Link copied!
Sign in / Sign up
1
Shares

மறதியை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரைகள்

திருமணமான இளம் தம்பதியினர் குழந்தையை சில காலத்திற்கு வேண்டாம் என தீர்மானித்து கருத்தடை மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள். குழந்தை பெற்ற தம்பதிகள் இரு குழந்தைகளுக்கு இடையில் இடைவெளி கொடுக்க கருத்தடை மாத்திரைகளை உபயோகிறார்கள். மாத்திரைகள் என்றாலே பக்க விளைவை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், கருத்தடை மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுடன் மறதியையும் ஏற்படுத்துகின்றன. இங்கு கருத்தடை மாத்திரைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை பார்க்கலாம்.

வெள்ளைப் படுதல் பாதிப்பு

கர்ப்பம் அல்லது கருத்தடை மாத்திரைகளால் ஹார்மோன் அளவுகள் மாறி உறுப்புகளில் ஒருவித காளான்கள் வளரக்கூடிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் பிறப்பு உறுப்பில் அரிப்பு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகின்றன.

மறதிநோய்

மேலும் நீண்ட நாட்கள் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது பெண்களின் நினைவாற்றலை பாதித்து மறதி நோயை உருவாக்குகிறது. சில பெண்களிடம் நடத்திய ஆய்வில், அவர்களின் நினைவாற்றல் திறன் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு காரணம் அவர்கள் அனைவரும், கர்ப்ப தடை மாத்திரையை பயன்படுத்துபவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த மாத்திரைகள் பெண்களின் ஹார்மோன் உற்பத்தியை தடை செய்கின்றன. அதன் மூலம் நினைவாற்றல் பாதித்து மறதி நோய் ஏற்படுகிறது. எனவே கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ள நினைக்கும் பெண்கள் இனி கவனமுடன், மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

பக்கவிளைவுகள்

1 சீரற்ற மாதவிடாய்

2 குமட்டல்

3 தலைவலி

4 உடல் எடை அதிகரித்தல்

5 மனஅழுத்தம்

6 அந்தரங்க உறுப்பு வெளியேற்றம்

7 கண்பார்வை குறைபாடு

அறிகுறிகள்

1 வயிற்றுவலி அல்லது அடிவயிற்று வலி

2 மார்பக வலி

3 தீவிர தலைவலி

4 பார்வை மங்குதல்

5 கால்களில் சிவப்பு நிற தடிப்புகளோ அல்லது வீக்கங்களோ காணப்படும்

முடிந்த வரை கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை தவிருங்கள். மருத்துவ ஆலோசனையோடு கருத்தடை சாதனங்களை அணிந்து கொள்ளுங்கள். கருத்தடை சாதனங்கள் அணிய விருப்பமில்லை என்றால், இயற்கை முறையில் கருத்தடை பொருட்களை பயன்படுத்துங்கள். இவை கருத்தடை சாதனமாக பயன்படுவதோடு, பக்கவிளைவுகள் அற்றவையாகவும் இருக்கின்றன.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon