Link copied!
Sign in / Sign up
4
Shares

சுமங்கலி பெண்கள் எந்த திசை நோக்கி குங்குமம் வைக்க வேண்டும்?

திருமணம் முடிந்த சுமங்கலி பெண்கள் தலை வகிட்டில் நுனியில் குங்குமம் இடுவது வழக்கம் தான். ஆனால் ஏன் வைக்கிறார்கள் என உங்களுக்கு தெரியுமா? நெற்றியில் புருவ மத்தியில் மூளையின் முன்புறமாக பைனியல் எனும் சுரப்பி இருக்கிறது. யோகா சாஸ்திரத்தில் கூட இந்த சுரப்பி பற்றி சொல்லப்படுகிறது. இது சிவபெருமானின் நெற்றி கண்ணாக கருதப்படுவதால் ஞானக்கண் என்றும் அழைப்பர்.  

திபெத்தில் இது போன்ற ஒரு சடங்கு செய்யப்படுகிறது. அதாவது இதன் சிறப்பை உணர்த்துவதற்காக நெற்றியில் குங்குமம் இட்டு மகிழ்வர்.

குங்குமம் வைப்பதால் என்ன நன்மைகள்?

குங்குமத்தை சுமங்கலி பெண்கள் நெற்றியில் வைப்பதால், நெற்றி புருவத்தின் நுண்ணிய பகுதியில் நம் உடலிலுள்ள மின்காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. அந்த சக்தியானது நம் உடலில் ஏற்படும் உஷ்ண பிரச்சனையால் உண்டாகும் தலைக்கனம் மற்றும் தலைவலியை தடுக்கிறது. உடலில் குளிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இதனால் நம் முகம் பிரகாசம் வழிய காணப்படும்.

ஒரு பெண்ணின் நெற்றியில் சந்தனம் அல்லது குங்குமம் இடுவதற்கு இதுவே காரணமாகும்.

எந்த திசையில் குங்குமம் வைக்க வேண்டும்?

மங்களத்தின் அடையாளமாக விளங்கும் குங்குமத்தை பெண்கள் கிழக்கு நோக்கி நின்றுக்கொண்டு தன்னுடைய புருவ மத்தியில் வைக்க வேண்டும்.

இதனால் பெண்களுக்கு பிடித்த திருஷ்டி நீங்க லட்சுமி கடாக்ஷ்ம் பொங்கி வழியும் எனவும் சொல்லப்படுகிறது.

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon