Link copied!
Sign in / Sign up
7
Shares

மனதை கவரும் மாம்பழ லட்டு செய்வது எப்படி?

முக்கனியில் முதன்மையானது மாம்பழம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. கர்ப்பிணிகளுக்கு மாம்பழ தாகம் எடுப்பது வழக்கம். எப்போதும் பழத்தை சாப்பிடுவதே ஒருவித எரிச்சலை தரலாம். அப்படி என்றால் இந்த மாம்பழ லட்டை நீங்கள் செய்து சாப்பிடலாமே. அத்துடன் கோடைக்கால வெயிலுக்கு குதூகலமாக அமைகிறது இந்த மாம்பழ லட்டு. பழங்களில் இராஜாவும் மாம்பழம் தான். அத்துடன் வெயில் காலத்தில் தாக வேட்கையை தீர்த்து உடம்புக்கு தெம்பை தருவதும் இந்த மாம்பழம் தான். சரி, வாருங்கள் மாம்பழ லட்டு எப்படி செய்வது என்பதை நாம் இப்போது பார்க்கலாம். 

எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:

மாம்பழ கூழ் - அரை கப்

பால் (சுண்ட காய்ச்சியது) - அரை கப்

தேங்காய் பவுடர் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்

செய்முறை:

1. மாம்பழ லட்டு செய்வதற்கு கனமான பாத்திரத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.

2. முதலில் தேங்காய் பவுடரை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

3. அத்துடன் மாம்பழ கூழை கலந்துக்கொள்ளுங்கள்.

4. அதன்பிறகு சுண்ட காய்ச்சிய பால், ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.

5. நன்றாக கெட்டியாகி பதமான நிலைக்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

6. அப்புறம் அந்த திண்ம மாவை உருண்டையாக பிடித்துக்கொள்ளுங்கள்.

7. பின்னர், பிடித்த உருண்டைகளை கொஞ்சமாக தேங்காய் பவுடரை தட்டில் கொட்டி உருட்டி எடுக்க வேண்டும்.

8. அவ்வளவு தான் சுவையான மாம்பழ லட்டு இதோ ரெடி.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon