Link copied!
Sign in / Sign up
2
Shares

மாட்டு பொங்கலின் சிறப்பு மற்றும் கொண்டாட நல்ல நேரம்

பொங்கல் தமிழர் பண்டிகையில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இது போகியில் துவங்கி காணும்பொங்கலை இறுதி நாளாக கொண்டது. பொங்கலன்று அனைத்திற்கும் அடிப்படையான சூரியனுக்கு பொங்கலிடுவார்கள். அதே போல், அதற்கு அடுத்த நாள், உழவு தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு பொங்கலிடுவார்கள். இங்கு மாட்டு பொங்கல் வைப்பதற்கான சிறந்த நேரம் பற்றி பார்க்கலாம்.

மாட்டு பொங்கல்

உழவர்களின் உற்ற நண்பனாக இருக்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறி மதிப்பளிக்கும் நாளே மாட்டுப் பொங்கல். இது பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை பட்டிப் பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் அழைப்பார்கள். பசுக்களை கடவுளின் மறு அவதாரமாக கருதுவதாலும், உழவுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கும், வீட்டில் ஒருவராய் வளர்ப்பதாலும் அவற்றிற்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிடுகின்றனர்.

மாட்டுப் பொங்கலன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினை சுத்தம் செய்து, கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, கொம்புகளை சீவிவிடுவார்கள். மாடுகளின் கொம்புகள் பளபளப்பாக தெரியும் வகையில் வண்ணங்கள் பூசி விடுவார்கள். கொம்பில் மணிகள், சலங்கைகள் அல்லது தோலாலான வார் பட்டையில் சலங்கைகளை கட்டி அவற்றை மாடுகளுக்கு அணிவித்து அலங்காரபடுத்துவார்கள்.

பின் மாட்டிற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தால் திலகமிட்டு, மூக்கில் இருக்கும் கயிறு மற்றும் கழுத்தில் அணிவிக்கும் கயிறு போன்றவற்றை மாட்டிற்கு அணிவித்து பூஜை செய்வார்கள். உழவுக்கு பயன்படுத்தும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைப்பார்கள். அந்த வருடத்தில் விளைந்த பயிர், காய்கறிகளுடன் தேங்காய், பூ, பழம், நாட்டு சர்க்கரை என அனைத்தும் பூஜைக்காக வைப்பார்கள்.

தொழுவதிலேயே பொங்கல் வைப்பார்கள். அதை கடவுளுக்கு படைத்தது தீபாராதனை காட்டுவார்கள். பின், மாடு, ஆடு மற்றும் எருமை போன்ற கால்நடைகளுக்கு பொங்கல் மற்றும் பழம் கொடுப்பார்கள். இது கால்நடைகளுக்கு நன்று கூறும் விதமாக கொண்டாடுகிறார்கள்.

மாட்டுப் பொங்கல் வைக்க சிறந்த நேரம்

காலை : காலை 06:50 முதல் 7:50 மணிக்குள் பொங்கல் வைக்க வேண்டும்.

மாலை : மாலை 4:00 மணிக்கு மேல் 4:20 மணிக்குள் மாட்டு பொங்கல் வைத்து விடவும். அதன் பின் மரண யோகம் இருப்பதால், மாட்டுப்பொங்கல் வைக்க கூடாது. 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon