Link copied!
Sign in / Sign up
8
Shares

மண்ணில் செய்த மண்டபம்...இடிக்க தயாரா?

கரையான், வருட கணக்கில் வாடகை தராமல் நம் வீட்டில் வாழ்ந்து வரும் ஒருவன். இந்த கரையானே ஓசியில் ஏசி காற்று வாங்க... இவன் இன்னொருவனுக்கு உங்கள் வீட்டை இலவசமாக வாழ தருகிறான். அவன் தான் குளவி. இது என்ன வேடிக்கை பார்த்தீர்களா? தமிழில் ஒரு பழமொழி உண்டு. 'இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்பார்களாம்...' அந்த கதையாக அல்லவா இருக்கிறது. இதனால், குளவி செய்யும் அட்டகாசம், ஒன்றா? இரண்டா? மன்னர் ஆட்சியில் கொடுங்கோல் புரிந்தார் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதை குளவியின் மூலமாக தினந்தினம் பார்த்து வருகிறோம் என்பதே உண்மை. நாற்காலியில் நாம் அமர, நமக்கு முன்னே கரையான் வீடு கட்டி குளவிக்கு வாடகைக்கு விட்டுருக்கிறான் என்ன செய்வது? இந்த கரையானுக்கு முடிவு கட்டினாலே, குளவிக்கும் சேர்த்து முடிவு கட்டிவிடலாம் என கரையானை அழிக்க மருந்து தேடினேன். அப்போது தான் கரையான் பற்றிய பல சுவாரஸ்யமான தகவலை நான் தெரிந்துக்கொண்டேன். அதை, இதோ உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

கரையான் வகைகள்:

கரையான் மூன்று வகைப்படும். அவை,

1. நிலத்தடி கரையான்

மண்ணில் வாழ வீட்டை கட்டும். மரத்துடன் தொடர்பு கொண்டு, வீட்டிற்குள்ளும் புகும். இந்த கரையான் U.Sஇல் அதிகம் காணப்படுகிறது.

2. ஈர மரம் கரையான்

மரத்தின் பரப்பு ஈரத்துடன் இருக்க, இக்கரையான் தன் ராஜ்ஜியத்தை அமைக்கிறது. இதன் பிறப்பிடமாக நம் வீடு இருக்க, இதனால் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஈரமான மரத்தின் மீது பூமி பூஜை போடுகிறது.

3. உலர் மரம் கரையான்

இது காய்ந்து போன மரத்தில் தன் இடத்தை அமைக்கிறது என்றாலும் மண்ணுடன் காதல் கொள்வதில்லை.

கரையான் அரிப்பை எப்படி கண்டுபிடிப்பது?
1.  மரத்தில் ஏற்படும் சேதம்:

நம் வீட்டின் அடித்தளம் என்பது மரம் மற்றும் செங்கல்லால் அமைக்கப்படுகிறது. அப்படி இருக்க...நாளைடைவில் கரையான், மரத்தில் புகுந்து விளையாட தொடங்குகிறது. இதனால் சுவரிலும் தெறிப்பு விழ ஆரம்பிக்கும். அதனால், முடிந்த அளவிற்கு வாரத்தில் ஒருமுறை உங்கள் வீட்டை சுற்றி நோட்டம் விடுவது நலம். நீங்கள் தாமதமாக பார்க்கும்போது வீட்டின் அடித்தளத்திற்காக அமைக்கப்பட்ட மரத்தின் வலிமை, கரையானால் பாதிக்கப்பட்டு, வீடும் இயற்கை பேரழிவின் போது ஆட்டம் காண வாய்ப்பிருக்கிறது.

2. இறக்கைகளால்:

கரையானுக்கு இறக்கை உண்டு. எனவே, உங்கள் வீட்டின் ஜன்னல் அல்லது கதவு ஓரத்தில் இறக்கை கிடக்குமெனில் கரையான் இருக்கிறதா? என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.  மரத்தில் ஓட்டை போடும் கரையான்., இறக்கையை விட்டு செல்லும். இதன் இறக்கைகள் பார்ப்பதற்கு எறும்பின் இறக்கைகள் போல் இல்லாவிட்டாலும் அதே அளவில் இருக்கும். 

3. மண் குழாய்கள்:

கரையான் பூச்சிகளுக்கு குறிப்பிட்ட வெப்ப நிலையை தாங்கும் சக்தி தேவை. எனவே, அது மண்ணால் வீடு கட்டிக்கொண்டு உள்ளே வாழும். இதன் வீடு பார்ப்பதற்கு மண் குழாய் அமைப்புடன் காணப்படும். அப்படி என்றால், அதன் உள்ளே கரையான் பூச்சிகள் வாழ்கிறது என அர்த்தமாகும்.

4. மரத்தில் துளை:

உங்கள் வீட்டில் உள்ள மரத்துண்டுகளில் ஏதேனும் ஓட்டை இருக்கிறதா என்பதை பாருங்கள். மரத்தில் ஓட்டை இருந்தால் ஸ்க்ரீவ் ட்ரைவர் கொண்டு குத்தி பாருங்கள். மரத்தின் வலிமை குறைந்திருந்தால் கண்டிப்பாக கரையான் பூச்சி உள்ளே இருக்கிறது என அர்த்தமாகும்.

கரையானை கொல்வது எப்படி?

கரையானை அழிக்க கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், இந்த கெமிக்கல்கள் மிகவும் ஆபத்தை விளைவிக்க கூடியது என்பதால் அரசாங்கத்தின் முன் அனுமதி என்பது மிக அவசியமாகிறது. அதனால், இந்த கெமிக்கல் பயன்படுத்தும் தொழில் கொண்டவர் மூலம் மட்டுமே பெற முடியும்.

பர்மெத்ரின் டஸ்ட்:

இந்த கெமிக்கல் உடனடி பலனை தரக்கூடியது. இது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லி என்பதால், இதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு காணப்படக்கூடும். இது கரையானை மட்டும் அழித்திடாமல் எறும்பு, குளவி, பை புழுக்கள், தரை வண்டுகள் என பலவற்றையும் அழிக்கிறது.

இந்த கெமிக்கல், வீட்டு முதலாளிகளுக்கும், தொழில் செய்பவருக்கும் பிடித்தமான ஒரு கெமிக்கலும் கூட...

அர்செனிக் டஸ்ட்:

இந்த கெமிக்கலை ஒரு கரையான் சாப்பிட, இதனால் மற்ற கரையான்களுக்கும் அது உணவாகி உயிரை விடக்கூடும்.

குறைந்த வெப்பநிலை:

வெப்ப நிலை குறைவான இடத்தில் கரையான் வாழ்வது அரிது. அதாவது வெப்பநிலையானது 20 டிகிரி பேரன்ஹீட்டாக இருத்தல் அவசியம். இந்த வெப்ப நிலையை பெறுவதற்கு நீர்ம நிலையில் இருக்கும் நைட்ரஜன் உங்களுக்கு தேவைப்படுகிறது.

நீர் பாய்ச்சி நிலைகுலைய செய்யுங்கள்:

உங்கள் வீட்டு தோட்டத்தில் மண் குழாய் தென்பட்டால் உடனே தண்ணீர் அடித்து அந்த கரையான் புற்றை கலைப்பது நல்லது.

போதிய சூரிய வெளிச்சம்:

உங்கள் வீட்டின் உள்ளே சூரிய வெளிச்சம் குறைவாக நுழையுமெனில் கரையான் உங்கள் வீட்டை ஆட்சி செய்வது உறுதி. எனவே, பகல் நேரத்தில் உங்கள் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து வைப்பதன் மூலம் கரையானிலிருந்து விடுதலை பெறலாம்.

உப்பு கரிக்குது:

உப்புக்கு உங்கள் வீட்டு கரையானை அழிக்கும் பண்பு உண்டு.

ஒரு ஜாடியில், உப்பு மற்றும் சுடு நீரை சம அளவில் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த நீரை கொண்டு கரையான் புற்று காணப்படும் இடத்தில் ஷ்ப்ரே செய்திடுங்கள். இதனால், கரையான் வறண்டு வலுவிழந்து போகக்கூடும்.

இன்னும் எவ்வளவு நாட்கள் தான் கரையான் உங்கள் வீட்டில் வாடகை இன்றி வாழ்ந்திடுவான். உங்களுக்கு கோபமே வரவில்லையா என்ன? போதும், பாரி பரம்பரையின் கடைசி பேலன்ஸ் நீங்களாக வாழ்ந்தது. கரையானை அடியோடு அழித்திடுங்கள். அதன் மூலமாக, உங்கள் வீட்டிற்கான பேஸ்மெண்டை ஸ்ட்ராங்காக போடுங்கள் என்றுமே...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon