரும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

3. கொசுக்கள்..!

மழைக்காலத்தில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, பரவுவதால், குழந்தைகள் இருக்கும் இடத்தில் கொசுக்களை தடுக்கும் வழிகளை அமைப்பது அவசியம். கொசுவிரட்டிகளை செயற்கையான முறையில் பயன்படுத்தாது, இயற்கை கொசு விரட்டிகளை பயன்படுத்தினால், அது குழந்தையின் நலனைக் காக்கும்.

4. குளியலுக்கு பின் குளியல்..!

குழந்தைகள் மழையில் நனைந்துவிட்டால், அவர்களை துடைத்து மட்டும் விட்டுவிடாமல், அவர்களை வெந்நீரில் மற்றோரு குளியல் போடச் செய்ய வேண்டும். இது குழந்தைக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படாமல் தடுத்து, குழந்தைக்கு இதமாக இருக்கும்.

5.தேங்கிய நீர்..!

தேங்கிய நீரில் கொசு உற்பத்தி மற்றும் இதர பாக்டிரியாக்கள் உற்பத்தியாவதால், குழந்தைகள் தேங்கிய நீர் உள்ள பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகள் நீரில் அதிகம் விளையாடாமல் காக்க வேண்டும்.

இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பின்னும் குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்பட்டால், அவர்களை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று, குணமாக்க முயல வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடாது..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon