Link copied!
Sign in / Sign up
6
Shares

குழந்தைகளுக்கு பிடித்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி?

மாம்பழ சீசன் வந்தால் போதும்... ஒரு சில வீட்டில் மாங்காயில் என்னென்ன சமையல் செய்ய முடியுமோ., அத்தனையும் செய்து அசத்துவார்கள். மீன் குழம்புக்கு மேலும் சுவை சேர்ப்பது மாங்காய் தான். ஆம், அதேபோல் சாம்பார், புளிக்குழம்பு என அனைத்திலும் மாங்காயின் மணம் வீசாமல் இருப்பதே இல்லை. அதையும் தாண்டி மாங்காய் ஊறுகாய், மாங்காய் தொக்கு, வடு மாங்காய், மாங்காய் துவையல் என இன்னும் எத்தனையோ விதவிதமான சமையல் இருக்க, இன்று நாம் பார்க்க போவது குழந்தைகளுக்கு பிடித்த மாங்காய் பச்சடி செய்வது எப்படி என்பதை தான்...

தேவையான பொருட்கள்:

துருவிய மாங்காய் - ஒன்று 

வெல்லம் - 1/2 கப் 

ஏலக்காய் - 5 

கடுகு - 3/4 தேக்கரண்டி 

காய்ந்த மிளகாய் - 2 

நறுக்கிய பச்சை மிளகாய் - 2 

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை நேரம் - 20 நிமிடங்கள்

எத்தனை பேர் உண்ணலாம் - 3

செய்முறை:

1. வெல்லத்தையும், ஏலக்காயையும் பொடியாக்கிக் கொள்ளவும். 

2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து, தாளிக்கவும். 

3. அதன்பின் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 

4. கலவை கொதிக்க ஆரம்பித்ததும் துருவிய மாங்காய், உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வதக்கி கொள்ளவும். 

5. பின்னர் மாங்காய் வெந்தவுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து விடாமல் கலக்கவும். 

6. மாங்காயும், வெல்லமும் கலந்த பின்னர் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி 1 நிமிடம் வரை வைத்திருந்து இறக்கவும்.

7. அவ்வளவு தான் ருசியான மாங்காய் பச்சடி இதோ ரெடி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon