Link copied!
Sign in / Sign up
1
Shares

மருத்துவமனையை அடையும் முன்னே பிறந்த குழந்தை? நடந்தது என்ன?

அமெரிக்காவில் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வழியிலே அழகான குழந்தையை ஈன்றெடுத்தார் இவானோ பிரெய்ட் என்பவர். தன் மனைவி பிரசவ வலியில் துடிக்க அவரை வேகமாக காரில் அழைத்து சென்றார் அவர் கணவர். ஆனாலும், ஐந்து நிமிடத்தில் அனைத்தும் நடந்தேற, மருத்துவமனைக்கு செல்லும்முன்னே குழந்தையையும் பெற்றார் இவானோ.

இதில் ஆச்சரியம் என்னவென்றால்... மருத்துவமனைக்கும், இவானோ வீட்டிற்கும் உண்டான தூரம் என்பது 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில்  குழந்தை தன் தலையை தூக்கி பார்க்க, அவர் கணவன் கிறிஸ் மருத்துவமனைக்கு விரைந்து ஓட்டியபடி ஸ்டேரிங்கை பிடித்திருந்தார்.

அடுத்த நொடியே குழந்தையின் தோல் மெல்ல தெரிய, குழந்தை இஸ்ரா மருத்துவமனையை அடையும் பத்து நிமிடத்திற்கு முன்னே அழகாக பிறந்தாள்.

28 வயதான இவானோ தன்னுடைய பிரசவ அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ளும்போது கூறியது... "இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. நாங்கள் மருத்துவமனையை அடைய, எனக்கு தேவையான சிகிச்சைகள் எல்லாம் விரைவில் தொடங்கியது. இரண்டே நாளில் வீட்டுக்கு சென்றுவிடலாம் எனவும் மருத்துவர்கள் கூறினார்கள். நான் காரில் இருந்த போது அடைந்த வலி என்பது, வார்த்தைகளால் உணர்த்த முடியாத ஒன்று. இதுவரை என் வாழ்வில் நான் கண்டிடாத ஒரு வலியும் கூட... எனக்கு என்ன நடக்கிறது என்பதை நானே கண்ட ஒரு அதிசயம்..."

"நான் இறந்துவிடுவேனோ என்ற பயம். என்ன நடக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நீங்கள் திரைப்படத்தில் பார்ப்பதை நான் நேராக கண்டேன்... ஒரு தாயாக... என்னால் தாங்க முடியவில்லை என நான் கத்தினேன். என் குழந்தையின் தலை மெல்ல வெளியே வந்தது. என் கணவரின் அட்ரினலின் மிகவும் துடிப்புடன் இருப்பதை அவர் விரைந்ததை கொண்டு அறிந்தேன். எங்களால் அவசர ஊர்திக்காக காத்திருக்க நேரமில்லை. அதனால் என் கணவன் தான் சூப்பர் மேன் போல் வேகமாக சென்றார். இருப்பினும், என் குழந்தை வெளிவருவதை நான் என் கண்களால் கண்டுவிட்டேன்..." இவ்வாறு இவானோ கூறினார்.

மருத்துவமனையை அடைந்த இவானோவையும், புதிதாய் பிறந்த குழந்தையையும் வரவேற்ற மருத்துவர்கள் காரில் வைத்தே, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டினர்.

அதன் பின்னர் குழந்தையை மேலே தூக்கி சுத்தம் செய்து, இருவரையும் மருத்துவமனை உள்ளே அழைத்து சென்றனர்.

தாய், சேய் இருவரும் நலம் என தெரியவர மருத்துவர்கள் அதிசயித்து பார்த்தபடி தேவையான பணிவிடைகளை இவானோவிற்கு செய்து முடித்தனர்.

மருத்துவர்கள் இதுவரை பார்த்திடாத ஒரு சம்பவத்தை கண்டு அதிசயித்து நிற்க, குழந்தையின் சரித்திரம் என்பது, பிறக்கும் போதே இவ்வளவு இனிமையானதாக இருக்குமென யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அல்லவா...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon