Link copied!
Sign in / Sign up
72
Shares

மனைவியின் வரித்தழும்பை பற்றி 7 கணவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள்!

வரித்தழும்புகள் என்பது அனைவரும் சமாளிக்க கூடிய ஒன்று. அவை முற்றிலும் இயற்கையானவையாக இருந்தாலும், பெரும்பாலான பெண்கள் இதை பாதுகாப்பற்ற ஆதாரமாகவும், இதனால் தங்கள் துணைவர்கள் கண்களில் அவர்களை கவர்ச்சியற்றவர்களாகவோ அல்லது வெறுக்கும் படியான அடையாளங்களாகவோ காண்பித்துவிடுமோ எனவும் கவலை கொள்கிறார்கள். இப்போது, பெண்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும், ஆனால் முக்கியமான கேள்வி: ஆண்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதுதான். எனவே, நாங்கள் சில கணவர்களை சந்தித்து, அவர்களின் மனைவியின் வரித்தழும்புகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டு, நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்ட கருத்துக்கள் உங்களுக்காக.

1 குணநலனே அதிக முக்கியத்துவம் பெறுகிறது

என் மனைவியின் வரித்தழும்புகள் என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவளது குணநலன்கள் என்னை மிகவும் கவர்வதால், அவளது வரித்தழும்புகள் என் கண்களுக்கு புலப்படவில்லை.

2 இது அவளை உண்மையாக்குகிறது

என் மனைவிக்கு வரித்தழும்புகள் வயிறு, கை மற்றும் கால் பகுதிகளில் காணப்படுகிறது. இது போல் சிலருக்கு கைகளில் காணப்பட்டிருக்கிறது. ஆனால் அவள் உடலில் காணப்படும் வரித்தழும்புகளுடன் அவள் அழகாகவே இருக்கிறாள். அவளது குறைகள் கூட என்னை நிறையாகவே உணர செய்கின்றன. அவள் எப்போதும் உண்மையுடம் இருக்கிறாள், பொய்யாக இல்லை என்பதை உணர்த்துகிறது.

3 அவள் ஒரு பெண்புலி

என் மனைவி, என் மகளுக்கும் அவளை போலவே வரித்தழும்புகள் உள்ளதை நினைத்து கவலையடைகிறாள். ஆனால் நான் அவற்றை நேசிக்கிறேன். அவர்கள் புலியினுடைய வரிகளை பெற்று பெண் புலிகளை போல் இருக்கிறார்கள்.

4 அவள் இப்போதும் அழகாக தான் இருக்கிறாள்

எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவள் வயிறு முழுவதும் வரித்தழும்புகள் உள்ளன. நான் என் மனைவியிடம் கூறினேன், நீ இப்போதும் அழகாக தான் இருக்கிறாய். நான் உன் வரித்தழும்புகள் குறித்து கவலை கொள்ளவில்லை என்று. அதுதான் உண்மையும் கூட.

5 அவள் எப்போதும் எனக்கு அழகுதான்

என் மனைவியின் உடல் எடை அதிகரித்துவிட்டது மற்றும் அவள் கர்ப்ப காலத்திற்கு பிறகு வரித்தழும்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அவள் எனக்கு, இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறாள் தெரியுமா? இப்போது நான் அவளை மிகவும் விரும்புகிறேன். அந்த உடல் என் குழந்தையை சுமந்திருக்கிறது. அவள் முன்பை விட இப்போது மிக அழகா இருப்பதை நான் காண முடிகிறது.

6 இது அவளது மிக அற்புதமான அம்சமாகும்

என் மனைவியின் உடலில் இருக்கும் வரித்தழும்புகள், எங்கள் அழகான குழந்தைகளால் ஏற்பட்டவை. எனவே அவற்றை நான் அவளது மிக அற்புதமான அம்சமாகவே கருதுகிறேன்.

7 நான் அவளை நேசித்தது அவளது குணநலனாலேயே தவிர உடல் அழகால் அல்ல

என் மனைவிக்கு வரித்தழும்புகள் உள்ளன. ஆனால் நான் அவற்றை பற்றி கவலை கொண்டதே இல்லை. அவள் வரித்தழும்புகளை நீக்க மிகவும் முயற்சிக்கிறாள். ஆனால் உண்மையில், நான் நேசித்தது அவளது குணநலனை பார்த்து தானே தவிர, அவளது உடல் அழகை பார்த்தல்ல.

இதே போல் உங்கள் கணவரும் நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களை நேசிப்பார்கள். கவலையை விட்டு மகிழ்வுடன் வாழுங்கள். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon