Link copied!
Sign in / Sign up
21
Shares

மனைவியை கோபப்படுத்தும் கணவரின் 4 செயல்கள்

திருமணமான ஆண்கள் அனைவரும் காதலித்து திருமணம் செய்த மனைவியாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து மணந்த அன்பு மனைவியாக இருந்தாலும் சரி அவர்களை அரக்கி, ராட்சசி, பேய் மற்றும் பிசாசு என்றெல்லாம் சொல்வார்கள். இதற்கு காரணம் மனைவிகள் எப்போதும் கணவர்களை திட்டிக் கொண்டே இருப்பதுதான். இது கணவர்கள் மனைவிகளை தவறாக எண்ணும்படி செய்துவிடுகிறது. மனைவிகள் அப்படி திட்டிக் கொண்டே இருப்பதும் கணவர்களின்  மீது இருக்கும் அதீத அன்பால் தான்.

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும். பாசம் யார் மீது வைத்துள்ளோமோ, அவரிடம் தானே உரிமையோடு கோபம் கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் முக்கியமாக மனைவிகள் எப்போதும் தேவையில்லாமல் கோபப்படமாட்டார்கள். அவர்கள் கோபப்படுகிறார்கள் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் எப்போதும் பிரச்சனையை உருவாக்கி கோபப்பட வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை. அவர்களுக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு நிச்சயம் கணவர்களது செயல்களால்தான் இருக்கும். மனைவியின் கோபத்தை அதிகரிக்கும் செயல்களை பார்க்கலாம்.

1 பண தேவை

ஆண்கள் அதிகமாக சம்பாதித்து நன்கு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. ஆனால் சாம்பாதித்தால் மட்டும் சந்தோஷம் கிடைக்காது. சந்தோஷம் வருவதற்கு வேலை செய்யும் நேரங்களில் வேலை செய்து, மற்ற நேரங்களில் மனைவியுடன், குடும்பத்தாருடன் நேரத்தை செலவழிக்க வேண்டும். அதைவிட்டு, அலுவலகங்களிலேயே செலவழித்தால் மனைவிக்கு கண்டிப்பாக கோபம் வர தான் செய்யும். அதிலும் எப்போதாவது வேலை இருந்தால், அதைப் புரிந்து கொண்டு மனைவி கோபப்படமாட்டாள். ஆனால் அளவுக்கு மீறி போனால், கண்டிப்பாக பத்திரகாளியாகத் தான் மாறுவாள்.

2 வெளியிடங்களுக்கு செல்லுதல்

வேலைக்கு செல்லாத மனைவியிடம் மாலை நேரத்தில் வெளியே செல்லலாம் என்று சொல்லிவிட்டு, செய்யவில்லை என்றால் கோபப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் நாள் முழுவதும் வீட்டிலேயே தான் இருக்கிறார்கள். அத்தகையவர்களை வாரத்திற்கு ஒரு நாள் தான் வெளியே அழைத்து செல்வதாக சொல்லியிருப்பீர்கள், அதைக்கூட சரியாக செய்யாமல் இருந்தால், கோபம் வருவது நியாயம் தானே. ஆனால் உண்மையில் அதிக வேலையின் காரணமாக களைப்பாக உள்ளது என்று அழைத்து செல்ல முடியவில்லை என்றால், அதைப் புரிந்து கொண்டு பேசாமல், அன்புடன் வீட்டிலேயே சந்தோஷமாக இருப்பார்கள். அதைவிட்டு பொய் கூறினால், நிச்சயம் அவர்களது கோபத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

3 செலவு

வேலைக்கு செல்லும் பெண்கள் என்றால், அவர்கள் எப்போதும் கணவர்களது சம்பளத்தை எதிர் பார்க்க மாட்டார்கள். ஆனால் வேலைக்கு செல்லாதவர்கள் என்றால் அவர்கள் குடும்பத்தை சரியாக நடத்துவதற்கு கணவரிடம் பணத்தை எதிர் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் எந்த ஒரு சிறு செலவிற்கும் அவர்கள் தன் கணவனை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை. சிலசமயங்களில் அவர்கள் தரமுடியாது என்று சொல்லி, பணம் கொடுப்பதற்கு மறுப்பார்கள். அதிலும் மனைவிகள் தேவையில்லாத செலவிற்கு கேட்டு கொடுக்காமல் இருந்தால் பேசாமல் இருப்பார்கள். ஆனால் முக்கியமான செலவிற்கு கேட்டு கொடுக்கவில்லையென்றால், அந்த நேரத்தில் வரும் கோபத்திற்கு அளவே இருக்காது.

4 கூட்டுக் குடும்பம்

கூட்டுக் குடும்பத்துடன் இருக்கும் போது, அதாவது மாமனார், மாமியாருடன் இருக்கும் போது, கணவர்கள் செய்யும் ரகளைக்கு அளவே இருக்காது. ஏனெனில் நாள் முழுவதும் மனைவியானவள் வீட்டு வேலை செய்து, பின் இரவில் படுக்கும் போது தன் கணவரிடம் அன்று நடந்ததை சொல்லி நியாயம் கேட்க வேண்டும் என்று இருக்கும் போது, கணவர்கள் மனைவியிடம் இருக்கும் நியாயத்தை பொருட்படுத்தாமல், அவர்களது அப்பா, அம்மாவிற்கே எப்போதும் சாதகமாக பேசினால், கோபம் வந்து பிபி எகிறும் அளவிற்கு பேசுவார்கள். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
100%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon