Link copied!
Sign in / Sign up
1
Shares

மனதைத் தொட்ட 3 தத்தெடுப்புக் கதைகள்..!

நம்மில் பெரும்பாலானோர், நமக்கு என்று ஒரு குழந்தை இல்லையென்றால் தான், தத்தெடுப்பதைப் பற்றியே யோசிப்போம்; மேலும் நமக்கு என்று ஒரு பிரச்சனை நேராத வரை யாரை பற்றியும், எதைப்பற்றியும் கவலை கொள்ளாது நம் வாழ்க்கையை நகர்த்திச் செல்வோம்.. இப்படி சுயநலமே உருவாய் கொண்டு வாழும் மக்களிடையில், சில வினோத மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்… அவர்களைப் பற்றியே நாம் இந்த பதிப்பில், காணப் போகிறோம்..

1. சரோ பிரியர்லே - ஆஸ்திரேலியா/இந்தியா

இந்தியாவின் மத்திய பிரதேசத்தை, இம்மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சரோ எனும் சிறுவன், தன் 5 வயதில், அண்ணனைத் தேடிக்கொண்டு ரயில் நிலையம் வழியாக சென்று, எதிர்பாராத விதமாக வழி தவறி, இரயிலில் ஏறி கொல்கத்தாவை அடைந்து விட்டான். பின் கருணை உள்ளம் கொண்ட சிலர் அவனிடம், அவனைப்பற்றி விசாரிக்கையில் அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று புரிந்து கொண்டனர்; அவனால், தாய் மற்றும் ஊர் பெயரைக் கூட சரியாக கூற முடியவில்லை.

எனவே, போலீசாரின் துணையோடு, ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுவனை சேர்த்தனர்; சில நாட்களில், ஒரு ஆஸ்திரேலிய தம்பதியரால், அச்சிறுவன் தத்தெடுக்கப்பட்டான். பின் அவனுக்கு வசதியான வாழ்க்கை, நல்ல படிப்பு, அருமையான எதிர்காலம் கிடைத்தது. அவன் ஒரு பெரிய வியாபாரி ஆகிவிட்டான். தனது 25வது வயதில், தன் சொந்த குடும்பத்தை தேடும் முயற்சியில், இறங்கி கொல்கத்தா வரை கண்டுபிடித்துவிட்டான்; தொழில் நுட்பத்தின் உதவியுடன், மேலும் முயன்று அடுத்த 4 வருடத்தில், அவன் அம்மா, அண்ணன், சகோதரிகள் என அனைவரையும் சந்தித்துவிட்டான். வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது..! இல்லையா நண்பர்களே!!

2. சிறப்புக் குழந்தைகள்..!

பெனிசில்வேனியாவை சேர்ந்த ஆடம்-கரேன் தம்பதியர் தங்களுடைய 4 வயது சிறப்புக் குழந்தையை பறிகொடுக்க நேர்ந்தது. அக்குழந்தையின் இறப்புக்கு பின், மனம் உடைந்த அவர்கள், அவனைப்போலவே குறைகள் கொண்ட குழந்தையை தத்தெடுக்க விரும்பினர்; இதற்கு அவர்களின் மகளும் முழுமனதுடன் ஒப்புக்கொண்டாள். அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், அஞ்சேல் மற்றும் ஜேடன் எனும் இரண்டு சிறப்புக்குழந்தைகளை தத்தெடுத்து, பாசம் காட்டி, பரிவுடன் வளர்த்து வருகின்றனர், அக்குடும்பத்தினர். என்னே! ஒரு மனிதநேயம்..!

3. 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள்..

லாஸ் ஏஞ்செலில், வசித்து வந்த ஜெஸி ஹாஸ்மாயர் எனும் உடற்பயிற்சி ஆசிரியை, தன் வாழ்க்கைப்பயணத்தில், ஆதரவின்றி, வாழ்வில் தவித்துக் கொண்டு சாதிக்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளை காண நேர்ந்தது. அச்சமயம் அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற இச்சை அவள் மனதில் பிறந்தது.

ஆகையால், ஜெஸி மற்றும் அவள் கணவர், அவர்களின் 3 குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து, ஆதரவற்றோர்க்கு ஆதரவு அளித்து, அவர்கள் வாழ்வில் வெற்றியடைய உதவிக்கரம் நீட்டலாம் என்று தீர்மானம் கொண்டனர். அவர்களின் எண்ணப்படியே, தற்பொழுது 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து, பராமரித்து அவர்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றி வருகின்றனர், இந்த அற்புதா குடும்பத்தினர்..! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon