Link copied!
Sign in / Sign up
29
Shares

மாதவிடாய் காலத்தில் நீங்கள் பயன்படுத்துவது எது?

பெண்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயது வரை மாதவிடாய் என்ற அனுபவத்தை உணர்ந்தே ஆக வேண்டும். மாதவிடாய் குறித்து பேசுவதே அருவருப்பு என்று இருந்த காலம் மாறி, தற்போது பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டுள்ளது. பெண்கள் மாதவிடாய் காலத்தின் போது தனிமையில் வீட்டின் ஓரமாக இருக்க செய்திருந்தார்கள் நாம் முன்னோர்கள். மேலும் அவர்கள் மாதவிடாய் காலத்தின் போது உடலும் மனதாலும் சோர்வுற்று இருப்பதால், அவர்களுக்கு எந்த வேலையும் கொடுக்கக்கூடாது என்பதற்கான ஏற்பாடு இது.  

இன்றைய காலகட்டத்தில் நாகரிகம் எனும் பெயரில் அனைத்தும் மாறிவிட்டிருக்கிறது. அதே போல் உடலுக்கு தீங்கு விளைக்காதபடி துணிகளையே பயன்படுத்தினார்கள். இப்போது நாப்கின்களை பயன்படுத்த துவங்கிவிட்டார்கள்.ஆனால் அதே நேரத்தில் மாதவிடாய் காலத்தின்போது பயன்படுத்தும் நாப்கின்கள் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடமும் இருக்கின்றதா என்பது சந்தேகமே. இவற்றால் ஏற்படும் நம்மை தீமைகளை பார்ப்போம்.

துணிகளை பயன்படுத்தும் முறை

1 மாதவிடாய் காலத்தில் துணிகளை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இது நமக்கு பாதுகாப்பளிக்க கூடியது. இயற்கையான வழிகளை பின்பற்றுவதே சிறந்தது.

2 துணிகளை பயன்படுத்தும் போது அவை வெண்மை நிறத்தில் இருப்பவையாக இருக்க வேண்டும்.

3 சுத்தமாக துவைத்து நன்கு வெயிலில் காயப் போட வேண்டும். இதனால் இதிலுள்ள கிருமிகள் அழிக்கப்படும்.

4 இவற்றை அடிக்கடி மாற்றுவது சிரமமான ஒன்று என்றாலும், இதனால் நாம் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

நாப்கின் பயன்படுத்தும் முறை

1. நாப்கின்களை வாங்கும்போது, இரசாயனமற்ற நாப்கின்களை வாங்குவது நல்லது. ஏனெனில், ஈரத்தை உறிஞ்சுவதற்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் புற்றுநோயை உருவாக்குவதற்கான வாய்ப்பு உண்டு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

2. ஏற்கனவே பயன்படுத்திய நாப்கினை நீக்கி விட்டு, புதிய நாப்கின்களை கைகளைக் கழுவாமல், அதே கைகளால் எடுத்து பயன்படுத்த கூடாது. நாப்கினை நீக்கியவுடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பின்னர், புதிய நாப்கின்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் பிறப்புறுப்புகளில் அரிப்பு மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும்.

3. நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். ஏனெனில் நாப்கின்களில் உதிரப் போக்கு அதிகமாக இல்லாது இருந்தாலும், அதிக நேரம் பயன்படுத்துவதால் நாப்கின்களில் உருவாகும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஒவ்வாமை ஏற்படும். 

4. பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எந்த காரணத்தை கொண்டு கழிவறையில் போட்டு தண்ணீரை பிளஷ் செய்ய கூடாது. இதனால் மற்றவர்கள் கழிவறையை பயன்படுத்தும்போது தொற்று நோய் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

5. அதே போல் பயன்படுத்திய நாப்கினை, இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள்.

என்னதான் நம் வசதிக்காக நாப்கின்களை பயன்படுத்தினாலும், துணியை பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் உடலில் எந்த இரசாயன பாதிப்பும் ஏற்படாது. உங்கள் உடல் நலனை காக்க விரும்பினால் நாப்கின்களை விடுத்தது துணிக்கு மாறுங்கள்.

என் இனிய தமிழ் தோழிகளே! நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்..! உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்..! நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்..! சுற்றுச்சூழல் கெடாவண்ணம் அப்புறப்படுத்தவும்.! பெரும்பாலும் நல்ல பாதுகாப்பான நாப்கின்களை உபயோகிப்பது நல்லது..! அதுவே, எளிதானது, பொருளாதாரத்திற்கும் ஏற்றது..! 

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon